ரூ.169 கோடி மதிப்புள்ள கழிப்பறை: விண்வெளிக்கு அனுப்பி வைத்த நாசா- பயன்பாடு இப்படிதான்!

|

169 கோடி ரூபாய் மதிப்புள்ள கழிப்பறையை நாசா விண்வெளி ஆய்வு மைத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதன் பயன்பாடு குறித்து பார்க்கலாம்.

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டம்

நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டம்

2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. விண்வெளியில் மனித கழிவு மேலாண்மை பிரச்சனையை தீர்க்க புதுமையான தீர்வுகளை கண்டறியும் முயற்சியும் நாசா சந்திர லூ சவாலை அறிமுகப்படுத்தியது.

விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி

விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி

2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இந்த பயணமானது விண்வெளி வீரர்களை நிலவில் தங்க வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் நிலவில் முதல் பெண்ணை தரையிறக்க இருக்கும் நாசாவின் புது திட்டத்திற்கு ஆர்ட்டிமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது.

அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்

அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்

முந்தைய கால விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்களின் கழிவுகளை அப்புறப்படுத்துவதில் சந்தித்த சிக்கல்களுக்கு தீர்வு காண நாசா திட்டமிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுருக்கும் நிலையில் சமீபத்தில் பரிசுப் போட்டி ஒன்றை அறிவித்தது. அது விண்வெளி கழிவறைகளை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்டதாகும்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம்

அமெரிக்க விண்வெளி நிறுவனம்

விண்வெளி கழிப்பறைகள் ஏற்கனவே இருந்தபோதிலும், அமெரிக்க விண்வெளி நிறுவனம் விண்வெளியிலும் சந்திரனின் ஈர்ப்பு விசையிலும் பயன்படுத்தும் வகையிலான மிகவும் சுருக்கமான, திறமையான கண்டுபிடிப்பு முயற்சியில் களமிறங்கியது.

ஜீரோ க்ராவிட்டி கழிவறை

ஜீரோ க்ராவிட்டி கழிவறை

இந்த நிலையில் நாசா., புவியீர்ப்பு விசை முற்றிலும் இல்லாத வகையில் ஜீரோ க்ராவிட்டி கழிவறை ஒன்றினை கண்டுபிடித்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நாசா அனுப்பி இருக்கிறது. இந்த கழிவறையானது சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்கு பரிசோதனை நோக்கில் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.

சுமார் 169 கோடி ரூபாய் மதிப்பு

சுமார் 169 கோடி ரூபாய் மதிப்பு

இந்த கழிவறையானது 23 மில்லியன் டாலர் சுமார் 169 கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த கழிவறையானது பெண் விண்வெளி வீரர்களின் அசௌகரிய நிலையை களையும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

40 சதவீதம் சிறியது

இந்த கழிவறை முன்னதாக பயன்படுத்தப்பட்ட கழிவறையைவிட 65 சதவீதம் எடை குறைவானதாகவும் 40 சதவீதம் சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதையடுத்து இந்த கழிவறை சிறியதாகவும் வித்தியாசமான தோற்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கருவிகளை கொண்டு செல்லும் விண்கலன்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கருவிகளை கொண்டு செல்லும் விண்கலன் மூலம் இந்த கழிவறை கொண்டுசெல்லப்பட்டது. அக்டோபர் 5ஆம் தேதி, திங்கள்கிழமை இந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தைச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. என்று நாசா தெரிவித்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
23 Million Dollar Worth Toilet Launching By Nasa: Send To Space Center For Testing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X