Amazon-ல் ஆர்டர் அள்ளுது.. Prime Day Sale-ல் அடிமட்ட விலைக்கு வந்த 5 போன்கள், 2 லேப்டாப்கள்.. விட்றாதீங்க!
அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் நடக்கும் மிகவும் முக்கியமான சிறப்பு விற்பனைகளில் ஒன்றான அமேசான் பிரைம் டே 2024 விற்பனை (Amazon Prime Day 2024 sale) தற்போது நேரலையில் உள்ளது. வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த வருடாந்திர விற்பனை நிகழ்வானது அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கான (Amazon Prime Members) பிரத்தியேக விற்பனை ஆகும். விற்பனையின் முதல் நாள் ஆன இன்று (ஜூலை 20) என்னென்ன ஆபர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்கிற பட்டியல் இதோ:
1. ஆப்பிள் ஐபோன் 13 (Apple iPhone 13): ஆப்பிள் ஐபோன் 13 மாடலானது அமேசான் பிரைம் டே 2024 விற்பனையின் போது ரூ.47,799 க்கு (வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கிறது. இந்த மாடல் மீது எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது; அதிகபட்ச தள்ளுபடியுடன் ரூ.44,050 க்கு வாங்க கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுடன் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பங்களும் அணுக கிடைக்கிறது.

2. சாம்சங் கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S23 Ultra 5G): அமேசான் பிரைம் டே 2024 விற்பனையில் தற்போது இது ரூ.74,999 க்கு (வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கிறது. எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் கீழ் இந்த ஸ்மார்ட்போனின் விலையை ரூ.44,050 வரை குறைக்கலாம். புதிய கேலக்ஸி எஸ்24 சீரீஸில் அதிக பணம் செலவழிப்பதில் உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றால் சற்றே பழைய எஸ்23 அல்ட்ரா மாடலை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம். சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த மாடலுக்கும் கேலக்ஸி ஏஐ அம்சங்கள் வரும்.
3. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G): ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது கூப்பன் அடிப்படையிலான தள்ளுபடியை வாங்க கிடைக்கிறது. ரூ.1,000 ஆன்-பேஜ் கூப்பன் வழியாக இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.9,499 க்கு வாங்கலாம். பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி ஆபர் விலையை இன்னும் குறைக்கலாம்.
4. ஐக்யூ நியோ 9 ப்ரோ 5ஜி (iQoo Neo 9 Pro 5G): அமேசான் பிரைம் டே 2024 விற்பனையில் தற்போது இது ரூ.29,999 க்கு (வங்கி சலுகைகள் உட்பட) வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8Gஜிபி வரையிலான ரேம் -ஐ பேக் செய்கிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒரு பெரிய 6.78-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
5. ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G): ரூ15,000 க்கும் குறைவான விலையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அமேசான் பிரைம் டே 2024 விற்பனை நிகழ்வின் போது ரூ.14,999 க்கு (வங்கி மற்றும் கூப்பன் சலுகைகளைப் பயன்படுத்திய பிறகு) கிடைக்கும் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி மாடலை கருத்தில் கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து மிகப்பெரிய ஆபர்களை பெற்றுள்ள மற்ற தயாரிப்புகள்: டெல் 15 ஸ்லிம் அண்ட் லைட் லேப்டாப் (Dell 15 Thin and Light Laptop), அமேசான் பிரைம் டே 2024 விற்பனையின் போது இது ரூ.44,990 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.62,088 ஆகும். இதேபோல ஆப்பிள் ஐபேட் 10த் ஜென் (Apple iPad 10th gen) மாடல் ரூ.30,900 க்கு வாங்க கிடைக்கும்.
மேலும் ஹெச்பி லேப்டாப் 15 13வது ஜென் இன்டெல் கோர் ஐ5 லேப்டாப் (HP Laptop 15 13th Gen Intel Core i5) ஆனது அமேசான் பிரைம் டே 2024 விற்பனையின் போது இது ரூ.51,990 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.70,502 ஆகும். கடைசியாக அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் (Amazon Fire TV Stick) மாடல்கள் மீதும் தள்ளுபடிகள் கிடக்கிறது.
அமேசான் பிரைம் டே 2024 விற்பனையின் போது, அமேசானின் ஃபயர் டிவி ஸ்ட்ரீமிங் மீடியா பிளேயர் பிரிவின் கீழ் கிடைக்கும் ரெகுலர் மாடல் (Regular Fire TV Stick) ரூ. 2,199 க்கும், புதிய ஃபயர் டிவி ஸ்டிக் 4கே மாடல் (Fire TV Stick 4K) ரூ.3999 என்கிற தள்ளுபடி விலையின் கீழும் மற்றும் லைட் எடிஷன் ஆனது ரூ.1,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








