Home
News

மூன்று நொடிகளில் 25,000 லெனோவோ ஏ6000 விற்று தீர்ந்தன

By Meganathan

லெனோவோ நிறுவனத்தின் பட்ஜெட் போனான ஏ6000 இன்று மதியம் 2 மணியளவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வந்தது. அடுத்த 25 நிமிடங்களில் லெனோவோ சார்பில் வெளியான ட்வீட் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மூன்று நொடிகளில் 25,000 லெனோவோ ஏ6000 விற்று தீர்ந்தன

லெனோவோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட ட்வீட்டில் லெனோவோ ஏ6000 ஸ்மார்ட்போன் விற்பனை முடிந்து விட்டது, அடுத்த கட்ட விற்பனைக்கு முன்பதிவு செய்ய இங்கு செல்லவும் என ப்ளிப்கார்ட் லின்க் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.

மூன்று நொடிகளில் 25,000 லெனோவோ ஏ6000 விற்று தீர்ந்தன

இன்றைய விற்பனையில் மொத்தம் 25,000 ஸ்மார்ட்போன்கள் நொடிகளில் விற்று தீர்ந்தன. ஏற்கனவே இந்நிறுவனம் நடத்திய ப்ளாஷ் விற்பனைக்கும் அனேக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இன்றோடு சேர்த்தால் லெனோவோ நிறுவனம் மொத்தமாக ஐந்து ப்ளாஷ் விற்பனையை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லெனோவோ A6000, 5 இன்ச் ஐபிஎஸ் எஹ்டி டிஸ்ப்ளே, 64-பிட் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் மற்றும் 1 ஜிபி ராம் கொண்டுள்ளதோடு 8 ஜிபி இன்டெர்னல் மெமரியும் கொண்டுள்ளது.

மூன்று நொடிகளில் 25,000 லெனோவோ ஏ6000 விற்று தீர்ந்தன

ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்கும் லெனோவோவின் Vibe UI 2.0 இன்டர்பேஸ் மற்றும் 8 எம்பி ப்ரைமரி கேமரா, ஆட்டோபோகஸ் எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. டூயல்சிம் கண்ட இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி மற்றும் ப்ளூடூத் 4.0 மற்றும் 3ஜியும் உள்ளதோடு 2300 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
25,000 Lenovo A6000 sold out in 3 seconds. Lenovo's budget offering A6000 was up for sale today at 2pm. According to the company's official Indian Twitter account "the sale went out in a flash."
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X