அவசரமாக 28,000 மொபைல் நம்பர்களை பிளாக் செய்த போலீசார்! காரணத்தை சொன்னா நம்புவீங்களா?

|

தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றுதான் கூறவேண்டும். அதேசமயம் இந்த சைபர் குற்றங்களைத் தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் மற்றும் காவல் துறை

அரசாங்கம் மற்றும் காவல் துறை

அதாவது மோசடி செய்யும் சிலர், வங்கியில் இருந்து பேசுகிறோம் உங்களது மொபைல் நம்பருக்கு வந்த ஒடிபி பகிருங்கள் அல்லது ஆபர் கிடைத்துள்ளது உங்களது ஏடிஎம் கார்டு நம்பர் போன்றவற்றை கேட்டு மோசடி செய்வார்கள். இதுபோன்ற சைபர் குற்றங்களைத் தடுக்கவும், மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அரசாங்கம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்

ஹரியான காவல் துறை

இந்நிலையில் சைபர் குற்றச் செயல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சுமார் 28,000 மொபைல் நம்பர்களை கண்டறிந்துள்ளதாக ஹரியான காவல் துறையை சேர்ந்த அதிகரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சைபர்கிரைம் உதவி எண் 1930 மற்றும் சைபர் குற்றங்கள் பற்றி தகவல் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 27,824 மொபைல் போன் நம்பர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூடுதல் காவல் துறைத் தலைவர் ஒ பி சிங் தெரிவித்துள்ளார்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

 காவல் துறை

மேலும் இப்போது கண்டறியப்பட்ட மோசடி செய்யும் நம்பர்களின் சேவைகள் விரைவில் துண்டிக்கப்பட்டுவிடும் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இந்த நம்பர்கள் சைபர்சேப் போர்டலில் பதிவேற்றம் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

மத்திய உள்துறை அமைச்சகம்

மத்திய உள்துறை அமைச்சகம்

அதேபோல் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் இந்திய சைபர் கிரைம் மையம் சார்பில் இந்த பாதுகாப்பு தளம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக குருகிராமில் இருந்து 7,142, பரிதாபாத்தில் இருந்து 3,896, பஞ்ச்குலாவில் இருந்து 1420, ஹிசரில் இருந்து 1228, அம்பாலாவில் இருந்து 1,101, ரோடக்கில் இருந்து 1045, சோனிபட்டில் இருந்து 1408 மொபைல் நம்பர்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று ஒ பி சிங் தெரிவித்துள்ளார்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

செப்டம்பர் மாதம்

செப்டம்பர் மாதம்

அதேபோல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 1930 உதவி எண், 29 சைபர் காவல் நிலையங்கள், 309 சைபர் உதவி மையங்களில் இருந்து சுமார் 47000-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் பெறப்பட்டுள்ளன எனவும், இதுவரை ரூ.15 கோடிக்கும் அதிகமான பணத்தைக் காவல் துறை
மீட்டுள்ளது என ஒ பி சிங் தெரிவித்தார்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

இண்டர்நெட்

சைபர் தாக்குதல்களில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க உங்களது வங்கி சார்ந்த தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. இண்டர்நெட் பயன்படுத்தும் போதும் கூட மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இண்டர்நெட் வங்கி

அதாவது சீரான இடைவெளியில் உங்களது ஆன்லைன் கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றுவது நல்லது. மேலும் இண்டர்நெட் வங்கி சேவைகளுக்கான கடவுச்சொற்களையும் மாற்ற வேண்டும். முடிந்த வரை கடினமான கடவுச்சொல் தேர்வு செய்ய வேண்டும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
28000 mobile phone numbers blocked after being misused by cyber criminals: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X