Jio, Airtel-ஐ முடிச்சுவிட்ட BSNL.. ரூ.150, ரூ.250 போதும்.. 30 நாள் வேலிடிட்டி, வாய்ஸ், டேட்டா, SMS!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடாபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ஆனது எப்போது அடுத்த ரீசார்ஜ் விலை உயர்வை (Next Recharge Price Hike) அறிவிக்கும் சூழ்நிலை உருவாகும் என்று காத்து கொண்டிருக்கின்றன. ஆனாலும் கூட இந்திய அரசிற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல் - BSNL) ஆனது விலை உயர்வை பற்றி எதையுமே சட்டை செய்வதில்லை!
இன்னமும் இந்நிறுவனம் ரூ.150 - ரூ.300 பட்ஜெட்டின் கீழ் 30 நாட்கள் செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை (30 Days Validity Prepaid Plans Under Rs 300) கொண்டுள்ளது. இந்த பட்ஜெட்டின் கீழ் 3 ப்ரீபெய்ட் வவுச்சர்கள் உள்ளன; அவைகள் வெறும் ரூ.147 முதல் தொடங்குகின்றன. இந்த வவுச்சர்கள் - நுகர்வோரின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகின்றன.

உதாரணமாக, ரூ.147 வவுச்சர் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் (Unlimited Voice Calling) நன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, குறைவான டேட்டாவை வழங்குகிறது. மீதமுள்ள 2 திட்டங்கள் ஏராளமான டேட்டாவை (Heavy Data) விரும்பும் பயனர்களுக்கான 30 நாள் வேலிடிட்டி பிளான்களாக உள்ளன. ஒருவேளை உங்களிடம் "செக்கென்ட் சிம்" ஆக பிஎஸ்என்எல் இருந்தால்.. அல்லது ப்ரைமரி சிம் கார்ட்டே பிஎஸ்என்எல் தான், ஆனால் அதிக விலை உள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்ய விருப்பம் இல்லை என்றால்.. கீழ்வரும் 3 திட்டங்களும் உங்களுக்கானதாக இருக்கும்!
1. பிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 147 Prepaid Plan): ரூ.147 மதிப்புள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் வருகிறது. மேலும் 10ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. டேட்டா லிமிட் தீர்ந்ததும், அதாவது 10ஜிபி டேட்டா காலி ஆனதும் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
2. பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 247 Prepaid Plan): ரூ.247 மதிப்புள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் வருகிறது. மேலும் 50ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது; கூடவே தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் பயனரின் மெயின் அக்கவுண்டில் ரூ.10 டாக்டைம் சேர்க்கப்படும்.
3. பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 299 Prepaid Plan): ரூ.299 மதிப்புள்ள இந்த ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் வருகிறது. மேலும் டெய்லி 3ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது; கூடவே தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களையும் வழங்கும். டேட்டா லிமிட் தீர்ந்ததும், அதாவது டெய்லி 3ஜிபி டேட்டா காலி ஆனதும் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
இந்த மூன்று திட்டங்களும் இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. டெலிகாம்டாக்கின் கூற்றுப்படி, இந்த திட்டங்களின் நன்மைகள் ஆனது இன்றைய தொழில்துறை தரநிலைகளின்படி சரியான முறையில் விலை நிர்ணயம் (Priced as per the industry standards) செய்யப்பட்டுள்ளன.
அதாவது தனியார் டெலிகாம் ஆபரேட்டர்களின் கீழ் "இதே" வகையான நன்மைகளை வழங்கும் திட்டங்கள் அதிக விலை கொண்டவைகளாக உள்ளன. ஆனால் இந்த இடத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள், ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை போல திவேக நெட்வொர்க் சேவைகளை பயன்படுத்த முடியாது. நிச்சயம் இதுவொரு குறைதான். ஆனால் உங்கள் பகுதியில் நல்ல நெட்வொர்க் கிடைத்தால்.. மேற்கண்ட 3 திட்டங்களில் ஒன்றை கண்களை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








