Home
News

Google I/O 2024 நிகழ்வு: சுந்தர் பிச்சையின் 4 முக்கிய அறிவிப்புகள்.. ஆடிப்போன Android யூசர்கள்!

உலகம் முழுவதும் உள்ள டெக்னாலஜி ஆர்வலர்களுக்கு, கூகுள் நிறுவனம் இன்று தீனிபோட உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் எதிர்பார்க்கப்படும் கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வானது இன்று இரவு தொடங்குகிறது. அது சரியாக எப்போது தொடங்கும்? இந்நிகழ்வில் என்னென்ன அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வு (Google I/O 2024 Event) சரியாக எப்போது தொடங்கும்? லைவ் ஸ்ட்ரீமிங் செய்வது எப்படி? அறியாதோர்களுக்கு கூகுள் ஐ/ஓ என்பது கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாடு ஆகும். இந்நிகழ்வு கலிபோர்னியாவில் உள்ள மவுண்டன் வியூவில் இன்று (மே 14) இரவு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

Google I/O 2024 நிகழ்வு: சுந்தர் பிச்சையின் 4 முக்கிய அறிவிப்புகள்!

கூகுள் ஐ/0 2024 நிகழ்வை நேரலையில் பார்ப்பது எப்படி? ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்வை கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலின் (Google YouTube Channel) வழியாக லைவ் ஸ்ட்ரீம் (Live Stream) செய்யலாம். கூகுள் ஐ/ஓ 2024 நிகழ்வில் என்னென்ன அறிமுகங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் நடக்கும்?

1. முதல் மற்றும் முக்கிய அறிமுகமாக - ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் இருக்கும்! இந்நிகழ்வில் ஆண்ட்ராய்டு 15 வழியாக வரும் புதிய அம்சங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 15-க்கான வெளியீட்டு தேதியையும் நாம் எதிர்பார்க்கலாம். தற்போது வரை இந்த எலேட்டஸ்ட் ஓஎஸ் ஆனது பீட்டா வெர்ஷனின் கீழ் பிக்சல் போன்களில் மட்டுமே பிரத்தியேகமாக அணுக கிடைக்கிறது.

Google I/O 2024 நிகழ்வு: சுந்தர் பிச்சையின் 4 முக்கிய அறிவிப்புகள்!

ஆண்ட்ராய்டு 15 வழியாக முழுமையாக நிரப்பப்படாத ஸ்க்ரீனில் இருக்கும் ஆப்கள் ஆனது ஃபுல் ஸ்க்ரீனையும் நிரப்பும் நோக்கத்தின் கீழ் தானாகவே அளவை மாற்றும் திறனை கொண்டு வரும். மேலும் நீண்ட காலமாக கோரப்படும் அம்சங்களில் ஒன்றான - ஆப் ஆர்க்கைவிங் அன்ட் அன்ஆர்க்கைவிங் (App Archiving and Unarchiving) ஆதரவும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆப் ஆர்க்கைவிங் அன்ட் அன்ஆர்க்கைவிங் ஆதரவானது வாட்ஸ்அப்பில் உள்ள ஆர்க்கைவ் அன்ட் அன்ஆர்க்கைவ் அம்சத்தை போலவே தான் செயல்படும். அதாவது தேவையில்லாத ஆப்களை ஒதுக்கி மற்ற ஆப்களுக்கு தேவையான இடத்தை கொடுக்கும் மற்றும் தேவையான நேரத்தில் குறிப்பிட்ட ஆப்களை அணுக, ஒரு எளிமையான பாதையை உருவாக்கி கொடுக்கும்.

Google I/O 2024 நிகழ்வு: சுந்தர் பிச்சையின் 4 முக்கிய அறிவிப்புகள்!

இதுதவிர்த்து ஆண்டராய்டு 15 வழியாக மேம்படுத்தப்பட்ட பிரெய்லி ஆதரவும் (Improved Braille Support) கொண்டு வரப்பட்டுள்ளது. கூடவே செல்லுலார் நெட்வொர்க்கிற்கான பாதுகாப்பு கட்டுப்பாடுகள் (Cellular Network Security Controls), வைஃபை நெட்வொர்க்கிற்கான டிவைஸ் அடையாள மேலாண்மை (Wi-Fi Network Device Identification Management) போன்ற மேம்பாடுகளை ஆண்ட்ராய்டு 15 கொண்டுவந்துள்ளது.

எல்லாவற்றை விட முக்கியமான ஆண்ட்ராய்டு 15 ஆனது டீஃபால்ட் வாலட் ஆப்பையும் (Default Wallet App) கொண்டு வருகிறது. அதாவது டீஃபால்ட் போன் கால் ஆப் (Default Phone Call App), டீஃபால்ட் மெசேஜிங் ஆப்பை (Default Messaging App) போல பயனர்கள் தங்களுக்கு விருப்பமான வாலட் ஆப்பை டீஃபால்ட் ஆப் ஆக செட் செய்துகொள்ள முடியும்.

Google I/O 2024 நிகழ்வு: சுந்தர் பிச்சையின் 4 முக்கிய அறிவிப்புகள்!

2. கூகுள் சேவைகளின் மூலைமுடுக்கெங்கும் ஜெமினி ஏஐ (Google Gemini AI): இந்நிகழ்வில், கூகுள் மேப்ஸ், க்ரோம், கூகுள் ஒர்க்ஸ்பேஸ், ஜிமெயில் மற்றும் பல ஆப்களில் ஜெமினி ஏஐ செயல்பாடு ஒருங்கிணைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் அனைத்து ஆண்ட்ராய்டு டிவைஸ்களிலும் ஜெமினி ஒரு முக்கியமான பங்கை வகிக்க தயாராக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இது கூகுள் அசிஸ்டண்ட்டை காணமால் அடித்துவிடும் என்றே கூறலாம்.

3. வியர் ஓஎஸ் 5 (Wear OS 5): கூகுள் அதன் வியரபிள் ஆப்ரேட்டிங் சிஸ்டம் ஆன வியர் ஓஎஸ்-க்கு குறிப்பிடத்தக்க மேம்படுத்தலை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் வியர் ஓஎஸ் 5-ல் என்னென்ன புதிய அம்சங்கள் இணைக்கப்படும் என்கிற விவரங்கள் பற்றி தெரியவில்லை. இந்த லேட்டஸ்ட் ஓஎஸ்-ல் வாட்ச் ஃபேஸ் வடிவமைப்பில் சில முக்கிய மேம்பாடுகள் அறிமுகப்படுத்தப்படலாம்.

4. ஹார்ட்வேர் தொடர்பான அறிவிப்புகள் (Hardware Announcement): கூகுள் ஐ/ஓ ஆனது பாரம்பரியமாக மென்பொருள் அறிவிப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், கடந்த காலங்களில் குறிப்பிடத்தக்க வன்பொருள் வெளியீடுகளையும் கண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு நடந்த நிகழ்வில் பிக்சல் 7எ (Pixel 7a) மற்றும் நிறுவனத்தின் முதல் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆன பிக்சல் போல்ட் (Pixel Fold) அறிமுகமானது.

ஆனால் இந்தாண்டு கூகுள் ஏற்கனவே அதன் பிக்சல் 8a ஸ்மார்ட்போனை (சில தினங்களுக்கு முன்னர்) அறிமுகம் செய்துவிட்டது. அது இன்று (மே 14) ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. ஒருவேளை நீங்கள் இந்நிகழ்வில் பிக்சல் ஃபோல்ட் 2 ஸ்மார்ட்போனை எதிர்பார்த்தால்.. அது அறிமுகம் செய்யப்பட எந்த வாய்ப்பும் இல்லை. அதிகபட்சமாக அது தொடர்பான தகவல்கள ஏதேனும் பகிரப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Google IO Event How to Watch Live Stream What New Launches Announcements Expected All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X