அப்படி போடு BSNL.. மாசத்துக்கு ரூ.150 போதும்.. 6 மாசம் வேலிடிட்டி.. 90ஜிபி டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்!
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திடம் பல வகையான வேல்யூ பேக்குகள் (Value Packs) உள்ளன. அதாவது மலிவான விலைக்கு நீண்ட கால வேலிடிட்டி மற்றும் விலையை மீறிய நன்மைகளை தரும் திட்டங்கள் நிறைய உள்ளன. அவைகளில் - 6 மாதத்திற்கு, மாதந்தோறும் வெறும் ரூ.150 செலவில் கிடைக்கும் ஒரு திட்டம் கஸ்டமர்களின் கவனத்தை ஈர்க்கும்படி உள்ளது.
ஒருவேளை நீங்கள் ஒரு பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக இருந்தால், குறிப்பாக இரண்டாது சிம் கார்டு ஆக பிஎஸ்என்எல் -ஐ பயன்படுத்தினால், இந்த 6 மாத ரீசார்ஜை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்?

என்ன திட்டம்? நாம் இங்கே பேசுவது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டின் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும்; அதாவது கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகும் ரூ.1000 க்கு கீழே, இன்னும் சரியாக சொல்ல வேண்டும் ரூ.900 க்கு கீழே 6 மாத கால வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் கிடைப்பது - உண்மையில் இந்திய நுகர்வோருக்கு லாபகரமான திட்டமாகும்.
குறிப்பாக தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் தத்தம் வாடிக்கையாளர்களுக்கு அதிக விலையிலான ரீசார்ஜ் கட்டண திட்டங்களை வழங்கும் இந்த நேரத்தில், இந்த 2025 ஆம் ஆண்டில் மீண்டும் 10% கட்டண உயர்வு ஏற்படலாம் என்கிற கருத்துக்கள் உள்ள நிலைப்பாட்டில், ரூ.897 க்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பது - உண்மையிலேயே லாபகரமான திட்டம் தான்.
இதுபோன்ற திட்டம் தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து கிடைப்பதிலை. தனியார் டெலிகாம் நிறுவனங்களில் அதிக வேலிடிட்டி உடன் வரும் திட்டங்களில் அதிக டேட்டா கிடைப்பதில்லை. எடுத்துக்காட்டாக, ஏர்டெல்லின் ரூ.509 திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்; ஆனால் 6ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது
ஆனால் பிஎஸ்என்எல்-ஐ பொறுத்தவரை, இந்த ரூ.897 திட்டமானது நீண்ட கால வேலிடிட்டியுடன் பெரிய அளவிலான டேட்டா நன்மையுமே வழங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள 4ஜி வாடிக்கையாளர்களுக்கு வேலை செய்யும் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மொத்தம் 90 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ.897 ப்ரீபெய்ட் திட்டத்தின் மற்ற நன்மைகளை பொறுத்தவரை, இது 180 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் 90 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். ஒருவேளை அதிவேக இண்டர்நெட் தேவைப்பட்டால் டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்யலாம்.
மீண்டும் ரீசார்ஜ் விலைகள் உயரும்: தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ஆன ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய மூன்றும், இந்த 2025 ஆம் ஆண்டில் மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை 10% உயர்த்லாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஃபைனனாஷியல் எக்ஸ்ப்ரெஸ்-ன் சமீபத்திய அறிக்கையின்படி, தனியார் டெலிகாம் ஆபரேட்டர்கள் ஆனது பணமாக்குதலின் மீது தங்கள் கவனத்தை தொடரக்கூடும்.
ஆகையால் 2025 ஆம் ஆண்டில் மீண்டுமொரு கட்டண உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிறுவனங்கள் 5ஜி திட்டங்களுக்கான விலையையும் அறிமுகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். ஆய்வாளர்களின் கூற்றுப்படி 2025 ஆம் ஆண்டில் ஜியோவின் கவனம் அதன் வளர்ச்சியை அதிகரிப்பதன் மீது இருக்கும்.
ஆகையால் இந்நிறுவனம் மொபைல் ரீசார்ஜ்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதை தேர்வு செய்யும். மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது சிறந்த ரோஸ்-க்கான (ROCE) கட்டணங்களை உயர்த்த விரும்புகிறது. கடைசியாக, அரசாங்கமே மிகப் பெரிய பங்குதாரராக இருப்பதால், விஐஎல் நிறுவனமும் கட்டண உயர்வை ஆதரிக்கலாம்.
இப்படி செய்வதன் மூலம் இம்மூன்று நிறுவனங்களின் ஏஆர்பியு (ARPU) ஆனது, அதாவது ஒரு பயனரின் சராசரி வருவாய் (Average revenue per user) ஆனது குறைந்தபட்சம் 25% அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக 2025 ஆம் ஆண்டானது தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கான வளர்ச்சி ஆண்டாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கணித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications








