வானிலிருந்து வந்து 244000 ஆண்டுகள் பூமியை ஆண்ட 8 மன்னர்கள்..!
கடந்த காலங்களில் எப்படி நமது பூமி ஆச்சர்யமளிக்கும் வகையில் 241,000 ஆண்டுகளுக்கு 8 மர்மமான அரசர்களால் ஆட்சிபுரியப்பட்டது என இதில் விளக்கப்பட்டுள்ளது.
இன்று வரை உலகத்தில் பெரும் மர்மம் நிறைந்த பகுதியாகவே மெசபடோமியா இருக்கின்றது. அங்கு ஏராளமான வினோதங்களும் நிறைந்துள்ளதாவே இருக்கின்றது. இன்று வரை பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் முகாமிட்டு வருகின்றனர்.

அங்கு புதையல் போல பல்வேறு கதைகளும் கொட்டி கிடக்கின்றது. உலகத்தின் கண்களும் அதன் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்றன. அங்கு ஆட்சி செய்த மன்னர்கள் எங்கு இருந்து வந்தார்கள், எப்படி வந்தார்கள், எப்படி எல்லாம் ஆட்சி செய்தார்கள் என்று அதிர வைக்கும் வகையில் தற்போது, தகவல்கள் வெளியாகியுள்ளன.

பழங்கால மெசபடோமியா:
கடந்த பல ஆண்டுகளாக பழங்கால மெசபடோமியாவை சுற்றியுள்ள ஏராளமான பகுதிகளை ஆராய்ந்த அறிஞர்கள், சுமேரியன் அரசர்களின் பட்டியல் என கூறப்படும் ஒற்றை கல்வெட்டு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.

8 மர்ம மன்னர்களின் ஆட்சி:
கடந்த காலங்களில் எப்படி நமது பூமி ஆச்சர்யமளிக்கும் வகையில் 241,000 ஆண்டுகளுக்கு 8 மர்மமான அரசர்களால் ஆட்சிபுரியப்பட்டது என இதில் விளக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் இந்த ஆட்சியாளர்கள் "சொர்கத்திலிருந்து இறங்கி வந்தவர்கள்" எனவும் கூறப்பட்டுள்ளது.
சுமேரிய அரசர்களின் பட்டியல்:
நம்மில் பெரும்பாலானோர் நம்ப முடியாத அளவிற்கு ஆச்சர்யமளிக்கும் கதையை இது கூறுகின்றது. பழங்கால சுமேரிய அரசர்களின் பட்டியல் என அறியப்படும் இந்த கல்வெட்டில், எப்படி கடந்த காலத்தில் நமது உலகம் ஆச்சர்யமளிக்கும் வகையில் 241,000 ஆண்டுகளுக்கு 8 மர்மமான அரசர்களால் ஆட்சிபுரியப்பட்டது என விவரிக்கப்பட்டுள்ளது.

மன்னர்களின் ஆட்சி:
"சொர்கத்தில் இருந்து இராஜ்யம் இறங்கி வந்த பின்னர், அது எரிடியூக்-ல் இருந்தது. அங்கு அலுலிம் அரசனாகி 28,800 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். பின்னர் அலல்ஜர் 36,000 ஆண்டுகள் அரசராக இருந்தார். மற்ற 2 அரசர்கள் 64,800 ஆண்டுகள் ஆண்டனர்."

5 நகரங்களில் 8 அரசர்கள்:
அவர்கள் 241200 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர்.பின்னர் வெள்ளம் பரவியது" இவ்வாறாக சுமேரிய அரசர்கள் பட்டியலின் முதல் பகுதியில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் 8 அரசர்கள் 241000 ஆண்டுகளுக்கு பூமியை ஆள்வது எப்படி சாத்தியம்? இதற்கான விடை எளிமையானது என நம்புகின்றனர் அறிஞர்கள்.

புராண வம்ச ஆட்சி ஒருங்கிணைப்பு:
இந்த பட்டியல் வரலாற்றுக்கு முந்தைய மற்றும் "புராண" வம்ச ஆட்சியாளர்களை ஒருங்கிணைக்கிறது. அவை வரலாற்று ரீதியாக மிகவும் நம்பத்தகுந்த வம்சத்தாரோடு ஒப்பிட முடியாதவை.
அந்த சுமேரிய அரசர்களின் பட்டியலில் கூறப்பட்டுள்ள சில விசயங்கள் சரியானவை எனகூறும் அறிஞர்கள், மற்றவை அனைத்தும் அசாத்தியமானவை என்கின்றனர்.

நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னர்கள்:
மேலும் இந்த சுமேரிய அரசர் பட்டியல், எவ்வளவு காலம் இந்த அரசர்கள் பூமியை ஆண்டார்கள் என்பதை மட்டும் கூறாமல், குறிப்பாக இந்த 8 அரசர்களும் சொர்கத்தில் இருந்து இறங்கிவந்து ஆச்சர்யமளிக்கும் வகையில் நீண்ட காலம் ஆட்சிபுரிந்தனர் எனவும் குறிப்பிடுகிறது.

முடிவுக்கு வந்துள்ளது:
இதில் அதிசயம் என்னவெனில், எப்படி இந்த 8 அரசர்களின் ஆட்சி பூமியையே சுருட்டிப்போட்ட பெரும்வெள்ளத்தால் முடிவுக்கு வந்தது எனவும் இதில் விவரிக்கப்பட்டுள்ளது.

பழங்கால எழுத்துக்கள்:
இந்ந பழங்கால எழுத்துக்கள் 241000 ஆண்டுகள் ஆண்ட பழங்கால விண்வெளிவீரர்களின் ஆதாரமா? அல்லது அறிஞர்கள் கூறுவது போல இப்பட்டியல் வரலாற்று ஆவணங்களின் ஒரு கலவையா? என்று இன்று வரை பல்வேறு கேள்விகளை எழும்பி வருகின்றது.


Click it and Unblock the Notifications