ஸ்டேன்போர்டு பல்கலையில் எம்பிஏ பட்டம் பெற்ற 26 வயது இஷா அம்பானி
இஷா அம்பானி ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் கிராடிவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பாடத்தில் எம்பிஏ படிப்பை முடித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் செல்ல மகள் இஷா அம்பானி அவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி நடந்தது. அவருடைய நிச்சயதார்த்தம் நடந்த முடிந்த ஒரே மாதத்தில் அவர் ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் கிராடிவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பாடத்தில் எம்பிஏ படிப்பை முடித்துள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களின் போர்டு மெம்பர்களில் ஒருவரான 26 வயது இஷா அம்பானி ஏற்கனவே யெல் பல்கலைக்கழகத்தில் சைக்காலஜி மற்றும் தெற்கு ஆசியா பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் 12வது சிறந்த தொழிலதிபர் இஷா:
கடந்த 2015ஆம் ஆண்டு போர்ப் நிறுவனத்தின் சர்வேயின்படி ஆசியாவின் பவர்புல் பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் 12 இடத்தை பிடித்தவர் என்பதும், தொழில்துறையில் அவரது பங்கு மிகப்பெரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் உலக பொருளாதார கூட்டம் ஒன்றில் அவர் மிகச்சிறந்த இளம் தொழிபதிபர் என்ற பெருமையையும் பெற்றார். மேலும் இஷா அம்பானி அவர்கள் மெக்கின்ஸி மற்றும் கம்பெனி நிறுவனத்துடன் ஒரு வர்த்தக ஆய்வாளராக பணிபுரிந்தார், மேலும் ஜியோ 4ஜி சேவைகளின் பணியாளரை அறிமுகப்படுத்தினார்.

இஷாவின் திருமண திட்டம்
இந்த நிலையில் கடந்த மாதம் அஜய் பிராமல் அவரகளின் மகனான ஆனந்த் பிராமல் அவர்களுடன் இஷா அம்பானிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நார்த் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல் பட்டதாரியான ஆனந்த், 4 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது குடும்பத்தின் கூட்டு நிறுவனமான பிரைமல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பணியாற்றுகிறார். பிரமிள் ஈஸ்வாஸ்தா மற்றும் பிராமல் ரியால்டி ஆகிய இரண்டு தொடக்கங்களையும் அவர் உருவாக்கியுள்ளார். இவர்களது மதிப்பு மிகுந்த திருமணம் வரும் டிசம்பரில் நடைபெறவுள்ளது.

டிசம்பர் மாதமும் அம்பானி குடும்பமும்
2018 டிசம்பர் மாதம் என்பது அம்பானி குடும்பத்தினர்களுக்கு ஒரு மறக்க முடியாத மாதமாக இருக்கும். இதே மாதத்தில் இஷா அம்பானியின் சகோதரர் ஆகாஷ், வைரவியாபாரி ருஷல் மேஹ்தா என்பவரின் மகள் ஷ்லோகா மேத்தா என்பவரை திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானி இண்டர்நேஷனல்
இருவரும் முமபியில் உள்ள திருபானி அம்பானி இண்டர்நேஷனல் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், இருவரும் பல ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜூன் 30ஆம் தேதி ஆகாஷ் மற்றும் ஷ்லோகா நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications