பப்ஜி தடை: மன உளைச்சலால் 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

|

பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டதன் காரணமாக பப்ஜி விளையாட்டை விளையாட முடியாமல் ஏமாற்றமடைந்த மேற்குவங்கத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பிரபல விளையாட்டான PUBG

பிரபல விளையாட்டான PUBG

பிரபல விளையாட்டான PUBG உட்பட பல்வேறு சீன மொபைல் செயலிகளுக்கு மத்திய அரசு தடை செய்து விதித்து அறிவித்தது. இதுதொடர்பான மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிக்கை குறித்து பார்க்கையில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பப்ஜி விளையாட்டால் ஏற்படும் விளைவு

பப்ஜி விளையாட்டால் ஏற்படும் விளைவு

பப்ஜி விளையாட்டில் ஏராளமானோர் தங்களை அடிமையாக்கிக் கொண்டனர் என்றே கூறலாம். கொரோனா ஊரடங்கு நேரத்தில் பலரும் தங்களது நேரத்தை எவ்வாறு செலவிடுவது என்று தவித்து வரும் நிலையில் பெரும்பாலானோர் தங்களது நேரத்தை பப்ஜி விளையாட்டில் செலவிட்டு வருகின்றனர். இந்த விளையாட்டில் பலரும் அதிகம் பணம் இழந்த நிகழ்வும், பப்ஜி அழுத்தம் தாங்காமலும், பப்ஜி விளையாடக் கூடாது என வீட்டில் கண்டித்ததாலும் உயிரிழப்பு சம்பவமும் இந்தியாவில் அரங்கேறியுள்ளது.

21 வயது மாணவர் தற்கொலை

21 வயது மாணவர் தற்கொலை

இதன்வரிசையில் மேற்குவங்கத்தின் நாடியா பகுதியை சேர்ந்த 21 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த இளைஞரின் தற்கொலைக்கு பப்ஜி தடை விதிக்கப்பட்டதே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐடிஐ மாணவர் ப்ரீதம்

ஐடிஐ மாணவர் ப்ரீதம்

மேற்கு வங்கத்தின் நாடியா பகுதியை சேர்ந்த ஐடிஐ மாணவர் ப்ரீதம், அவரது குடியிருப்பு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!பிரமாண்ட மர்ம பள்ளம்: இது 9-வது முறை., நீடிக்கும் அதீத மர்மங்கள்- உறைந்தபோகும் விஞ்ஞானிகள்!

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லைோ

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லைோ

இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்த தகவலை பார்க்கலாம். கடந்த வெள்ளிக்கிழமை (செப்.,4) அன்று காலை உணவுக்காக பிரிதம் தனது அறைக்கு சென்றதாக குடும்பத்தின் தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாத காரணத்தால் குடும்பத்தினர் பலவந்தமாக கதவை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.

பிரிதம் பெரிதளவு ஏமாற்றம்

பிரிதம் பெரிதளவு ஏமாற்றம்

கதவை திறந்து உள்ளே சென்றதும் பிரிதம் வீட்டு ஃபேனில் தூக்கிட்டு தொங்கியபடி இருந்துள்ளார். இதுகுறித்து குடும்பத்தினர் தரப்பில் கூறுகையில், பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்ட பின் பிரிதம் பெரிதளவு ஏமாற்றமடைந்தார் எனவும் பிரிதம் பப்ஜி விளையாட்டை நீண்ட நேரம் விளையாடியவர், அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் எனவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிதம் விளையாட முடியாமல் தவிப்பு

பிரிதம் விளையாட முடியாமல் தவிப்பு

அதோடு, பப்ஜி தடை செய்யப்பட்ட நாளில் இருந்து பிரிதம் விளையாட முடியாமல் தவித்து வந்துள்ளார். இதன்காரணமாகே பப்ஜி தடை அறிவிக்கப்பட்ட பிறகு தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பப்ஜி விளையாட்டு தடைக்கு பிறகும் இதுபோன்ற உயிரழப்பு நிகழ்வது அவர்கள் விளையாட்டில் அடிமையாக இருந்ததே காரணம் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
21 year old Student Hangs himself after PUBG Banned in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X