ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

|

தனது கஜானாவில் பெரிய அளவிலான பணம் இல்லை என்றாலும் கூட, ஏற்கனவே நிறுவனத்திற்குள் பல வகையான பட்ஜெட் பிரச்சனைகள் நிலவும் இந்த சூழ்நிலையிலும் கூட, பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான 2023 புத்தாண்டு சலுகைகளை (New Year Offer) அறிவிக்க தயங்கவில்லை.

லாபம் முக்கியம் இல்ல.. வாடிக்கையாளர்கள் தான் முக்கியம்!

லாபம் முக்கியம் இல்ல.. வாடிக்கையாளர்கள் தான் முக்கியம்!

மிகவும் எளிமையான நியூ இயர் ஆபர் தான் என்றாலும் கூட, BSNL-ன் இந்த சலுகையை பாராட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக லாபம் தான் முக்கியம் என்கிற எண்ணம் கொண்ட மற்ற டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் வாடிக்கையாளர் சேவையை பெரிதாக மதிக்கும் பிஎஸ்என்எல்-ஐ கண்டிப்பாக பாராட்டாமல் இருக்கவே முடியாது!

சரி வாருங்கள், BSNL-ன் நியூ ஆபரின் கீழ் யாருக்கு, என்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!

இது குறிப்பிட்ட பயனர்களுக்கான ஒரு சலுகை ஆகும்!

இது குறிப்பிட்ட பயனர்களுக்கான ஒரு சலுகை ஆகும்!

பிஎஸ்என்எல் என்று நன்கு அறியப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது தனது பிராட்பேண்ட் (Broadband) வாடிக்கையாளர்களுக்கு மட்டுமான புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது பிஎஸ்என்எல்-ன் இந்த நியூ இயர் ஆபர் ஆனது இந்நிறுவனத்தின் ஃபைபர் இண்டர்நெட் சர்வீஸ் (Fibre internet service) உடன் தொடர்புடையது. அதுமட்டுமின்றி, இது டிஎஸ்எல் (DSL - Digital subscriber line) கனெக்ஷனை கொண்டுள்ள உரிமையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

டிஎஸ்எல் கனெக்ஷன் டூ பாரத் ஃபைபர்!

டிஎஸ்எல் கனெக்ஷன் டூ பாரத் ஃபைபர்!

இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், BSNL நிறுவனத்தின் டிஎஸ்எல் இணைப்புகளை பயன்படுத்தும் இண்டர்நெட் சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் இருந்தாலும் கூட, அவர்கள் இன்னுமும் ஃபைபர் இண்டர்நெட் சேவைகளுக்கு மாறவில்லை.

அதாவது BSNL நிறுவனம் தனது பாரத் ஃபைபர் சேவைகளை இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட, பிஎஸ்என்எல்-ன் டிஎஸ்எல் இணைப்புகளை பயன்படுத்தும் இண்டர்நெட் சந்தாதாரர்கள் பாரத் ஃபைபர் சேவைகளை நோக்கி ஈர்க்கப்படவில்லை. எனவே தான் BSNL, அவர்களுக்கான ஒரு "ஸ்பெஷல் நியூ இயர் ஆபரை" அறிவித்துள்ளது!

வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

ஒவ்வொரு மாதமும் ரூ.200 தள்ளுபடி!

ஒவ்வொரு மாதமும் ரூ.200 தள்ளுபடி!

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கூற்றுப்படி, தனது டிஎஸ்எல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள், பாரத் ஃபைபர் சேவைகளுக்கு மாறும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு சிறப்பு தள்ளுபடி அணுக கிடைக்கும்.

அதாவது பாரத் ஃபைபர் சேவைக்கு மாறிய பின்னர், உங்களுடைய பில்லில் (Bill) இருந்து அடுத்த 6 மாதங்களுக்கு, ஒவ்வொரு மாதமும் ரூ.200 என்கிற தள்ளுபடியை நீங்கள் பெறுவீர்கள். அதாவது மொத்தம் ரூ.1200 சேமிக்க முடியும்!

ஏற்கனவே பிஎஸ்என்எல்-ன் பாரத் ஃபைபர் சேவைகளின் கீழ் எக்கச்சக்கமான நன்மைகள் அணுக கிடைக்கும் நிலைப்பாட்டில், கூடுதலாக ரூ.200 என்கிற தள்ளுபடி நிச்சயம் பெரும்பாலான பயனர்களை ஈர்க்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!

வெறும் ரூ.275 போதும்!

வெறும் ரூ.275 போதும்!

நினைவூட்டும் வண்ணம், பாரத் ஃபைபர் சேவையானது 300எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட் மற்றும் OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகளுடன் வருகிறது.

அதுமட்டுமின்றி, பாரத் ​​ஃபைபர் இன்டர்நெட் சேவைகள் ஆனது வெறும் ரூ.275 முதல் தொடங்குகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக டிஎஸ்எல் கனெக்ஷனில் இருந்து பாரத் ஃபைபருக்கு மாற இதுவே சிறந்த நேரம் ஆகும். ஏனென்றால், பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த புத்தாண்டு சலுகையின் கீழ் உங்களால் ரூ.1200 வரை சேமிக்க முடியும்!

வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!வச்சிட்டாங்க ஆப்பு! இனி இஷ்டத்துக்கு Google Pay, Paytm-ஐ யூஸ் பண்ண முடியாது! 2 புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

கஜானாவில் காசு இல்லை!

கஜானாவில் காசு இல்லை!

பிராட்பேண்ட் பிரிவை பொறுத்தவரை, பிஎஸ்என்எல் தனது இடத்தை இழந்து வருகிறது என்றே கூறலாம். ஏனென்றால் ஃபைபர் சந்தையில் பார்தி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவைகள் முன்னணி இண்டர்நெட் சேவை வழங்குநர்களாக உருமாறியுள்ளன.

சமீபத்திய தரவுகளின்படி, ஒட்டுமொத்த வயர்லைன் பிரிவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை ஜியோ முந்தி உள்ளது, மறுகையில் உள்ள ஏர்டெல் நிறுவனமானது பிஎஸ்என்எல்-ன் எண்ணிக்கையோடு மிகவும் நெருக்கமாக உள்ளது.

BSNL-இன் ஃபைபர் "சொத்துக்கள்" விரிவடைந்துள்ளன என்றாலும் கூட, ஃபைபர் உள்கட்டமைப்பை விரிவுபடுத்தும் அளவிற்கு பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் நிதி இல்லை என்பதே இந்த பின்னடைவுக்கு முக்கிய காரணம் ஆகும்!

Best Mobiles in India

English summary
2023 New Year Offer From BSNL Now Broadband Customers Can Save Up to Rs 1200 Here is How

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X