162 கிராமில் Titanium Alloy பில்ட், 200MP கேமரா, 2K டிஸ்பிளே, 12GB ரேம்.. Samsung-ன் புதிய ஸ்லிம் போன்!
இதுக்கு முன்னாடி அறிமுகமான கேலக்ஸி எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை எல்லாம் பார்த்து "அண்ணன் வரார் ஓரம்போ!" என்று கூறும்படியான அம்சங்களுடன் ஒரு புதிய கேலக்ஸி எஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Samsung Galaxy S25 Edge) ஸ்மார்ட்போன்.ஆகும். அறிமுகத்திற்கு முன்னதாக, ஒரு நம்பகமான டிப்ஸ்டர் (சீன மைக்ரோபிளாக்கிங் தளமான வெய்போ வழியாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ்) வழியாக சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பில்ட் மெட்டீரியல் மற்றும் டிஸ்பிளே பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ் யுனிவர்ஸ்-ன் கூற்றுப்படி சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் அலாய் மிடில் ஃபிரேமை (Titanium alloy middle frame) கொண்டிருக்கும். அதாவது இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Samsung Galaxy S25 Ultra) மாடலை போலவே இருக்கும் என்று அர்த்தம்.
இது உண்மையாகும் பட்சத்தில், எட்ஜ் மாடல் ஆனது கேலக்ஸி எஸ் சீரீஸில் டைட்டானியம் பாடியை கொண்ட இரண்டாவது ஸ்மார்ட்போனாக இருக்கும். மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது டைட்டானியம் ஐசிப்ளூ, டைட்டானியம் சில்வர் மற்றும் டைட்டானியம் ஜெட்பிளாக் ஆகிய 3 கலர்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் ஆனது 2கே ரெசல்யூஷன் வரும் என்றும் டிப்ஸ்டர் வெளிப்படுத்துகிறார். இது சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் மாடலில் காணப்படும் 3120 x 1440 பிக்சல்களை போலவே இருக்கும் என்றும், எஸ்25 மாடலில் உள்ள எப்எச்டி பிளஸ் ரெசல்யூஷனை விட அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.55 இன்ச் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 12ஜிபி ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள்
- 200MP ப்ரைமரி கேமரா
- 25W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 3,900mAh பேட்டரி யூனிட்
- 5.82மிமீ ஸ்லிம் மற்றும் 162 கிராம் லைட் வெயிட் டிசைன்
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 256ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,13,660 முதல் ரூ.1,23,132 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல 512ஜிபி ஆப்ஷன் தோராயமாக ரூ.1,23,132 முதல் ரூ.1,32,603 வரை என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனம் அதன் டபுள்யூடபுள்யூடிசி 2025 (WWDC 2025) நிகழ்வில் அதன் ஐபோன் 17 ஏர் () மாடலை காட்சிப்படுத்தலாம் அல்லது அதுகுறித்த அப்டேட்களை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் குறித்த அப்டேட்கள்.. இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான போட்டியை இன்னும் சூடாக்குகிறது என்றே கூறலாம்.
ஆப்பிளின் 2025 ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட்வைட் டெவெலப்பர்ஸ் கான்ஃபிரென்ஸ் (Worldwide Developers Conference 2025) நிகழ்வானது ஜூன் 9 ஆம் தேதி தொடங்கி ஜூன் 13 வரை நடைபெறும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. டபுள்யூடபுள்யூடிசி ஆனது "பாரம்பரியமாக" சாஃப்ட்வேர்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், ஆப்பிள் இந்த நிகழ்வை புதிய ஹார்ட்வேர்களை வெளியிடவும் பயன்படுத்தி வருகிறது. உதாரணமாக, டபுள்யூடபுள்யூடிசி 2023 இல், ஆப்பிள் நிறுவனம் அதன் மேக்புக் ஏர் (MacBook Air), மேக் ஸ்டூடியோ (Mac Studio) மற்றும் மேக் ப்ரோவிற்கான (Mac Pro) அப்டேட்களுடன் விஷன் ப்ரோ (Vision Pro) ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியது. எனவே ஐபோன் 17 ஏர் பற்றிய விவரங்கள் டபுள்யூடபுள்யூடிசி 2025 நிகழ்வில் பகிரப்பட்டால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.


Click it and Unblock the Notifications








