பாரத்நெட் திட்டத்தின் கீழ் இந்தாண்டிற்குள் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.!

பாரத்நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இணையவசதி வழங்கும் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்கூட்டியே தருகிறது தொலைத்தொடர்புத் துறை. இ

|

பாரத்நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராம பஞ்சாயத்துக்களுக்கும் இணையவசதி வழங்கும் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்கூட்டியே தருகிறது தொலைத்தொடர்புத் துறை. இந்தியாவின் ப்ராட்பிராண்ட் திட்டமான பாரத்நெட்-ன் கீழ் மார்ச்2019 க்குள் 2,50,000 கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆப்டிகல் பைபர் தருவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த டிசம்பருக்குள் பாரத்நெட் திட்டத்தை முடிக்க தொலைத்தொடர்புத் துறை விரும்புகிறது. அனைத்து அம்சங்களும் ஆலோசனைக்கப்பட்டு இந்த இலக்கை அடைவோம் என்கிறார் தொலைத்தொடர்புத் துறையின் உயரதிகாரி.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.!

ஆனால் இந்த திட்டத்தை முழுவதும் அறிந்த இன்னொரு உயரதிகாரி கூறுகையில், அடுத்தாண்டு வரும் மக்களவை பொதுத்தேர்தலுக்கு முன்பே பாரத்நெட் திட்டத்தை முடிக்கவே இலக்கு தேதியை முன்கூட்டியே மாற்றுகின்றனர் என்கிறார்.

மத்திய அரசு ஏற்கனவே 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் ஆப்டிகல் கேபிள்களை பதித்துவிட்டது. மீதமுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கும் அதிவேக ப்ராட்பேண்ட் நெட்வொர்க்கிற்காக மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ31,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.!


இந்த திட்டத்தின் நோக்கமே ஊரகப் பகுதிகளில் இணையவசதியில் உள்ள இடைவெளியை குறைத்து பொது நிறுவனங்களான பள்ளிகள், தபால் நிலையங்கள், காவல்நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு இணைய சேவை வழங்குவதே ஆகும்.

நேசனல் ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் ப்ராஜெக்ட், பாரத்நெட் என்ற பெயரில் 2011ல் துவங்கி முன்னதாக 2013ல் முடிக்க திட்டமிடப்பட்டது. பின்னர் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ2 அரசால் செப்டம்பர்2015 என நீட்டிக்கப்பட்டது. பின்னர் அமைந்த தே.மு.கூ அரசால் முன்னதாக டிசம்பர்2016 என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பின்னர் மார்ச்2019 என மாற்றப்பட்டது.

இந்த பாரத்நெட் திட்டத்தின் நோக்கமே, அரசால் கூறப்பட்ட 2022ற்குள் அனைவருக்கும் 50mbps என்ற வேகத்தில் இணையவசதி என்ற இலக்கை அடைவது தான்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)

பாரத்நெட் திட்டத்தின் கீழ் இணையவசதி பெறும் 2,50,000 கிராமங்கள்.!


"தேசிய மின்னணு தொலைத்தொடர்புக் கொள்கை 2018"-ல் கூறப்பட்டுள்ள படி, 50% வீடுகளுக்கு நிலையான ப்ராட்பேண்ட் வசதியும், லேண்ட்லைனை மாற்றும் சேவையும் வழங்க அரசு திட்டமிடுகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் 50mbps வேகத்திலும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் 1Gbps வேகத்திலும் ப்ராட்பேண்ட் வசதியை 2020ற்குள் வழங்கவும், அதை 10Gbps ஆக 2022ற்குள் உயர்த்தவும் அந்த கொள்கை மேலும் பரிந்துரைக்கிறது.

Best Mobiles in India

English summary
250,000 Gram Panchayats to Get Broadband Connectivity Under BharatNet by December 2018; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X