24 காரட் தங்கத்தில் ஐபோன் 8: முன்பதிவுகள் தொடங்கியது

By Siva
|

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் 8 செப்டம்பர் 12ஆம் தேதி வெளிவந்து அனைத்து தரப்பினர்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. $999 வழங்கப்படும் இந்த புதிய மாடலில் OLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இந்த போன் மிக அதிக விலையுள்ள போன்களில் பட்டியலிலும் இணைந்துள்ளது

24 காரட் தங்கத்தில் ஐபோன் 8: முன்பதிவுகள் தொடங்கியது

ஆப்பிள் ஐபோனின் ரசிகர்கள் எப்போதுமே விலையை பற்றி கவலைப்படாதவர்கள். அவர்களுக்காக இன்னுமொரு சிறப்பு மாடல் பெருமைக்குரிய வகையில் தயாராகிறது. அதுதான் தங்கத்தால் ஆன ஐபோன் 8. இந்த மாடலுக்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 24 காரட் தங்கம், பிளாட்டினர், ரோஸ் தங்கம் மற்றும் வைரங்களுடன் கூடிய ஐபோன் 8 மாடல் ஆர்டரின் பேரில் தயாராகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த ஐபோன் மாடல்களின் விலை என்ன என்று சரியாக தெரியாவிட்டாலும் சுமாராக $20,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த வகை சிறப்பு ஐபோன்களை ஆர்டர் செய்பவர்கள் ஆர்டரின் போதே 50% முன்பணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

துபாயை தலைமையிடமாக கொண்டு இந்த தங்கத்தால் ஆன ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வகை சிறப்பு போன்களில் ஸ்வாரொவ்ஸ்கி என்ற சிறப்பு உலோகங்கள் கலந்து பயன்படுத்தப்படுகிறது.

சியாமி நிறுவனத்தின் 5வது இந்திய கிளை எங்கே தெரியுமா?சியாமி நிறுவனத்தின் 5வது இந்திய கிளை எங்கே தெரியுமா?

இதில் ஆப்பிள் லோகோவும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை வாடிக்கையாளர்கள் இந்த கோட்டிங்கை விரும்பாவிட்டால் அந்த உலோகத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக 18 காரட் தங்கப்பூச்சை செய்து தரவும் நிறுவனம் தயாராக உள்ளது

உலகின் மிக உயர்ந்த ஐபோன்களை விற்க வேண்டும் என்ற பெருமையை இந்த போன் பூர்த்தி செய்துள்ளது. இந்த போன் பல்வேறு வடிவங்கள், நிறங்களில் கிடைக்கும் என ஆப்பிள் தனது இணையதளத்தில் கூறியுள்ளது.

மேலும் இந்த இணையதளத்தின் மூலம் ஐபோன் 8, ஐபோன் 7எஸ், ஐபோன் 7எஸ் பிளஸ் ஆகிய மாடல்களையும் செப்டம்பர் 15க்குள் முன்பதிவும், செப்டம்பர் 22ஆம் தேதி டெலிவரியும் பெற்று கொள்ளலாம்

Best Mobiles in India

Read more about:
English summary
The expensive variants of iPhone 8 customized by Goldgenie are already up for pre-order on the company’s website.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X