Home
News

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.13999 பட்ஜெட்ட OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 12GB ரேம்.. 30W சார்ஜிங்.. எந்த மாடல்?

பிரீமியம் குவாலிட்டியில் மிட்-ரேஞ்ச் லெவல் பீச்சர்களை கொண்ட மொபைல் பட்ஜெட்டில் வேண்டுமானால், பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) அடிமட்ட விலைக்கு வந்திருக்கும் மோட்டோரோலா ஜி64 5ஜி (Motorola G64 5G) போனை ஆர்டர் செய்து கொள்ளலாம். ஏனென்றால், 12 ஜிபி ரேம், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, 30W ஃபாஸ்ட் சார்ஜிங், 6000mAh பேட்டரி போன்ற பட்ஜெட்டைவிட கூடுதலான பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த மோட்டோ போனின் முழு பீச்சர்கள் எப்படி? விலை மற்றும் டிஸ்கவுண்ட் எவ்வளவு?

இந்த போன் அறிமுகமான போது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆகவும் இருந்தது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் 12 ஜிபி மாடலானது, ரூ.2000 விலை குறைந்து ரூ.14,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும், பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.13999 பட்ஜெட்ட OIS கேமரா.. 6000mAh பேட்டரி!

எச்டிஎம்ஐ கிரெடிட் கார்டு மூலம் ஆர்டர் செய்தால், ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கும். அதுவே ஈஎம்ஐ மூலம் வாங்கினால், ரூ.1250 டிஸ்கவுண்ட் கிடைக்கும். ஆகவே, இந்த மோட்டோரோலா போனை வெறும் ரூ.13,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். கேமரா, பேட்டரி, ரேம் போன்ற பீச்சர்களில் பின்னியெடுத்துள்ள இந்த போனின் முழு பீச்சர்களை பார்க்கலாம்.

மோட்டோரோலா ஜி64 5ஜி அம்சங்கள் (Motorola G64 5G Specifications): இந்த மோட்டோவில் மின்ட் கிரீன் (Mint Green), பேர்ல் ப்ளூ (Pearl Blue), ஐஸ் லைலாக் (Ice Lilac) ஆகிய கலர்கள் வருகின்றன. பிரீமியம் பீச்சர்களுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) பேக் செய்யப்பட்டுள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்டிருக்கிறது.

இந்த கேமராவில் குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology), ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி (Optical Image Stabilization Technology) மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் வருகிறது. கேமரா பீச்சர்களை பார்க்கையில், நைட் விஷன் (Night Vision), மேக்ரோ விஷன் (Macro Vision) மற்றும் ஹைபர்லேப்ஸ் (Hyperlapse) போன்றவை வருகின்றன.

இந்த மோட்டோரோலா ஜி64 5ஜி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ஷூட்டரில் அல்ட்ரா பிக்சல் டெக்னாலஜி (Ultra Pixel Technology) மற்றும் ஆட்டோ ஸ்மைல் கேப்ச்சர் (Auto Smile Capture) பீச்சர் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சனுடன் 6.5 இன்ச் (2400 × 1080 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது.

இருப்பினும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட் சப்போர்ட் உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7025 6nm) சிப்செட் உள்ளது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. மேலும், மை யுஎக்ஸ் (My UX) உள்ளது.

இந்த மோட்டோரோலாவில் 30W டர்போ சார்ஜிங் (Turbo Charging) மற்றும் டைப்-சி போர்ட் (Type-C Port) கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. IP52 டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மோட்டோ போன்களில் வழக்கமாக கிடைக்கும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. மேலும், 1 டிபிக்கான எஸ்டி கார்டு பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 Percent Discounts on Motorola G64 5G With 12GB RAM in Flipkart Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X