PUBG Addiction: விளையாட்டால் உயிரிழந்த பூனே இளைஞர்! எப்படி தெரியுமா?

|

மிகவும் பிரபலமான பப்ஜி(PUBG) மொபைல் விளையாட்டு, அதன் மற்றொரு தீவிர ரசிகரின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது. துரதிர்ஷ்டவசமாக பப்ஜி விளையாட்டின் காரணமாக இதுபோன்ற சோகம் ஏற்படுவது இது முதல் முறை அல்ல.

மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்

மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்

இந்த சம்பவத்தில் 27 வயதான ஹர்ஷல் தேவிடாஸ் மேமனே என்ற இளைஞர், தனது ஸ்மார்ட்போனில் பப்ஜி விளையாடும்போது பக்கவாதம் மற்றும் இரண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். பூனேவின் ராவெட்டில் உள்ள ஓஜாஸ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி காலமானார்.

தாய்மாமா வீட்டில் வளர்க்கப்பட்டனர்

தாய்மாமா வீட்டில் வளர்க்கப்பட்டனர்

காவல்துறையினரின் விசாரணையில், ஹர்ஷல் தேவிதாஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பப்ஜி விளையாட்டுடில் தீவிரமாக இருந்துள்ளார் என தெரியவந்துள்ளது. குழந்தைப் பருவத்திலேயே விபத்தில் பெற்றோரை இழந்த ஹர்ஷல் மற்றும் அவரது மூத்த சகோதரர் அவினாஷ் இருவரும், புனேவின் ராவெட்டில் உள்ள அவர்களது தாய்மாமா வீட்டில் வளர்க்கப்பட்டனர்.

மிகவும் தாமதமாகவே உணர்ந்தார் ஹர்ஷல்

மிகவும் தாமதமாகவே உணர்ந்தார் ஹர்ஷல்

ஹர்ஷல் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த நிலையில், ஒரு வருடத்திற்கு முன்பு வேலையை விட்டு விலகி, மொபைலில் பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் கேம்களை விளையாடுவதில் பெரும்பாலும் நேரத்தை செலவிட்டு வந்தார். இது வெளிப்படையாக ஆரோக்கியமற்றதாக மாறிக்கொண்டிருந்ததை, மிகவும் தாமதமாகவே உணர்ந்தார் ஹர்ஷல்.

கோமா நிலையில்

கடந்த வெள்ளிக்கிழமை இரவு ​​ஹர்ஷல் தனது மொபைலில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த போது தரையில் மயங்கி விழுந்ததாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். கோமா நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகே அவரை உயிர்ப்பிக்க முடிந்தது. ஆனால் சனிக்கிழமை காலை மற்றொரு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் , ஹர்ஷல் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சாப்பிட மற்றும் தண்ணீர் குடிக்க கூட மறந்து விடுகிறார்கள்

சாப்பிட மற்றும் தண்ணீர் குடிக்க கூட மறந்து விடுகிறார்கள்

புனேவின் ராவெட்டில் உள்ள ஓஜாஸ் மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவர்கள், ஹர்ஷலின் மரணத்திற்கு பப்ஜிக்கு அடிமையாவதால் ஏற்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என கூறியுள்ள நிலையில், மற்ற மருத்துவர்களும் இதனை உறுதிபடுத்தியுள்ளனர்.

"மக்கள் தங்கள் விளையாட்டில் வெறித்தனமாக இருக்கும்போது சாப்பிட மற்றும் தண்ணீர் குடிக்க கூட மறந்து விடுகிறார்கள். இது நீரிழப்பு மற்றும் த்ரோம்போசிஸுக்கு வழிவகுத்து இறுதியில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. குறைவான திரவ உட்கொள்ளல் காரணமாக நோயாளிகள் அதிக ஹோமோசைஸ்டீன் அளவோடு எங்களிடம் வரும் ஒத்த நிகழ்வுகளை நாங்கள் கண்டிருக்கிறோம். இது மாரடைப்பைத் தூண்டும் என்று அறியப்படுகிறது "என்கிறார் பிஜே மருத்துவக் கல்லூரி மற்றும் சசூன் பொது மருத்துவமனைகளின் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவுத் தலைவர் டாக்டர் சஞ்சய் வோரா.

இதுவே முதல் முறை அல்ல

இதுவே முதல் முறை அல்ல

மொபைல் கேம்களுக்கு அடிமையாகி மக்கள் உயிர் இழப்பது இதுவே முதல் முறை அல்ல. கடந்த காலத்தில், பப்ஜி விளையாடிய ஒருவர் நிம்மதியாக விளையாட அனுமதிக்காத தனது தந்தையை கொன்றதுடன், பப்ஜி விளையாடுவதை தடுக்க முயன்ற 15 வயதான தனது சகோதரரைக் கொன்றதாக கூறப்படுகிறது.

தினமும் மில்லியன் கணக்கான மக்கள்

இந்தியா முழுவதும் தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பப்ஜி விளையாடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆயினும் இந்த வகையான சம்பவங்கள் மிகக் குறைவானவையாகும். எனவே விளையாட்டு என்பது தீமையானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால் அதன் போட்டித் தன்மை (மற்றும் அடிமையாதலின் சில கூறுகள் கூட), நிலையற்ற அல்லது ஏற்கனவே மனநிலை சரியில்லாதவர்களை வன்முறைக்கு தூண்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், இதுபோன்ற பிரச்சினைகள் சட்டமியற்றுபவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களாலும், தொழில்நுட்பத்துறை வல்லுநர்களாலும் மேலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

Best Mobiles in India

English summary
27-Year-Old Man Dies Playing PUBG In Pune, Doctors Blame Inactivity, Anxiety And Dehydration : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X