அடேங்கப்பா.. குறைந்த விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் எக்கசக்க நன்மைகளை வழங்கும் 3 BSNL திட்டங்கள்.!
தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட குறைந்த விலையில் அதிக நன்மைகளைத் தரும் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்நிறுவனத்திடம் 4ஜி சேவை இல்லை என்பது தான் பெரிய குறை.
அதாவது இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் இதுவரை 4ஜி சேவையை வழங்கவில்லை. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் கூடிய விரைவில் 4ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பிஎஸ்ன்எல் நிறுவனம் குறைந்த விலையில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் அசத்தலான 3 திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் Lystn பாட்காஸ்டுக்கான அணுகல் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.184 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.185 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது பயனர்களுக்குத் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் தினசரி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக இருக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் அரீனா மொபைல் கேமிங் சேவை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வழக்கம் போல நிறுவனம் வழங்கும் தினசரி 1ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40kbps ஆக மாற்றப்படும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த பிஎஸ்என்எல் ரூ.186 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் BSNL ட்யூன்ஸ் மற்றும் ஹார்டி கேம்களுக்கான அணுகலை வழங்குகிறது. மேலும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்கும் சில அசத்தலான திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்குத் தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ், EROS now பொழுதுபோக்கு சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் என்டர்டெயின்மென்ட் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








