ISS அளவை விட பெரிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் சீனா.. முதல் கட்டுமான பனி முடிந்து பூமி திரும்பிய வீரர்கள்..

|

சீனாவின் புதிய விண்வெளி நிலையத்திற்கான முதல் குழுப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, மூன்று விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தை விட சுமார் 20% பெரிய அளவிலான விண்வெளி நிலையத்தைச் சீனா உருவாக்கி வருகிறது. இதற்கான முதல் கட்ட கட்டுமான பணிகள் சமீபத்தில் ISS இல் இருக்கும் தியான்ஹேவில் (Tianhe) நடைபெற்றது. இந்த பணிகளை மூன்று மாத காலம் முடித்துவிட்டு சீனாவின் விண்வெளி வீரர்கள் பூமி திரும்பியுள்ளனர்.

3 மாதங்களுக்கு பின்னர் பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

3 மாதங்களுக்கு பின்னர் பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்

நீ ஹைஷெங், லியு போமிங் மற்றும் டாங் ஹாங்போ ஆகிய மூன்று வீரர்களைக் கொண்டு சென்ற விண்கலம் செப்டம்பர் 17 அதிகாலை 1:34 மணிக்கு EDT நேரத்தின் படி பத்திரமாகப் பூமிக்கு வந்தது. சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய ஸ்பேஸ் பயணமாக இந்த பயணம் சாதனை படைத்துள்ளது. 3 மாதமாக விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பிறகு இப்போது இவர்கள் பூமிக்குத் திரும்பி உள்ளனர். விண்வெளியில் இவர்கள் என்ன வேலைகளைச் செய்தார்கள் என்றும், சீனாவின் விண்வெளி நிலையம் எப்படி உருவாகிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

ஷென்சோ 12 விண்கலம் எப்போது பூமியின் இருந்து கிளம்பியது?

ஷென்சோ 12 விண்கலம் எப்போது பூமியின் இருந்து கிளம்பியது?

ஷென்சோ 12 விண்கலம் ஜூன் 16 அன்று சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி ஏவப்பட்டது. ஏழு மணி நேரம் கழித்து பூமியைச் சுற்றும் சீனாவின் விண்வெளி நிலையத்தின் முக்கிய தொகுதியான தியான்ஹே வந்து சேர்ந்தது. நீயால் கட்டுப்படுத்தப்பட்ட ஷென்சோ 12 குழுவினர் 90 நாட்கள் தியான்ஹேயில் தங்கி இருந்து, புதிய விண்வெளி நிலையம் அமைக்கத் தேவையான கட்டுமான வேலைகளை மேற்கொண்டுள்ளனர். முந்தைய சீனக் குழுவினர் மேற்கொண்ட விண்வெளிப் பயணத்தை விட, இது சுமார் மூன்று மடங்கு நீண்ட பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?ஆழ்கடலில் விடப்பட்ட 3 இறந்த முதலையின் உடல்கள்.. மூச்சடைத்து போன விஞ்ஞானிகள்.. என்ன நடந்தது தெரியுமா?

சீன வீரர்கள் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தது இதுதான் முதல் முறையா?

சீன வீரர்கள் அதிக நாட்கள் விண்வெளியில் இருந்தது இதுதான் முதல் முறையா?

பூமியில் இருந்து சென்ற சீனா விண்வெளி வீரர்கள் தொடர்ச்சியாக மூன்று மாத காலம் விண்வெளி நிலையத்திலேயே தங்கியிருந்துள்ளனர். சீனா விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில், சீனா விண்வெளி வீரர்கள் அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்தது இதுவே முதல் முறையாகும். ஷென்சோ 12 பூமிக்குத் திரும்புவது பல கட்ட வேலையாகப் பிரிக்கப்பட்டுப் பல நாள் விவகாரமாக நிகழ்ந்துள்ளது என்று சீனா விண்வெளி பொறியியல் அலுவலகம் (CMSEO) கூறியுள்ளது.

ஷென்ஜோ 12 விண்வெளி வீரர்களுடன் தரையிறங்குவதற்கு முன்பு என்ன செய்தது தெரியுமா?

ஷென்ஜோ 12 விண்வெளி வீரர்களுடன் தரையிறங்குவதற்கு முன்பு என்ன செய்தது தெரியுமா?

சீனா விண்வெளி பொறியியல் அலுவலகம் (CMSEO) வெளியிட்ட அறிக்கையின்படி, விண்கலம் தியான்ஹேவில் இருந்து புதன்கிழமை, செப்டம்பர் 15 இரவு 8:56 மணிக்கு EDT பிரிந்தது. ஷென்சோ 12 பின்னர் தியான்ஹேவுடன் ஒரு சந்திப்பு சோதனையை மேற்கொண்டது. இது 1:38 அதிகாலை EDT வியாழக்கிழமை செப்டம்பர் 16 ஆம் தேதி முடிவடைந்தது. சுற்றுப்பாதையில் இருந்தபோது, ​​ஷென்ஜோ 12 விண்வெளி வீரர்கள் பூமியின் சில அற்புதமான புகைப்படங்களை எடுத்து பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொண்டனர்.

பள்ளி சிறுவர்கள் வங்கி கணக்கில் தெரியாமல் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.960 கோடி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?பள்ளி சிறுவர்கள் வங்கி கணக்கில் தெரியாமல் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.960 கோடி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

செப்டம்பர் 20 ஆம் தேதி தியான்ஹே நோக்கி செல்லும் Tianzhou 3

54 அடி நீளமுள்ள (16.6 மீட்டர்) தியான்ஹேவை முழுமையாகச் செயல்பாட்டில் வைக்கவும், எதிர்கால வருகைக்குத் தயாராக உதவும் வடிவமைக்கப்பட்ட இரண்டு விண்வெளி நடைபாதைகளையும் வீரர்கள் நிகழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது வரும் மாதங்களில் அடிக்கடி நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, சீனா ரோபோடிக் Tianzhou 3 சரக்கு விண்கலத்தைச் செப்டம்பர் 20 ஆம் தேதி தியான்ஹே நோக்கி அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த குழுப் பணி, ஆறு மாத காலம் அக்டோபர் நடுப்பகுதியில் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தை விட 20% பெரிய விண்வெளி நிலையம் அமைக்கும் சீனா

சர்வதேச விண்வெளி நிலையத்தை விட 20% பெரிய விண்வெளி நிலையம் அமைக்கும் சீனா

சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) போல சுமார் 20% பெரிய விண்வெளி நிலையத்தை உருவாக்கச் சீனா திட்டமிட்டுள்ளது. தியான்ஹாங் ("ஹெவன்லி பேலஸ்") என்ற மூன்று துண்டு விண்வெளி நிலையத்தை உருவாக்கி, அதை தியான்ஹேவுடன் இணைக்கும் சுற்றுப்பாதையில் மேலும் இரண்டு தொகுதிகளைத் தொடங்க சீனா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பாதை புறக்காவல் நிலையம் அடுத்த ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இறுதி நிலையை எட்டிவிட்டதா? காலாவதியாகிறதா?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இறுதி நிலையை எட்டிவிட்டதா? காலாவதியாகிறதா?

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகிவிடும் என்று சமீபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஆராய்ச்சி மையம் மொத்தமாக 2024 இல் ஓய்வு பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், 2031 ஆம் ஆண்டிற்கு பின்பும் டியாங்யாங் வேலை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

சரி செய்ய முடியாத கோளாறுகளை சந்திக்கும் ISS

சரி செய்ய முடியாத கோளாறுகளை சந்திக்கும் ISS

இதனால், இப்போது சீனாவின் டியாங்யாங் ஆராய்ச்சி மையம் மட்டுமே மிகப்பெரிய ஆராய்ச்சி மையமாக இருக்கும் என்று தெரிகிறது. சர்வதேச விண்வெளி நிலையம் எதனால் காலாவதியாகிறது என்று தெரிந்துகொள்ள இந்த பதிவைப் படியுங்கள்.சீனாவின் புதிய விண்வெளி நிலையத்திற்கான கட்டுமான பணிகளை மூன்று மாதங்கள் தங்கி இருந்து மேற்கொண்ட பின்னர், நேற்று ஷென்ஷோவ் 12 கேப்ஸ்யூல் மூலம் மூன்று வீரர்களும் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.

'சரிசெய்ய முடியாத' கோளாறுகளை எதிர்கொள்ளும் சர்வதேச விண்வெளி நிலையம்.. ரஷ்யா வெளியிட்ட எச்சரிக்கை..'சரிசெய்ய முடியாத' கோளாறுகளை எதிர்கொள்ளும் சர்வதேச விண்வெளி நிலையம்.. ரஷ்யா வெளியிட்ட எச்சரிக்கை..

மங்கோலியச் சுயாட்சி பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கிய வீரர்கள்

மங்கோலியச் சுயாட்சி பகுதியில் பாதுகாப்பாக தரையிறங்கிய வீரர்கள்

நேற்று இரவு 1 மணி அளவில் இந்த கேப்ஸ்யூல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து கழன்று பூமிக்குத் திரும்பி பாராசூட் உதவியுடன் சீனாவின் உட்பகுதியில் உள்ள மங்கோலியச் சுயாட்சி பகுதியில் பாதுகாப்பாகத் தரையிறங்கினர். மூன்று வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் என்று சீன விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி, பூமி, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய ஸ்மார்ட்போன்களின் சுவாரசியமான தகவல்கள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள்.

Best Mobiles in India

English summary
3 Chinese Astronauts Of Shenzhou 12 Crew Has Completed The Longest Spaceflight In Chinese History : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X