WhatsApp-க்கு புது அப்டேட்: ஒருவழியாக அந்த 3 பிரச்சனைகளும் ஒழிந்தது!

|

முதலில் "நம்ம மார்க் அண்ணாச்சி"க்கு ஒரு பெரிய நன்றியை கூறி விடுவோம்!

ஏனெனில் மெட்டாவின் (Meta) நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) ஆன மார்க் ஜுக்கர்பெர்க் தான் - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 அம்சங்களை அறிவித்து, மூன்று முக்கியமான "WhatsApp தொல்லைகளில்" இருந்து நமக்கு விடுதலை அளித்துள்ளார்!

அதென்ன அம்சங்கள்? அதனால் நமக்கு என்ன நன்மை? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

01. WhatsApp Group-களில் இருந்து சைலன்ட் ஆக Exit ஆகலாம்!

01. WhatsApp Group-களில் இருந்து சைலன்ட் ஆக Exit ஆகலாம்!

தற்போது வரையிலாக, நீங்கள் ஒரு வாட்ஸ்அப் க்ரூப்பில் இருந்து வெளியேறும் போது, அது குறித்த அறிவிப்பு க்ரூப்பில் உள்ள அனைவருக்கும் அணுக கிடைக்கும் அல்லவா? இனிமேல் அப்படி எதுவும் நடக்காது!

இனிமேல் நீங்கள் "அனைவருக்கும் தெரிவிக்காமல், தனிப்பட்ட முறையில்" ஒரு க்ரூப்பில் இருந்து வெளியேற முடியும். அப்படி நீங்கள் ​​வெளியேறும் போது, அது குறித்த நோட்டிஃபிக்கேஷன் முழு க்ரூப்பிற்கும் கிடைப்பதற்கு பதிலாக, அட்மின்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

இந்த அம்சம் இந்த மாதமே அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் வெளிவர தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!வாங்குனா இப்படி ஒரு TV-ஐ வாங்கணும்! இல்லனா Phone-லயே படம் பாத்துக்கணும்!

02. ஒருவழியாக Online-இல் இருப்பதை மறைக்கலாம்!

02. ஒருவழியாக Online-இல் இருப்பதை மறைக்கலாம்!

இதுவரையிலாக, நீங்கள் ஆன்லைனில் இருக்கும் போதெல்லாம் அது 'ஆன்லைன் ஸ்டேட்டஸ்' வழியாக அனைவருக்கும் காணக்கிடைக்கும் அல்லவா? இனிமேல் அப்படி இருக்காது!

அதாவது, இனிமேல் வாட்ஸ்அப்பில் உள்ள எல்லோராலும் உங்களின் ஆன்லைன் ஸ்டேட்டஸை பார்க்க முடியாது. வாட்ஸ்அப் அறிவித்துள்ள 'ஹைட் ஆன்லைன்' அம்சமானது, யாரெல்லாம் உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை பார்க்கலாம் என்கிற கட்டுப்பாட்டை உங்களுக்கு வழங்கும்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் ஆன்லைனில் இருப்பதை, குறிப்பிட்ட சில நபர்கள் அறிந்துகொள்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால், அவர்களிடம் இருந்து மட்டும் உங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கலாம்!

03. View Once மெசேஜ்களை Screenshot எடுக்க முடியாது!

03. View Once மெசேஜ்களை Screenshot எடுக்க முடியாது!

அறிமுகமான வேகத்தில் 'வியூ ஒன்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சமானது, வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கும் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகி விட்டது.

அறியாதோர்களுக்கு வியூ ஒன்ஸ் மெசேஜஸ் அம்சத்தின் கீழ் நீங்கள் அனுப்பும் டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ அல்லது வீடியோவை, பெறுநரால் ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால் இந்த அம்சத்தில் இருக்கும் ஒரு பெரிய குறை என்னவென்றால் 'வியூ ஒன்ஸ்' மெசேஜாக அனுப்பினாலும் கூட அதை ஸ்க்ரீன்-ஷாட் எடுக்க முடியும். அதை தடுக்கும் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ஐ தான் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது இந்த அம்சத்தை சோதித்து வருகிறது, விரைவில் அதன் பயனர்களுக்கு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"ரகசியத்தை" அம்பலப்படுத்திய Airtel அதிகாரி! அப்புறம் என்ன Jio ரீசார்ஜ் செஞ்சிடுங்க!

என்ன வேண்டும் என்று கேட்டு-கேட்டு அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்!

என்ன வேண்டும் என்று கேட்டு-கேட்டு அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்!

மேற்கண்ட 3 புதிய அம்சங்களும் நிறுவனத்தின் உலகளாவிய ஆய்வின் விளைவாகவே வெளிவந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் பயனர்களிடம் நடத்தும் ஆய்வின் வழியாக கிடைத்த புரிதல்களின் அடிப்படையிலேயே மேற்கண்ட அம்சங்கள் உருவாகி உள்ளன!

72% மக்கள் நேர்மையான, வெளிப்படையான வழியில் (வாட்ஸ்அப்பில்) பேசுவதை மதிக்கிறார்கள். ஆனால் 47% க்கும் அதிகமானோர் பாதுகாப்பான, தனிப்பட்ட முறையில் பேசுவதில் தான் "வசதியாக" உணர்கிறார்கள்!

குறிப்பாக அவர்கள் ஆன்லைனில் இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்கிறார்கள். இமெயில்கள் அல்லது சோஷியல் மீடியாக்களுடன் ஒப்பிடும்போது - அவர்களின் தனிப்பட்ட மெசேஜ்களில் அதிக ப்ரைவஸி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்!

யாருடன் பேச வேண்டும்? யாரை Block செய்ய வேண்டும்?

யாருடன் பேச வேண்டும்? யாரை Block செய்ய வேண்டும்?

வாட்ஸ்அப்பின் உலகளாவிய ஆய்வின் வழியாக, அதிக ப்ரைவஸி தேவைப்படும் நேரங்களில் 51% பேர் - தான் யாருடன் பேச வேண்டும் என்பதை தேர்வுசெய்ய - தங்கள் ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைத்து வைக்கவே விரும்புகிறார்கள்.

மேலும் 91% பேர் பிளாக் செய்யும் அம்சங்களை வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கும் மிகவும் முக்கியமான அம்சங்களாக கருதுகிறார்கள். இந்த பொது கருத்துக்களை பற்றியும், வாட்ஸ்அப்பிற்கு வரும் 3 புதிய அம்சங்களை பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

Best Mobiles in India

English summary
3 Big Privacy Features Added in WhatsApp Exit Group Silently Hide Online Block Screenshot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X