Home
News

டிக்டாக் மோகம்: நீரில் அடித்து செல்லப்பட்ட இளைஞர் உயிரழப்பு: வீடியோ.!

டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு, சுமார் 75 மொழிகளில் பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. சீன நிறுவனமான இந்த டிக் டாக் செயலியை இதுவரை சுமார் 50 கோடிக்கும் அதிகமானோர்பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வின் படி சென்ற ஆண்டில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆப் டிக் டாக் ஆப் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் செயலி

டிக் டாக் செயலி

பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லூரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்தியாவில் டிக் டாக் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான வழியில் செல்லுவதற்கு வழிவகுக்கிறது என்றும், தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

தெலுங்கான மாநிலம்-தினேஷ்

தெலுங்கான மாநிலம்-தினேஷ்

இந்நிலையில் தெலுங்கான மாநிலம், நிஜாமாபாத் பீம்கல் மண்டலம் கோனூகொப்புலா கிராமத்து பகுதியை சேர்ந்ததினேஷ்(22) மற்றும் அவருடைய நண்பர்களான கங்காஜலம், மனோஜ் ஆகியோருடன் அருகிலுள்ள கப்பலவாகு
தடுப்பணைப் பகுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை சென்றார்.

 மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்

மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்

தடுப்பணை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டும் குளித்துக்கொண்டிருந்த நண்பர்கள் உடனே ஸ்மார்ட்போன் மூலம் டிக்டாக் செயலிலிய்ல வீடியோ பதிவு செய்தனர். அப்போது தடுப்பணையில் தீடிரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

கிராம மக்கள்

கிராம மக்கள்

பின்பு இதை கவனதித்த கரையோரத்தில் இருந்த கிராம மக்கள் போராடி கங்காஜலம், மனோஜ் ஆகியோரை உடனேமீட்டனர். இருந்தபோதிலும் தினேஷ் மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார்.

அழுகிய நிலையில் மீட்கப்பட்டது

அழுகிய நிலையில் மீட்கப்பட்டது

மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தினேஷைதேடும் பணியில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு நாட்காளாகதினேஷை தேடி வந்த நிலையில் அன்று அவருடையஉடல் அழுகிய நிலையில்மீட்கப்பட்டது.

டிக் டாக் வீடியோ

மேலும் தினேஷ் குடும்பத்தினர் அவரை பார்த்து அழுது புலம்பினர்,இதைதொடர்ந்து போலீசார் நடத்திய முதல் விசாரணையில் டிக் டாக் வீடியோ மோகத்தால் வாலிபர் தடுப்பணையில் அடித்துச் செல்லப்பட்டது இன்றுதெரியவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
23-year-old man died while making tik tok video: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X