2ஜி தொழில்நுட்பத்திலிருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும்.! முகேஷ் அம்பானி.!

|

ஜியோ நிறுவனம் அன்மையில் பல சாதனைகளை படைத்துவிட்டது என்றுதான் கூறவேண்டும். இந்நலையில் இந்தியாவை முழுமையான டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்றும், 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின்
தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

தலைவர் முகேஷ் அம்பானி

அதன்படி இந்திய அலைபேசி தொலைதொடர்பு அமைப்பின் 25-வது ஆண்டுவிழாவையொட்டி, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி
வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த வீடியோ இப்போது அதிகமாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு

மேலும் வீடீயோவில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார் முகேஷ் அம்பானி, அதில் உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தில் கால்பதித்து இருக்கும் இந்த சூழலில், இந்தியாவில் 30கோடி மக்கள், 2ஜி செல்போன்களை பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

பிஎஸ்என்எல் சுதந்திர தின ஸ்பெஷல்: ரூ.147 திட்டத்தில் இனி மொத்தமும் இருக்கு., எல்லாம் எக்ஸ்டரா!பிஎஸ்என்எல் சுதந்திர தின ஸ்பெஷல்: ரூ.147 திட்டத்தில் இனி மொத்தமும் இருக்கு., எல்லாம் எக்ஸ்டரா!

எனவே அவர்களுக்கு முழுமையான டிஜிட்டல் புரட்சி சென்று சேரவில்லை எனவும், விரைவில் 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து அனைத்து
இந்தியர்களையும் அடுத்தக்கட்ட ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதுதான்
பிரமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முழுமையடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 4ஜி இணைப்பு மற்றும்

அன்மையில் Jio phone 5 4ஜி இணைப்பு மற்றும் சமூகவலைதள பயன்பாடு ஆதரவு என அட்டகாச அம்சங்களோடு ரூ.500-க்கு குறைவான விலையில் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விரைவில் ஜியோபோன் 5யை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து 91 மொபைல்கள் என்ற இணையதள அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜியோ போன் அடுத்த அறிமுகமாக ஜியோ 5 அறிமுகப்படுத்த வேலை பார்த்து வருகிறது.

 ஜியோபோன் சிறப்பம்சங்கள்

அந்த அறிக்கையில் ஜியோபோன் சிறப்பம்சங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஜியோபோனின் லைட் மதிப்பாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜியோபோன் 5 பக்கா மலிவு விலையில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜியோ போன் 5 விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அதன்விலை ரூ.500-க்கும் குறைவாக அதாவது ரூ.399 விலையில் அறிமுகம் செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இதைவிட கம்மி விலை மொபைல்போனே இல்லை என்பதாகும்.

ட்ஸ் ஆப், போ

ஜியோ போன் 5 மொபைல்போனில் ஆதரிக்கும் சிறப்பம்சங்கள் குறித்த வெளியான தகவலை பார்க்கலாம். அதில் 4ஜி எல்டிஇ ஆதரவு, Kaios மூலம் இயக்கப்படும், வாட்ஸ் ஆப், போஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதள பயன்பாடுகள் இருக்கும். அதோடு வாடிக்கையாளர்கள் ஜியோபோனை போன்றே வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
25 Years of Mobile Phones: Mukesh Ambani Underlines Need to Upgrade All 2G Users in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X