ஆபத்தில் பொதுத்துறை வங்கிகளின் 25% ஏடிஎம்கள்.!

அரசு, தனியார் துறை வங்கிகள் அல்லது நிறுவனங்கள் நிர்வகிக்கும் ஏடிஎம்கள் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.

|

பொதுத்துறை வங்கிகளின் 25% தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் மோசடி தாக்குதல்களால் பாதிக்கப்பட தயாராக இருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஏனெனில் நாட்டிலுள்ள 74% ஏடிஎம்களின் மென்பொருட்கள் புதிய மேம்படுத்திய பதிப்புகள் இல்லாமல் காலாவாதியாகி விட்டன என குறிப்பிட்டுள்ளது.

ஆபத்தில் பொதுத்துறை வங்கிகளின் 25% ஏடிஎம்கள்.!

பாரளுமன்றத்தில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு பொதுத்துறை வங்கிகள் பற்றி கூறிய பதிலில், ஏடிஎம் இயங்க உதவும் மென்பொருள்கள் காலாவதியாகி விட்டன அல்லது 'பராமரிப்பு உதவி'(Unsupported) இல்லாமல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த ஏடிஎம்கள் மோசடி பாதிப்புகளுக்கு உள்ளாகவும், அடிப்படை பாதுகாப்பு அம்ச குறைபாடுகள் உள்ளதாகவும் உள்ளன.ஆனாலும் அரசு, தனியார் துறை வங்கிகள் அல்லது நிறுவனங்கள் நிர்வகிக்கும் ஏடிஎம்கள் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை.

நாட்டிலுள்ள பெரும்பாலான தானியங்கி பணம்எடுக்கும் இயந்திரங்கள் பொதுத்துறை வங்கிகளால் இயக்கப்படும் நிலையில், பாரளுமன்றத்தில் அரசு கூறிய தகவலின்படி ஏறக்குறைய 89% ஏடிஎம்கள் இந்த பிரிவை சார்ந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தனியார்த்துறை வங்கிகள் வளர்ந்துவரும் நிலையில், இன்னமும் பொதுத்துறை வங்கிகள் சுமார் 70% கடன் மற்றும் வைப்புநிதி வர்த்தகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

ஆபத்தில் பொதுத்துறை வங்கிகளின் 25% ஏடிஎம்கள்.!

சமீபத்திய மாதங்களில், ஏடிஎம் சம்பந்தப்பட்ட மோசடிகள் பற்றிய புகார் தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துவரும் நிலையில், கடந்த மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய ஆலோசனையில், உடனடியாக அனைத்து மென்பொருட்களை மேம்படுத்தவும், ஏடிஎம் குறைபாடுகளை நெருக்கமாக கண்காணிக்கவும் வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.ஆனாலும் ஒழுங்குமுறை ஆணையத்தால் விதிக்கப்பட்ட சில காலக்கெடுவிற்குள் அவற்றை முடிக்க விருப்பமில்லை என வங்கிகள் தெரிவித்துள்ளன.
ஆபத்தில் பொதுத்துறை வங்கிகளின் 25% ஏடிஎம்கள்.!

பாரளுமன்றத்தில் அரசு சமர்பித்த தரவுகளின் படி ஜூலை2017 மற்றும் ஜூன்2018 இடையேயான காலக்கட்டத்தில் வங்கிகளுக்கான தலைமை கண்காணிப்பு ஆணையத்திற்கு, டெபிட் மற்றும் கிரிடிட் கார்டு சம்பந்தப்பட்ட சுமார் 25,000 புகார் வந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் நடைபெற்ற மொத்த பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை சுமார் 861 கோடி எனவும், இதன்மூலம் நடைபெற்ற மோசடிகளின் அளவு ஒப்பீட்டளவில் மிகக்குறைவு என்பதையே குறிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
25% ATMs of public sector banks may be vulnerable to fraud: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X