Home
News

அங்க இங்கனு அலையாதீங்க.. வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? வீட்டுல உக்காந்துகிட்டே செக் செய்வது எப்படி?

2024 மக்களவை தேர்தல் ஆனது எப்போது நடக்கும் என்கிற தேதியை தலைமை தேர்தல் ஆணையரான ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். இந்த தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரையிலாக மொத்தம் 7 கட்டங்களாக நடக்கவுள்ளது.

பின்னர் 2024 மக்களவை தேர்தல் முடிவுகள் (Lok Sabha Elections 2024 Result Date) ஆனது ஜூன் 4 ஆம் தேதியன்று அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் சுமார் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் நீங்களும் ஒருவரா?

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? மொபைலில் செக் செய்வது எப்படி?

நிகழவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் (Voter List) உங்கள் பெயர் உள்ளதா? என்பதை சரிபார்க்க விரும்புகிறீர்கள் என்றால்.. அங்குமிங்கும் அலைய வேண்டாம். உங்கள் வீட்டில் அமர்ந்தபடியே.. ஆன்லைன் வழியாக.. மொத்தம் 3 விருப்பங்களின் கீழ் நீங்களே செக் செய்யலாம். அதெப்படி என்கிற படிப்படியான மற்றும் எளிமையான வழிமுறைகள் இதோ:

01. உங்கள் போன் அல்லது லேப்டாப் வழியாக https://electoralsearch.eci.gov.in/ என்கிற இணையத்தளத்திற்குள் செல்லவும். குறிப்பிட்ட வலைப்பக்கம் திறக்கப்பட்டதும், நீங்கள் 3 விருப்பங்களை காண்பீர்கள்: சேர்ச் பை டீடெயில்ஸ் (Search by Details), சேர்ச் பை இபிஐசி (Search by EPIC) மற்றும் சேர்ச் பை மொபைல் (Search by Mobile).

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? மொபைலில் செக் செய்வது எப்படி?

02. அதில் சேர்ச் பை டீடெயில்ஸ் என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து.. ​​உங்கள் பெயர், உங்கள் தந்தை அல்லது உங்கள் கணவரின் பெயர், உங்களுடைய பிறந்த தேதி, உங்கள் வயது, பாலினம், மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி உள்ளிட்ட தேவையான விவரங்களை நிரப்பவும்.

03. பின்னர் காட்டப்பட்டுள்ளபடியே கேப்ட்சாவை (CAPTCHA) டைப் செய்து உள்ளிட்டு, சேர்ச் (Search) என்பதை கிளிக் செய்யவும். ஒருவேளை நீங்கள் சேர்ச் பை இபிஐசி என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு விருப்பமான மொழியை (Language) தேர்ந்தெடுத்து உங்கள் இபிஐசி நம்பர் (EPIC Number - இது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும்), மாநிலம் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட வேண்டும். பின்னர் சேர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.

வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? மொபைலில் செக் செய்வது எப்படி?

04. மூன்றாவது விருப்பமான சேர்ச் பை மொபைல் என்பதை தேர்ந்தெடுக்கும்போது, ​​நீங்கள் மாநிலத்தையும் மொழியையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணை (Mobile Number Registered with Voter ID) உள்ளிட்டு, பின்னர் கேப்ட்சாவை உள்ளிட்டு, சேர்ச் பட்டனை கிளிக் செய்யவும்.

மேலே உள்ள 3 வழிகளில் ஏதேனும் ஒன்றின் தேடல் முடிவில், உங்கள் பெயர் வந்தால், வரவிருக்கும் 2024 மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கான தகுதி உங்களுக்கு உள்ளது என்று அர்த்தம். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, வாக்களிக்க வேண்டும் என்றால் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை வாக்குச் சாவடிக்கு கட்டாயம் எடுத்துச்செல்ல வேண்டும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Lok Sabha Elections April 19 to June 1 Check Your Name in Voter List Using Your Mobile Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X