Home
News

மார்ச் 26 குள்ள.. புது போன், TV, AC-லாம் வாங்கி போட்ருங்க.. 60% டிஸ்கவுண்ட்.. தெறிக்கும் Samsung ஹோலி சேல்!

2024 ஹோலி பண்டிகையை முன்னிட்டு சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள், டேப்லெட்கள், ஏசிக்கள், ப்ரிட்ஜ்கள் மற்றும் வாஷிங் மெஷின்கள் மீது சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. என்னென்ன தயாரிப்புகள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்? இதோ விவரங்கள்:

சாம்சங் ஹோலி விற்பனை எப்போது தொடங்கி.. எப்போது முடியும்? சாம்சங்கின் இந்த சிறப்பு விற்பனையானது மார்ச் 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து சலுகைகளும் சாம்சங் ஷாப் ஆப், சாம்சங்.காம், சாம்சங் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களின் வழியாக அணுக கிடைக்கும்.

மார்ச் 26 வரை Samsung ஹோலி சேல்.. என்னென்ன ஆபர் கிடைக்கும்?

மேலும் இந்த சாம்சங் ஹோலி விற்பனையின் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை (Debit and Credit Cards) பயன்படுத்தி சாம்சங் தயாரிப்புகளை வாங்கினால் ரூ.25,0000 வரையிலான கேஷ்பேக் ஆஃபர் (Cashback Offer) கிடைக்கும் என்றும் சாம்சங் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், லேப்டாப்கள் மற்றும் டேப்லெட் மீதான சலுகைகள்: பல வகையான கேலக்ஸி எஸ் (Galaxy S), கேலக்ஸி ஏ (Galaxy A) மற்றும் ஃபிளாக்ஷிப் இஸட் சீரிஸ் (Z Series) ஸ்மார்ட்போன்களின் மீது 60% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26 வரை Samsung ஹோலி சேல்.. என்னென்ன ஆபர் கிடைக்கும்?

லேப்டாப்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, கேலக்ஸி புக்4 360 (Galaxy Book4 360), புக்4 ப்ரோ (Book4 Pro), புக்4 ப்ரோ 360 (Book4 Pro 360), புக் கோ (Book Go), புக்3 அல்ட்ரா (Book3 Ultra) மற்றும் புக்3 (Book3) உள்ளிட்ட மாடல்களுக்கு 45% வரையிலான தள்ளுபடி கிடைக்கும். கேலக்ஸி டேப்லெட்கள், வியரிபிள்ஸ், ஆக்சஸெரீஸ்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 55% வரை தள்ளுபடி கிடைக்கும்.

ஸ்மார்ட் டிவிககள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, சாம்சங்கின் பிரீமியம் அல்லது லைஃப்ஸ்டைல் (Premium or Lifestyle models) ​​மாடல்களின் மீது 48% வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மீது ரூ.15,250 வரையிலான கூடுதல் எக்ஸ்சேஞ்ச் சலுகையும் (Additional exchange offer) அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 26 வரை Samsung ஹோலி சேல்.. என்னென்ன ஆபர் கிடைக்கும்?

ப்ரிட்ஜ்கள், ஏசிக்கள், வாஷிங் மெஷின்கள் மீதான சலுகைகள்: ஏசி போன்ற டிஜிட்டல் டிவைஸ்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் மீது 49% வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும் ரூ.15,125 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ரிவர்ட்ஸும் கிடைக்கும். குறிப்பிட்ட சாம்சங் விண்ட்ஃப்ரீ (Samsung Windfree) ஏசி மாடல்களில் 39% வரை தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஏசிகளை வாங்கும் போது கூடுதலாக 5% தள்ளுபடியும் கிடைக்கும். இதுதவிர்த்து ரூ.1,415 மதிப்புள்ள ஒரு இலவச இன்ஸ்டாலேஷனும் கிடைக்கும். வாஷிங் மெஷின்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை ஈகோபபிள் (Ecobubble) ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் லைனில் குறிப்பிட்ட மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 50% வரை தள்ளுபடியுடன், ரூ.15,125 வரையிலான எக்ஸ்சேஞ்ச் நன்மைகளும் கிடைக்கும்.

சாம்சங் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகமான கேலக்ஸி ஏ55 5ஜி (Galaxy A55 5G) மற்றும் கேலக்ஸி ஏ35 5ஜி (Galaxy A35 5G) மாடல்களின் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்விரு புதிய கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுமே 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேக்களை கொண்டுள்ளன மற்றும் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கின்றன. மேலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் உடன் அனுப்பப்படுகின்றன.

இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான முக்கிய வேறுபாட்டினை பொறுத்தவரை கேலக்ஸி ஏ55 5ஜி மாடல்ஆனது எக்ஸினோஸ் 1480 சிப்செட் (Exynos 1480 SoC) கொண்டு இயங்குகிறது, மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ35 5ஜி மாடல் ஆனது எக்ஸினோஸ் 1380 சிப்செட்டை (Exynos 1380 SoC) கொண்டுள்ளது.

விலையை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ55 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.39,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.42,999 க்கும் மற்றும் ரூ.45,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ35 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ரூ.30,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.33,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டுமே மார்ச் 18 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும். எச்டிஎப்சி, ஒன்கார்டு ஐடிஎப்சி பேங்க் கார்டுகளை பயன்படுத்தினால் ரூ.3,000 கேஷ்பேக் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Holi Sale Samsung Announced Massive Offers on Phones TVs ACs and More Until March 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X