6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. அசத்தலான சாம்சங் 5ஜி போனுக்கு விலைகுறைப்பு.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் பிளிப்கார்ட் தளத்தில் பிரபலமான சாம்சங் 5ஜி போனுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அதாவது தற்போது சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி (SAMSUNG Galaxy F14 5G) ஸ்மார்ட்போனுக்கு தான் பிளிப்கார்ட் தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 24 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,990-விலையில் வாங்க முடியும்.

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.
6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். குறிப்பாக ஃபுல் எச்டி டிஸ்பிளே இந்த போனில் இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.
எக்ஸிநோஸ் 1330 (Exynos 1330) சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் சிறந்த செயல்திறன் வழங்கும். மேலும் OneUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
50எம்பி பிரைமரி கேமரா சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் 5ஜி போன். எனவே இந்த போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய போன். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

6000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், யுஎஸ்எபி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 205 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பர்பிள், கிரீன், பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications