Home
News

அந்த மாதிரி வீடியோக்களுக்கு ஆப்பு.. ULLU, ALTT உட்பட 25 OTT தளங்கள் மீது தடை.. இந்திய அரசு அதிரடி நடவடிக்கை!

இந்தியா முழுவதும் 25 ஓடிடி ஆப்கள் மற்றும் வலைத்தளங்களுக்கான பொது அணுகலை தடுக்குமாறு (Block public access) இணைய சேவை வழங்குநர்களுக்கு (Internet Service Providers) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (Ministry of Information and Broadcasting) உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆபாசமான மற்றும் பார்னோகிராஃபிக் மெட்டீரியல் (Pornographic material) ஆனது ஆன்லைனில் பரவுவதை தடுக்கும் நோக்கத்தின் கீழ் கன்டென்ட் விதி மீறல்கள் (Content Law Violations) காரணமாக உள்ளு (ULLU), பிக் ஷாட்ஸ் ஆப் (Big Shots App), ஆல்ட் (ALTT) மற்றும் டெஸிபிளிக்ஸ் (Desiflix) உள்ளிட்ட பிரபலமான தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

ULLU, ALTT உட்பட 25 OTT தளங்கள் மீது தடை!

ஸ்டோர்போர்ட்18-ன் (Storyboard18) சமீபத்திய அறிக்கையின்படி, தடை செய்யப்பட்டுள்ள தளங்கள் ஆனது ஆட்சேபனைக்குரிய விளம்பரங்களையும், ஆபாச கன்டென்ட்டையும் காண்பிப்பதை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இது பல இந்திய சட்டங்களை மீறுகிறது. இந்திய புவியியலுக்குள் இந்த ஆப்கள் மற்றும் வலைத்தளங்களுக்கான அணுகலை கட்டுப்படுத்த இணைய சேவை வழங்குநர்களை கட்டாயப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட ஓடிடி ஆப்களின் பட்டியல்:
உள்ளு (ULLU)
ஆல்ட் (ALTT)
பிக் ஷாட்ஸ் ஆப் (Big Shots App)
ஜல்வா ஆப் (Jalva App)
வாவ் என்டர்டெயின்மென்ட் (Wow Entertainment)
லுக் என்டர்டெயின்மென்ட் (Look Entertainment)

ஹிட் ப்ரைம் (Hitprime)
ஃபினியோ (Feneo)
ஷோஎக்ஸ் (ShowX)
சோல் டாக்கீஸ் (Sol Talkies)
கங்கன் ஆப் (Kangan App)

புல் அப் (Bull App)
அட்டா டிவி (Adda TV)
ஹட்எக்ஸ் விஐபி (HotX VIP)
டெஸிபிலிக்ஸ் (Desiflix)
பூமெக்ஸ் (Boomex)
நவராசா லைட் (Navarasa Lite)

குலாப் ஆப் (Gulab App)
புகி (Fugi)
மொஜிபிளிக்ஸ் (Mojflix)
ஹல்சல் ஆப் (Hulchul App)
மூட்எக்ஸ் (MoodX)
நியான்எக்ஸ் விஐபி (NeonX VIP)
ட்ரைபிலிக்ஸ் (Triflicks)

மேற்கண்ட ஓடிடி ஆப்கள் ஆனது - தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000 இன் பிரிவு 67 மற்றும் 67ஏ, பாரதிய நியாய சன்ஹிதா, 2023 இன் பிரிவு 294 மற்றும் பெண்களை ஆபாசமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) சட்டம், 1986 இன் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட சட்டங்களானது பாலியல் ரீதியாக வெளிப்படையான கன்டென்ட்டை வெளியிடுவதையும் பரப்புவதையும் தடைசெய்கின்றன. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(பி) ஐயும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இதன்கீழ் - சட்டவிரோத கன்டென்ட்டிற்கான அணுகலை அகற்றவோ அல்லது முடக்கவோ தவறினால் தளங்கள் மற்றும் ஐஎஸ்பி-க்கள் போன்ற இடைத்தரகர்கள் அவர்களுடைய சேஃப் ஹார்பர் ப்ரொடெக்ஷனை இழக்க நேரிடும்.

இந்த நடவடிக்கை, ஆபாச கன்டென்ட் தொடர்பான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இன்னும் வலுவூட்டுகிறது. டிஜிட்டல் தளங்கள் இந்திய சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்கிறது. அநாகரீகமான அல்லது தீங்கு விளைவிக்கும் எந்தவொரு கன்டென்ட்டையும், குறிப்பாக சிறார்களுக்கும் பாதிக்கப்படக்கூடிய பார்வையாளர்களுக்கும், ஏற்கனவே தளத்தை அணுகக்கூடியவர்களுக்கும் விளம்பரப்படுத்துவதில்லை என்பதை உறுதி செய்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
25 OTT Platforms Including Ullu ALTT Banned by Indian Govt For Violating Content Laws Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X