Home
News

தூக்கத்திலேயே உயிர் போயிருக்கும்! இளம்பெண்ணை கண்கலங்க வைத்த Apple வாட்ச்!

என்னதான், ஆப்பிள் (Apple) வாட்ச் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அதிலிருக்கும் அம்சங்களை சும்மானு சொல்லிவிட முடியாது. நள்ளிரவு நேரத்தில் நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டது தெரியாமல், தூக்கத்தில் இருந்த இளம்பெண்ணை, ஆப்பிள் வாட்ச் துரிதமாக காப்பாற்றியிருக்கிறது. இதுகுறித்த முழு விவரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

அண்மை காலமாக மக்களிடையே ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாட்ச்கள் வெறும் பந்தாவுக்காக மட்டும் தயாரிக்கப்படுவது கிடையாது என்பதே உண்மை. ஏனென்றால், ஒருவரது உடல்நலத்தை கண்காணிக்கும் பல்வேறு அம்சங்களுடன் ஸ்மார்ட்வாட்ச்கள் உருவாக்கப்படுகின்றன. இவற்றில் ஆப்பிள் வாட்ச்கள் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. அவ்வளவு ஹெல்த் மானிட்டர்கள் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.

தூக்கத்திலேயே உயிர் போயிருக்கும்! இளம்பெண்ணை கண்கலங்க வைத்த Apple

அதாவது, ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச்களில் பிளட் பிரஷர் மானிட்டர் (Blood Pressure Monitor), பாடி டெம்பரேச்சர் மானிட்டர் ( Body Temperature Monitor), ஹாட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), ஸ்டெப்ஸ் & காலோரிஸ் டிராக்கிங் (Step and Calorie Tracking), ஆக்சிஜன் லெவல் மானிட்டர் (Oxygen Level Monitor), ஸ்லீப்பிங் டைம் டிராக்கிங் (Sleeping Time Tracking), மென்ஸ்சுரல் டிராக்கர் (Menstrual Tracker) உள்ளிட்ட பல சென்சார்கள் உள்ளன.

இதன் மூலம் உங்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தை தொடர்ந்து கண்காணித்துக்கொள்ள முடியும். ஒருவேளை உங்கள் இதயத்துடிப்பின் அளவு குறைந்தாலோ, உடல் வெப்பநிலை அதிகரித்தாலோ, ரத்த ஓட்டம் சீராக இல்லையென்றாலோ உங்களுக்கு ஆப்பிள் வாட்ச் (Apple Watch) அலர்ட் செய்துவிடும். இதைவைத்து நீங்கள் மருத்துவரை அனுகிவிடலாம். இப்படிப்பட்ட அம்சங்கள் ஒருவரது உயிரையே காப்பாற்றும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அதுவும் தூக்கத்திலேயே உயிர் பிரிந்திருக்கும் சூழ்நிலையில், துரிதமாக ஆப்பிள் வாட்ச் காப்பாற்றியிருக்கிறது என்றால், அதற்கு ஆப்பிள் வாட்ச்சை பாராட்டாமல் இருக்க முடியாது. அமெரிக்காவின் சின்சினாட்டியில் வசிக்கும் கிம்மி வாட்கின்ஸ் என்னும் 29 வயது பெண், ஆப்பிள் வாட்ச் பயன்படுத்தி வருகிறார். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது.

அதிகப்படியான தலைவலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தன. வேலைப்பளு காரணமாக சரிவர சாப்பிடாததால், இப்படி இருக்கும் என்று எண்ணிய கிம்மி, நன்றாக தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று நேரமாக தூங்க சென்றுள்ளார். நள்ளிரவில் ஆப்பிள் வாட்ச் தொடர்ந்து அலர்ட் அலாரத்தை கொடுக்க தொடங்கியது. இதனால் தூக்கம் களைந்து போன கிம்மி, எழுத்து வாட்ச்சை பார்த்துள்ளார்.

அப்போது, அவரது இதயத்துடிப்பு கடந்த 10 நிமிடங்களாக அதிகமாக இருப்பதும், ஒரு நிமிடத்துக்கு 178 முறை துடிப்பதும் தெரியவந்துள்ளது. இதனால், பயந்துபோன கிம்மி, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டிருப்பதும், இது உயிருக்கே ஆபத்தானது என்பதையும் கண்டறிந்தனர்.

அதன்பின் உடனே அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இதுமாதிரி நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டால், அது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் மிகப்பெரும் தடையை ஏற்படுத்தும், மூச்சுவிட முடியாமல், உயிருக்கே ஆபத்து ஏற்பட 50 சதவீத வாய்ப்புள்ளது. நல்வாய்ப்பாக அவருக்கு ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்துள்ளது என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இப்போது, கிம்மி நலமாக உள்ளார். "ஆப்பிள் வாட்ச் எச்சரிக்காமல் போயிருந்தால், நான் அப்படியே தூங்கிக்கொண்டு இருந்திருப்பேன். எதிர்பாராதவிதமாக ஏதாவது, நடந்திருக்கவும் வாய்ப்புள்ளது. இப்போது, நான் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்கிறேன்" என்று கலங்கிய கண்களுடன் கிம்மி தெரிவித்தார். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
29-Year-Old Woman Life Saved By Apple Watch From Her Dangerous Blood Clot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X