பயனர்களை சட்டப் பிரச்சனையில் சிக்க வைத்த பேஸ்புக் பதிவுகள்.!

  பேஸ்புக்கில் எதையும் மற்றும் அனைத்தையும் கூறும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என நினைக்கிறீர்கள் சரியா? ஆனால் அது தவறு. முகநூல் பயனர்களை சட்டப் பிரச்சனையில் வசமாக சிக்க வைத்த 25 பதிவுகளை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. எனவே உங்கள் முகநூல் பக்கத்தில் என்ன பதிவு செய்கிறீர்கள் என தெரிந்து, இந்த 25 பதிவுகளை போல சிக்கலில் மாட்டி விடாது என உறுதி செய்ய பின்பு பதிவிடுங்கள்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  25) பாங்கு உடன் குழந்தை

  பாங்கு மூலம் புகைப்பிடிக்கும் தனது குழந்தையின் படத்தை முகநூலில் பதிவிட்ட 19 வயது தாய் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டாக இந்த படத்தை எடுத்ததாக அவர் கூறினாலும், போதை மருந்து வழக்கை சந்தித்துவருகிறார்.

  24) பேஸ்புக் போக் விதிமீறல்

  செனான் ஜேக்சன் என்பவர், அவருக்கு எதிரான பாதுகாப்பு உத்தரவு விதிகளை மீறியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நகரத்தில் உள்ள ஒரு பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது என இவருக்கு விதிமுறை விதிக்கப்பட்ட போது, இவர் அந்த பெண்ணை பேஸ்புக்கில் போக் செய்தார் என புகார் செய்ததால் கைதானார்.

  23) போலீசுக்கு துப்பு கொடுத்த பேஸ்புக் மெசேஜ்

  மே14 அன்று 9 வயது குழந்தையின் உடல் திறந்தவெளியில் கண்டெடுக்கப்படுகிறது. அக்குழந்தையின் தந்தை மற்றும் அவரின் காதலியை ஒரு பேஸ்புக் மெசேஜின் அடிப்படையில் போலீஸ் கைது செய்கிறது. அந்த மெசேஜில் அவர்கள், குழந்தை சுயநினைவின்றி குளியல் அறையில் இருந்ததாக கதை கட்ட முடிவு செய்திருந்தனர்.

  22) லெபனீஸ் அதிபரை குறிவைத்த முகநூல் பக்கம்

  லெபனீஸ் அதிபர் மிசெல் சலிமென்-ஐ விமர்சித்த முகநூல் பக்கத்தை உருவாக்கிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் அவதூறு விதிகளுக்கு எதிராக, பேச்சுரிமைக்கும் அப்பாற்பட்டு அந்த பக்கம் ' எங்களுக்கு போலியான அதிபர் வேண்டாம்' என பதிவிட்டிருந்தது.

  21)30 ஆண் நண்பர்களை ப்ளாக்மெயில் செய்த பேஸ்புக் செக்ஸ் மோசடி

  பேஸ்புக்கில் பெண் போல நடித்து, 30க்கும் மேற்பட்ட வகுப்பு தோழர்களின் ஆபாச படங்களை பெற்று, அதை வைத்து ப்ளாக்மெயில் செய்தவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

  20) உடும்பு கறி சாப்பிட்டவர்கள் கைது

  அமெரிக்காவை சேர்ந்த ஒரு ஜோடி, அரிய விலங்கான உடும்பை பிடித்து, சமைத்து சாப்பிட்ட புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டனர். அரிய உயிரினமான இதை கொன்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

  19)மகனின் முகநூல் பக்கத்தில் அத்துமீறிய தாய்

  மகனின் முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதுக்காக தாய் தண்டிக்கப்பட்டுள்ளார். தவறுதலாக பல்வேறு பதிவுகளை போட்டிருந்தாலும், "குழந்தை பெற்றது தான் என் மிகப்பெரிய தவறு" என்ற பதிவிற்காக 435டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

  18)போலி பேஸ்புக் கணக்கால் ஜெயில்

  மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்நாட்டு அரசரின் சகோதாரர் என போலி முகநூல் கணக்கு துவங்கியதுக்காக கைது செய்து 3 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  17) பேஸ்புக்கில் போலீஸை இகழ்ந்தவர் கைது

  லண்டனை சேர்ந்த ஒருவர் கொள்ளையடித்து கைதாகி சிறையிலிருந்து தப்பிவிட்டார். பின்னர் பேஸ்புக்கில் போலீஸை கிண்டல் செய்து படங்களை பதிவிட்டார். அவருக்கு 40,000 பேஸ்புக் நண்பர்கள் இருந்தபோதும், அதனாலேயே மீண்டும் போலீசில் மாட்டிக்கொண்டார்.

  16) கடையில் திருடியவர்களை காட்டிக்கொடுத்த பேஸ்புக் போட்டோ

  பேஸ்புக் மூலம் தனது கடையில் துணிகளை திருடிய மாணவர்களை கண்டறிந்து,போலீஸால் கைது செய்ய வைத்துள்ளார் ஆடை வடிவமைப்பாளர்.

  15) கொலையாளி திருடனை கண்டுபிடிக்க உதவிய பேஸ்புக்

  3 தொடர் கொள்ளைகளில் 9 பேரை கொன்றதாக கருதப்பட்ட சந்தேக நபரை பேஸ்புக் துணையுடன் கைது செய்துள்ளது பிலிப்பினோ போலிஸ். அந்நபரின் பேஸ்புக் போட்டோக்களை சாட்சிகளிடம் காண்பித்து உறுதிசெய்த பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

  14) தப்பியோடிய மோசடியாளர் பிடிபட்டார்

  வங்கி மோசடியில் தேடப்பட்ட ஒருவர், கைதிலிருந்து தப்ப மெக்சிகோவிற்கு தப்பிச்சென்றார். எனினும் பேஸ்புக்கில் அவர் 'சொர்கத்தில் வாழ்கிறேன்' என பதிவிட்டதை பார்த்த அவரின் நண்பரான நீதித்துறை அதிகாரி, போலீஸ்க்கு உதவி கைது செய்யவைத்தார்.

  13) பேஸ்புக் சாட் மூலம் பிடிபட்ட 'ஸ்கேர் பேஸ்'

  பேஸ்புக் செயல்பாடுகளின் மூலம் போலீஸிடம் சிக்கியுள்ளார் 'ஸ்கேர் பேஸ்' என்ற நபர். தொடர்ந்து பேஸ்புக் பயன்படுத்தி வந்த அவரின் இணைய சிக்னல்களை கண்காணித்து கைது செய்துள்ளது போலீஸ்.

  12) ஜெயிலுக்கு அனுப்பிய பேஸ்புக் ரொமான்டிக் ஸ்குரில்

  பேஸ்புக்கில் தனது 'ரொமான்டிக் ரிவெல்' ஒருவரை அவமானப்படுத்தியதாக ஒரு நபருக்கு 75நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் குண்டாக இருப்பதை சுட்டிக்காட்டி, நாய் பன்றி என அவதூறாக பேசியதற்கு இந்த தண்டனை.

  11) பேஸ்புக் போட்டோவால் மாட்டிக்கொண்ட சரக்கடித்த மைனர் பையன்

  19வயது நபர் ஒருவர், யாரென்று தெரியாத பெண் ஒருவரின் முகநூல் நட்பை ஏற்றுக்கொண்ட சில காலத்தில், கையில் பீர் உடன் இருக்கும் தனது புகைப்படத்தை வைத்திருக்கும் போலீஸிடம் மாட்டிக்கொண்டார். காரணம் மைனர் வயதில் சரக்கடித்த குற்றச்சாட்டு.

  10) பேஸ்புக்கில் மகளிடம் ஆபாசமாக பேசிய தந்தை

  13வயது மகளிடம் பேஸ்புக்கில் ஆபாசமாக பேசிய 39வயது தந்தையைப் பற்றி ,தாயிடம் மகள் கூறியதால் அந்த தந்தை போலீஸிடம் பிடிபட்டார்.

  9) கேங்க் அரெஸ்ட் செய்ய உதவிய பேஸ்புக்

  பணக்காரர்களிடம் இருந்து கொள்ளையடித்து போதை பழக்கத்திற்கு பயன்படுத்திய இளைஞர்கள் மற்றும் பெண்கள் குழுவை, அவர்களின் பேஸ்புக் க்ரூப் உறுப்பினர் ப்ரொபைலை வைத்து கைது செய்துள்ளது போலீஸ்.

  8) காணாமல் போன குழந்தையை 15 ஆண்டுகள் கழித்து மீட்ட தாய்

  15 ஆண்டுகள் கழித்து பேஸ்புக் மூலம் காணாமல் போன தனது குழந்தைகளுடன் இணைந்துள்ளார் ஒரு தாய். அவரின் கணவர், குழந்தைகளை கூட்டிச் சென்றுவிட்டார். பேஸ்புக் மூலம் அவர்களை கண்டறிந்த அந்த பெண் உடனே போலீஸ்க்கு தகவல் அளித்து அவர் கணவரை கைது செய்ய வைத்தார்.

  7) பேஸ்புக்கில் தாக்குதலை கிண்டல் செய்தவர் கைது

  4 இளைஞர்கள் இருந்த காரை தாக்கியது மட்டுமில்லாமல், அதை பேஸ்புக்கில் கிண்டலும் செய்துள்ளார் ஒரு நபர். அந்த இளைஞர்களின் பெற்றோர் நீதிபதியிடம் முறையிட்டு பதிவை நீக்கச் சொல்ல, அதை மறுத்து 2 நாட்கள் சிறை சென்றுள்ளார்.

  6) முடிந்தால் என்னை பிடி

  தேடப்படக்கூடிய குற்றவாளியான ஒருவர், பேஸ்புக் பதிவில் " முடிந்தால் பிடி! நான் ப்ரூக்ளினில் உள்ளேன்' என கூறியுள்ளார். உடனடியாக போலீஸ் அவரை கைது செய்துள்ளது.

  5)கிரிமினல் குற்றம்

  போலீஸ் வாகனத்தின் மீது படுத்து, அந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட ஒரு நபர் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

  4) குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய முட்டாள்

  பேஸ்புக் பதிவில் தான் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக பதிவிட்டுள்ள ஒருவர் தண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால் பேஸ்புக் பதிவு மட்டுமே குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதுக்கு ஆதாரம் கிடையாது.

  3)கிண்டல் பேஸ்புக் கமெண்ட்

  " தான் ஒரு கிண்டர்கார்டனை சூட் செய்து இரத்த மழை பார்ப்பதாகவும்,அங்கு துடித்த இதயத்தை சாப்பிட்டதாகவும்' பதிவிட்ட நபரை கைது செய்துள்ளது போலீஸ்.

  2) காணாமல் போன குழந்தைகள் பற்றி தவறான ஜோக்

  காணாமல் போன குழந்தைகள் பற்றி பேஸ்புக்கில் தவறான ஜோக்களை கமெண்ட் செய்த நபருக்கு 3 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

  1)கலவரத்தை தூண்டியதற்கு 4 ஆண்டு சிறை

  பேஸ்புக்கை பயன்படுத்தி இங்கிலாந்தில் கலவரத்தை தூண்ட முயன்ற இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 'நார்த்விச் நகரை அழிப்போம்' என்ற நிகழ்வை பேஸ்புக்கில் உருவாக்கினர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  25 Dumb Facebook Posts That Got People In Trouble With The Law : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more