கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்

    |

    புதிய நிறுவனமானஆல்பாபெட்-ன் கீழ் கூகுள் நிறுவனம் இயங்கும் என லாரி பேஜ் அறிவித்த பின்னர், கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இருவரும் கூகுள் நிறுவன பதவிகளில் இருந்து விலகி, சுந்தர் பிச்சையை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தனர்.

    கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள்

    ஆனால் யார் இந்த சுந்தர் பிச்சை?


    கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை பற்றி யாரும் அறிந்திராத 21 ஆச்சர்ய தகவல்கள் இதோ..

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    1) கூகுள்/ஆல்பாபெட்

    கூகுள்/ஆல்பாபெட் நிறுவனங்கள் மறுசீரமைப்பு செய்த பின்னர் கூகுள் சர்ச்,ஏட்ஸ், மேப்ஸ், கூகுள் ப்ளே ஸ்டோர், யூடியூப் மற்றும் ஆண்ராய்டு பிரிவுகளை சுந்தர் பிச்சை நிர்வகிக்கிறார்.

    2) பிப்ரவரி 2014

    பிப்ரவரி 2014 இல், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூன்றாவது தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சையை நியமிக்க தீவிர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக வதந்திகள் பரவின.

    3) ஆழ்ந்த சிந்தனை

    சுந்தர் பிச்சை ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும்போது, ​நடக்க துவங்கிவிடுவார் என்கின்றனர் அவரது சக நண்பர்கள். கலந்துரையாடலின் நடுவில் அவர் திடீரென வெளியேறுவது சாதாரணமானது. ஆனால் அதில் விவாதிக்கப்படும் பிரச்சினைக்கு தீர்வுடன் தான் திரும்புவார்.

    4)சொத்துமதிப்பு

    1972 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சென்னை நகரில் பிறந்த சுந்தரின் முழு பெயர் பிச்சை சுந்தரராஜன். எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுந்தரின் இப்போதைய சொத்துமதிப்பு $ 150 மில்லியன்.

    5) சகோதரர்

    மின்னணு பொறியாளரான இவரது தந்தை, ஒரு புதிய ஸ்கூட்டரை வாங்குவதற்கு மூன்று வருடங்கள் சேமிக்க வேண்டியிருந்தது. ஆனால் பிச்சை மற்றும் அவரது சகோதரர் சிறந்த கல்வியை பெறும் பொருட்டு, பத்மா சேஷாத்ரி பாலா பவனில் படிக்க வைத்தார்.

    6)ஆர்வத்திற்கு காரணம்

    பிச்சையின் தந்தை கூறுகையில், பொறியாளராக தனது வேலையில் சவால்களைப் பற்றி சுந்தரிடம் இளம் வயதில் பேசியதே அவரது மகனின் தொழில்நுட்ப ஆர்வத்திற்கு காரணம் என்று நம்புகிறார்.

    7) கிரிக்கெட்

    இந்தியாவின் தொழில்நுட்பக் கல்லூரியில் இருந்து இளங்கலை படிப்பில் சேருவதற்கு முன்னர் பிச்சை தனது உயர்நிலைப்பள்ளி கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தார்; ஸ்டான்ஃபோர்டில் எம்எஸ் மற்றும் பென்சில்வேனியாவின் பல்கலைக்கழகத்தின் வால்டன் பள்ளியில் இருந்து எம்பிஏ பட்டம் பெற்றார். சுந்தர் ஸ்டான்போர்டில் படிக்க இடம் கிடைத்தபோது, அவரது தந்தை குடும்ப சேமிப்பில் இருந்து தனது ஆண்டு வருமானத்தை விட அதிக பணத்தை எடுத்து அமெரிக்காவிற்கு அனுப்பினார்.

    8)மெக்கின்ஸி

    கூகுளில் சேர்வற்கு முன்னர், அவர் மெக்கின்ஸி நிறுவனத்துடன் மேனேஜ்மென்ட் கன்சல்டிங் செய்துகொண்டிருந்தார்.

    9) ப்ராஜெக்ட்

    2004 ஆம் ஆண்டு கூகிளில் இணைந்த சுந்தர், கூகுள் க்ரோம் மற்றும் க்ரோம் ஓஎஸ்-ன் ப்ராஜெக்ட் மேனேஜ்மென்ட்-ல் பணியாற்றினார்.மேலும் கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப்ஸ் ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

    10)அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    2011 ஆம் ஆண்டில் டிவிட்டரின் ஜேசன் கோல்ட்மேனுக்கு மாற்றாக பிச்சை பரிந்துரைக்கப்பட்ட போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அவர் கூகுளில் தொடர முடிவெடுத்தார்.

    11)ஆண்ராய்டு

    2013 ஆம் ஆண்டில் ஆண்ராய்டு நிறுவனர் ஆண்டி ரூபின் கவனித்துவந்த பிரிவுகளுக்கு பொறுப்பேற்று மொபைல் தளங்களை நிர்வகித்தார். பில்லியன் உலகளாவிய ஆண்ராய்டு பயனர்களின் நம்பிக்கைகுரியவரானார்.

    12)அரசியல்

    கூகுள் நிறுவனத்தின் அரசியல் மற்றும் நாடகத்திலிருந்து விலகி நிற்கும் அளவிற்கு திறமையானவர் பிச்சை. அவர் மிசிசா மேயரின் கீழ் பணியாற்றியபோது, அவரது குழுவின் நல்ல செயல்திறன் விமர்சனங்களை உறுதிப்படுத்த, அவரின் அலுவலகத்தின் வெளியே மணிக்கணக்கில் காத்திருந்தார்.

    13)மைக்ரோசாப்ட்

    அவர் மைக்ரோசாப்ட்டில் கிட்டத்தட்ட இணைந்துவிட்டார் எனும்போது, பிச்சையை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு ஆண்டுக்கு $50மில்லியன் பங்குகளை வழங்கியது.

    14)ரூபா

    ரூபா நிறுவனத்தின் ஆலோசகர் குழுவில் இருந்த பிச்சை, ஜுவ் சாப்ட்வேர் நிறுவன இயக்குனராகவும் இருந்தார்.

    15) மலிவுவிலை ஸ்மார்ட்போன்கள்

    உலகளவில் அனைத்து குடும்பங்களுக்கும் மலிவுவிலை ஸ்மார்ட்போன்கள் வழங்க வடிவமைக்கப்பட்ட பிச்சையின் செல்ல திட்டமான 'ஆண்ராய்டு ஒன்', செப்டம்பர் 2014 இல் இந்தியாவில் தொடங்கப்பட்டது.

    16) கூகுள் சிஇஓ

    பிச்சை கூகுள் சிஇஓவாக நியமிக்கப்பட்ட போதிலும், 2014 ஆம் ஆண்டு அக்டோபரில் இருந்து கூகுளின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்று திறம்பட பணியாற்றுகிறார்

    17)வாட்ஸ்ஆப்

    சிலகாலம் லாரி பேஜின் வலதுகரமாக இருந்த பிச்சை, வாட்ஸ்ஆப் நிறுவனர் ஜான் கும், வாட்ஸ்ஆப்பை பேஸ்புக் நிறுவனத்திற்கு விற்கவேண்டாம் என சமாதானபடுத்த முயன்றார். நெஸ்ட் நிறுவனத்தின் டோனி பெடலுடன் பேசி,தனது நிறுவனத்தை கூகுளுடன் இணைக்க லாரி பேஜீக்கு உதவினார்.

    18) எளிமையின் அடையாளம்

    சுந்தர் பிச்சையின் அலுவலகம் "எளிமையின் அடையாளம் " என விவரிப்பவர்கள், அது அவரது நடத்தையிலும் எதிரொலிப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.

    19)இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்

    இந்தியாவில் இருக்கும் போது தன்னுடன் பழகிய அஞ்சலியுடன் திருமணம் செய்துகொண்ட பிச்சை, தற்போது இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.

    20)மென்மையான பேச்சு

    மென்மையான பேச்சு, எளிதில் பழகும் தன்மையால் அறியப்படுகிறார் பிச்சை. 2013 ஆம் ஆண்டில், லாரி பேஜ் மற்றும் கூகிள் சிபிஓ நிக்கேஷ் அரோரா ஆகியோருடன் சேர்ந்து, தென் கொரியாவில் உள்ள சாம்சங் தொழிற்சாலைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதன் கூட்டாளிகளுடன் கூகுள் நல்லுறவை பேணினர்.

    21) அசாதாரண திறன்

    பிச்சையிடம் இருக்கும் அசாதாரண திறன், அவர் குழந்தையாக இருந்தபோது சிறிது ஆர்வமாக இருந்தாலும், தற்போது சிறப்பாக உதவுகிறது. அவர் எப்போதும் டயல் செய்த ஒவ்வொரு எண்ணையும் நினைவில் வைக்கிறார்.

    முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

    English summary
    21 Unusual Facts About Sundar Pichai, Google's Surprise New CEO: Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more