ஆஃபர்னா இப்படி இருக்கனும்.. iPhone 14, OnePlus 12, Moto G85, CMF Phone 1.. புது Flipkart Sale.. நவ.21 வரை!
2024 தீபாவளி பண்டிகை காலத்தில் "செம்மத்தியா" கல்லா கட்டிய பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது மொபைல்ஸ் போனான்ஸா (Mobiles Bonanza) என்கிற புதிய சிறப்பு விற்பனையின் கீழ் மீண்டும் கல்லா கட்டத்தொடங்கி உள்ளது. ஏற்கனவே நேரலையில் உள்ள இந்த சிறப்பு விற்பனை நவம்பர் 21 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.
மொபைல் போன்கள் மீதான இந்த சிறப்பு விற்பனையின் கீழ் ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15), ஒன்பிளஸ் 12 (OnePlus 12) தொடங்கி போக்கோ எக்ஸ்6 (Poco X6), மோட்டோ ஜி85 (Moto G85) சிஎம்எப் போன் 1 (CMF Phone 1), சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) மற்றும் பல பிரபலமான ஸ்மார்ட்போன்கள் மீது தாறுமாறான டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.57,749 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோரில் (Apple Store), இதே மாடலின் அசல் விலை ரூ.69,900 ஆகும். அதாவது பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸா விற்பனையின் கீழ் ஐபோன் 15 மீது ரூ.12,151 நேரடி தள்ளுபடி கிடைக்கிறது.
ஒருவேளை நீங்கள் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் அம்சங்களை (Apple Intelligence Features) பயன்படுத்த விரும்பினால், இன்னும் லேட்டஸ்ட் ஆன ஐபோன் மாடலை வாங்க விரும்பினால் ஐபோன் 16 (iPhone 16) மாடலை வாங்கலாம் தற்போது இது பிளிப்கார்ட் வலைத்தளத்தில், எச்டிஎப்சி பேங்க் கார்டு இஎம்ஐ-யின் (HDFC Bank Card EMI) கீழ் ரூ.74,900 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் வெளியீட்டு விலை ரூ.79,900 ஆகும் .
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்23 (Samsung Galaxy S23) மாடல் ரூ. 41,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேசமயம் சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Samsung Galaxy S24) ரூ.59,145 க்கு வாங்க கிடைக்கிறது. இந்தாண்டு தொடக்கத்தில் ரூ.64,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) மாடல் ரூ.59,884 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
விற்பனையின் போது போக்கோ எக்ஸ்6 (Poco X6) மாடலும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும். தற்போது இது பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸா விற்பனையின் கீழ் ரூ.21,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல மோட்டோ ஜி85 (Moto G85) ஸ்மார்ட்போன் மீது பேங்க் ஆபர் (Bank Offer) அறிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனின் அசல் வெளியீட்டு விலை ரூ.17,999 ஆகும். ஆனால் எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனையின் (HDFC Bank Credit Card EMI) கீழ் ரூ.1,200 தள்ளுபடியை பெற முடியும். இதன் மூலம் மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை ரூ.16,799 ஆக குறைக்க முடியும்.
ஒருவேளை நீங்கள் இன்னும் மலிவான ஸ்மார்ட்போனை தேடினால் சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) மாடலை வாங்கலாம். தற்போது பிளிப்கார்ட்டில் இதுவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இது அதன் அசல் வெளியீட்டு விலையான ரூ.15,999 க்கு பதிலாக ரூ.1000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.14,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஸ்மார்ட்போன் மீதும் தள்ளுபடி கிடைக்கிறது. இந்தியாவில் ரூ.44,999 க்கு அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன் தற்போது வெறும் ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது பிளிப்கார்ட் மொபைல்ஸ் போனான்ஸா விற்பனையின் போது, இந்த ஸ்மார்ட்போனின் மீது முழுதாக ரூ.8,000 பிளாட் டிஸ்கவுண்ட் (Flat Discount) கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








