ஏ.சி வாயுவினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.!

  சென்னை: இருதினத்திற்கு முன்பு கோயம்பேடு, மேட்டுக்குப்பம் பகுதியியல் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 நபர்கள் மர்மமாக உயிர் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  டிவி, வாஷிங்மெஷின், ஏசி உட்பட அனைத்தும் பாதி விலையில் விற்பனை-பிளிப்கார்ட் அதிரடி.!

  வீட்டில் பயன்படுத்தப்பட்ட ஏ.சி இல் இருந்து கசிந்த விஷவாயு தான் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்கள் இறந்ததற்கு, கரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  உயிர் இழந்த மூவர்

  சென்னிற்குபம், பிச்சா கடையில் மேலாளராக வேலை பார்க்கும் சரவணன்(35) மற்றும் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வரும் அவரது மனைவி கலையரசி(30) மற்றும் தனியார் பள்ளியில் படிக்கும் அவர்களுடைய மகன் கார்த்திகேயன்(8) ஆகிய மூவரும் இச்சம்பவத்தில் உயிர் இழந்துள்ளனர்.

  ஏ.சி இன்வெர்ட்டர்

  செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்தினர் தூங்குவதற்கு முன்பு ஏ.சி-க்கான இன்வெர்ட்டர் சுவிட்ச்சை ஆன் இல் வைத்த படியே தூங்கி இருக்கின்றனர். அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்பட்டிருக்கிறது, அதிக மின்னழுத்தம் மற்றும் வோல்ட்ஜ் மாற்றத்தினால் இந்தச் சம்பவம் நடந்திருக்கும் என்று சந்தேகிக்க படுகிறது.

  மூச்சுத் திணறல்

  இந்தச் சம்பவம் நடக்க முக்கிய காரணமாக கூறப்படுவது, ஏ.சி யில் இருந்து கசிந்த விஷ வாயு என்பது தான். அதுமட்டுமில்லாமல் வீட்டின் அனைத்து ஜன்னல் மற்றும் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததினால் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூவரும் இறந்திருக்கு கூடும் என்று போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.

  ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு

  காலை 9 மணி அளவில் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொது மூவரும் அசைவின்றி கிடந்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழு வரவழைக்கப்பட்டது, ஆனால் மூவரும் உயிர் இழந்து பல மணி நேரம் ஆகிவிட்டதாக மறுத்தவர் தெரிவித்திருக்கிறார்.

  கீழ்பாக்க அரசு மருத்துவமனை

  ஏ.சி யில் இருந்து கசிந்த கார்பன் மோனோ ஆக்சைட்டினாள் தான் மூவருக்கும் மூச்சுத் திணறல் உடன் கூடி மூலை சாவு ஏற்பட்டுள்ளதாக கீழ்பாக்க மருத்துவக் கல்லூரி மருத்துவர், திருமதி. வசந்த ராணி தெரிவித்துள்ளார். குற்றவியல் நடைமுறை சட்டம் 174 இன் கீழ் வழக்குப் பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக மூவரின் உடலையும் கோயம்பேடு போலீசார் கீழ்பாக்க அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  அபிராமி முதல் தஷ்வந்த் வரை கொலை குற்றவாளியாக அம்பலமானது இப்படி தான்.!

  இன்று திரும்பும் இடங்கள் எல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தான் நடக்கின்றன. கொலை, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் ஈடுபடுகின்றனர் என்றால் தான் அதிர்ச்சியூட்டும் விசியமாக இருக்கின்றது.

  தெருக்களிலோ, இல்லை வீட்டிலோ நடக்கும் கொலை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களும் கண்டுபிடிக்க உதவிய தொழில் நுட்பம் சிசிடிவி கேமரா தான். சிசிடிவிகள் இல்லை என்றால் இன்று குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுவார்கள்.

  கொலையில் முடியும் குற்றங்கள் பெரும்பாலும் கள்ளக்காதல், வழிப்பறிகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த குற்றங்களுக்கு பாலின பாகுபாடு கிடையாது என்பது தான் இன்றைய நிலமை.

  குற்றங்கள் நடப்பதற்கு காரணம்:

  இன்று பெரும்பாலும் கூட்டுக் குடும்ப முறை குறைந்து, தனி குடும்ப முறை அதிகரித்தன் விளைவு தான். முன்பு எல்லாம் பெரியோர்களின் சொல்கேட்டு நடப்பார்கள். இன்று அப்படி இல்லை. தற்போது, பணம் என்னும் மாய வளையில் சிக்கியிருப்பதாலும், சமூக கவர்ச்சிகளும் தான் குற்றங்களுக்கு அடிப்படையாக நிற்கின்றன. இதில் இருந்து விழித்துக் கொள்ள வேண்டிய அவசியம் மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ளது.

  பறிபோகும் உயிர்கள்:

  ஒருதலை காதல், காதல், கள்ளக்காதல், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களால் சாதாரணமாக அரங்கேறுகின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் ஏதாவது இடையூறு ஏற்பட்டால், சமந்தப்பட்ட நபர்களை கொலை செய்து விடுகின்றனர். இந்த குற்றங்களை கண்டுபிடிக்க உதவிய சிசிடிவி கேமராவில் பதிவான குற்றவாளிகளின் சம்பவங்கள் குறித்தும் காணலாம்.

  ஸ்வாதி கொலை:

  சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி வெட்டி மென்பொறியாளர் ஸ்வாதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் செங்கோட்டை மீனாட்சிபுரத்தை சேர்ந்த பி.இ. பட்டதாரி ராம்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஸ்வாதியை கொலை செய்து விட்டு ரயில் நிலையம் அருகே தப்பியோடியதும். முன்னதாக ஸ்வாதியை கொலை செய்யும் முன் பின்தொடர்ந்ததும் சிசிடிவி கேமரா காட்சிளை வைத்தே இந்த வழக்கு நடந்து வநதது.

  சிறுமி கொலை:

  சென்னை மவுலி வாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த பாபு என்பவரின் மகள் ஹாசினி. வீட்டிற்கு வெளியே விளையாடிய போது மாயமானார். அப்போது, அதே குடியிருப்பில் வசித்த மென்பொறியாளர் தஷ்வந்த் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பிறகு, கொலை செய்துள்ளார். பிறகு, கை பையில் போட்டு வெளியே எடுத்து சென்ற போது, அங்கு பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதை வைத்து போலீசார் அவரை உறுதி செய்தனர்.

  வக்கீல் முருகன் கொலை:

  சென்னை சூளைமேடு ஆத்ரேயபுரத்தை சேர்ந்தவர் வக்கீல் முருகன் (44). கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

  அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை கள்ளக்காதலால் நடந்தது என்று தெரியவந்தது. இந்த கொலை வழக்கில் மனைவி லோககேஷினி (35), கள்ள காதலன் வியாசர்பாடியை சண்முகநாதன் உட்பட 6 பேர் குற்றவாளிகள் கைது ஆகினர்.

  சசிக்குமார் கொலை:

  கோவையில், கடந்த 2016ம் ஆண்டு இந்து முன்னணியை சேர்ந்த சசிக்குமார். கவுண்டம்பாளையம் பகுதியில் வெட்டி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். கவுண்டர்மில்ஸ் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.

  குழந்தைகளை கொன்ற அபிராமி:

  சென்னை குன்றத்தூர் அருகே மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). மனைவி அபிராமி (25). குழந்தைகள் அஜய் (7), கார்னிகா (4). பிரியாணி கடை ஊழியர் சுந்தரம். இவர்களுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

  கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த கணவன், மகன், மகள் ஆகியோரை கொல்ல பாலில் தூக்க மாத்திரை கலந்து ஆகஸ்ட் 30ம் தேதி இரவு கொடுத்தார். இதில் மகள் இறந்து போனார். விஜய் கண்விழித்து அலுவலகத்திற்கு சென்றுவிட்டார். தலையணியில் அமுக்கி மகனையும் கொலை செய்தார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது தான் விஜய்க்கு தெரிந்து. கள்ளக்காதலுக்காக மனைவி கொலை செய்து விட்டு தப்பியது.

  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் கோயம்பேடு பஸ்நிலையத்திற்கு ஸ்கூட்டியில் தப்பி சென்றதும். அங்கு முகத்தில் கட்டியிருந்த துப்பாட்டாவை விலக்கியதும். பிறகு நாகர்கோயில் பஸ்சில் ஏறியதும். உடனடியாக அங்கு சென்ற போலீசார் அபிராமியை மடக்கி பிடித்தனர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  3 of Chennai family die inhaling gas from AC at home : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more