ரூ.1 க்கு தங்கம்.. வீட்டில் இருந்தபடியே Google Pay, PhonePe ஆப்பில் Online வழியாக தங்கம் வாங்குவது எப்படி?
2024 தீபாவளி பண்டிகையை இன்னும் சிறப்பாக, இன்னும் புத்திசாலித்தனமாக கொண்டாட தங்கத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் கடைகளுக்கு சென்று, நீண்ட வரிசையில் நின்று, பக்குவமாக பார்த்து-பார்த்து, தேய்மானம் பற்றி தெளிவாக விசாரித்து, அதன்பின் தங்கம் வாங்கும் அளவிற்கு உங்களுக்கு போதுமான நேரம் அல்லது பொறுமை இல்லையா? அப்படியானால், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!
வெறும் ரூ.1, ரூ.10, ரூ.100 முதல் ரூ.1 கோடி வரையிலாக ஆன்லைன் வழியாகவே தங்கத்தை வாங்குவதற்கான வாய்ப்பை யுபிஐ ஆப்கள் வழங்குகின்றன. கூகுள் பே (Google Pay), பேடிஎம் (Paytm), போன்பே (PhonePe) மற்றும் அமேசான் பே (Amazon Pay) ஆகியவைகள் ஆன்லைன் வழியாக தங்கத்தை விற்பனை செய்கின்றன. ஒருவேளை உங்களுக்கு மேற்கண்ட யுபிஐ ஆப்கள் வழியாக தங்கம் வாங்குவது எப்படி என்று தெரியாவிட்டால்.. இதோ அதற்கான வழிமுறைகள்:

கூகுள் பே ஆப் வழியாக தங்கம் வாங்குவது எப்படி?
கூகுள் பே ஆப்பில், நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ.50,000 வரை தங்கம் வாங்கலாம்.
01. முதலில் உங்கள் மொபைலில் உள்ள கூகுள் பே ஆப்பை திறக்கவும்
02. இப்போது சர்ச் பார் வழியாக "கோல்ட் லாக்கர்" (Gold Locker) என்று டைப் செய்து தேடவும், பின்னர் அந்த விருப்பத்தை கிளிக் செய்யவும்
03. இப்போது நீங்கள் எவ்வளவு ரூபாய்க்கு தங்கம் வாங்க விரும்புகிறீர்களோ, அந்த தொகையை உள்ளிட்டு, ஆன்லைன் வழியாக தங்கம் வாங்க தயார் ஆகவும்.
04. கடைசியாக, நீங்கள் உள்ளிட்ட தொகையை கூகுள் பே யுஐ மூலம் செலுத்தவும். அவ்வளவு தான். நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்து இருப்பீர்கள்!
பேடிஎம் ஆப் வழியாக தங்கம் வாங்குவது எப்படி?
பேடிஎம் ஆப்பில், நீங்கள் குறைந்தபட்சம் ரூ.1 முதல் அதிகபட்சம் ரூ.50,000 வரை தங்கம் வாங்கலாம்.
1. முதலில் உங்கள் மொபைலில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும்.
2. இப்போது சர்ச் பாரில் பேடிஎம் கோல்ட் (Paytm Gold) என்று டைப் செய்து, பின்னர் கிடைக்கும் பேடிஎம் கோல்ட் என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்
3. பின்னர் கீழ் இடதுபுறத்தில் பை ஒன் டைம் (Buy One Time) என்கிற விருப்பத்தை காண்பீர்கள்
4. இப்போதுநீங்கள் தங்கம் வாங்க விரும்பும் தொகையை ரூபாயில் அல்லது எடையை கிராமில் நிரப்பவும்
5. நிரப்பிய பிறகு, கன்ஃபிர்ம் அன்ட் ப்ரொசீட் (Confirm and Proceed) என்பதை கிளிக் செய்யவும்
6. கடைசியாக பணம் செலுத்தும் முறையை தேர்ந்தெடுத்து பணம் செலுத்தவும்.
போன்பே ஆப் வழியாக தங்கம் வாங்குவது எப்படி?
போன்பே ஆப்பில், நீங்கள் குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 வரை தங்கம் வாங்கலாம்.
1. முதலில் உங்கள் மொபைலில் உள்ள போன்பே ஆப்பை திறக்கவும்
2. வெல்த் (Wealth) என்கிற ஆப்ஷனை தேர்வு செய்து, பின்னர் மியூச்சுவல் ஃபண்ட் வகைகளுக்கு செல்லவும்.
3. அங்கே கோல்ட் என்பதை கிளிக் செய்யவும், இப்போது உங்கள் திரையில் கோல்ட் ஃபண்ட்ஸ் விருப்பம் காணப்படும்
4. அதில் நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் ஒரு ஃபண்ட்-ஐ கிளிக் செய்யவும்
5. இப்போது முதலீட்டு வகைக்கு சென்று "ஒன் டைம் (One time) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. தங்கம் வாங்குவதற்கான தொகையை செட் செய்து, இன்வெஸ்ட் நௌவ் (Invest now) என்பதை கிளிக் செய்யவும்
7. குறிப்பிட்ட தொகையை செலுத்தி உங்கள் கோல்ட் ஃபண்ட்-ஐ செக்யூர் செய்யவும்!
அமேசான் பே ஆப் வழியாக தங்கம் வாங்குவது எப்படி?
அமேசான் பே ஆப்பில், நீங்கள் குறைந்தபட்சம் ரூ.5 முதலீடு செய்ய வேண்டும்.
1. முதலில் உங்கள் மொபைலில் உள்ள அமேசான் ஆப்பிற்கு சென்று, பின்னர் அதில் உள்ள அமேசான் பே ஆப்ஷனை கிளிக் செய்யவும்
2. பின்னர் காப்பீடு மற்றும் முதலீட்டிற்கு (Insurance and Investment) கீழே சென்று டிஜிட்டல் கோல்ட் (Digital Gold) என்பதை கிளிக் செய்யவும்.
3: இப்போது நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகையை உள்ளிடவும்
4. டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் செக்பாக்ஸை தேர்வு செய்த பின்னர், இன்வெஸ்ட் நௌவ் (Invest Now) என்பதை கிளிக் செய்யவும்.
படி 5: கடைசியாக அமேசான் பே பேலன்ஸ் (Amazon Pay Balance) தவிர வேறு எந்த கட்டண முறையையும் பயன்படுத்தி, பணம் செலுத்தி தங்கம் வாங்கலாம்!


Click it and Unblock the Notifications








