Home
News

2023 இல் எல்லாமே மாறிப் போச்சு! Jio பயனர்களே பணம் மிச்சப்படுத்தும் பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்.!

2023 இல் ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு கிடைக்கும் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம். இந்த திட்டங்களில் தினசரி 2.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரலழைப்பு என ஏணைய நன்மைகள் கிடைக்கிறது. இந்த ஆண்டில் ஜியோவின் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது ரூ.299 முதல் தொடங்குகிறது. பயனர்கள் இந்த ரீசார்ஜ் திட்டங்களில் 5ஜி சேவையையும் பயன்படுத்தலாம்.

Jio பயனர்களே! 2023 இல் பணம் மிச்சப்படுத்தும் பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்.!

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல்வேறு நன்மைகளுடன் வெவ்வேறு விலைப் பிரிவில் ரீசார்ஜ் திட்டங்கள் வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ், டேட்டா, 5ஜி அணுகல் என பல நன்மைகள் இதில் கிடைக்கிரது.

கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ள இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றவை ஆகும். ஜியோ வழங்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களாக இது கருதப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் ஜியோ பயனர்களுக்கு கிடைக்கும் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களின் விவரங்களை சற்று விரிவாக பார்க்கலாம்.

ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் 2023

ரூ.299 பிளான்

பயனர்கள் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா என மொத்தம் 56 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 26 நாட்கள் வேலிடிட்டிக் கொண்டது. இந்த திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகலும் வழங்கப்படுகிறது.

ரூ.666 ரீசார்ஜ் பிளான்

இந்த ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா என பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ரூ.719 ரீசார்ஜ் பிளான்

ரூ.719 ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் என பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஜியோ ஆப்ஸிற்கான இலவச அணுகல் இதில் வழங்கப்படுகிறது.

ரூ.749 திட்டம்

ரூ.749 திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக டேட்டா வரம்பு, வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் இலவச ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் கிடைக்கிறது. இந்த திட்டமானது 90 நாட்கள் வேலிடிட்டி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Jio பயனர்களே! 2023 இல் பணம் மிச்சப்படுத்தும் பெஸ்ட் ரீசார்ஜ் பிளான்.!

ரூ.2023 திட்டம்

ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டமானது 2023 புத்தாண்டு ரீசார்ஜ் திட்டமாகும். இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா என மொத்தம் 630 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 252 நாட்கள் வேலிடிட்டி ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச அணுகல் உடன் வரம்பற்ற அழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது.

ரூ.2999 திட்டம்

ரூ.2999 திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டமானது மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2.5 ஜிபி டேட்டா என்ற வீதம் இந்த சலுகை கிடைக்கிறது. கூடுதலாக வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பாராட்டு சந்தா என அனைத்து நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ரூ.2874 திட்டம்

ரூ.2874 திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 730 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி 2 ஜிபி டேட்டா என்ற வீதம் இணையம் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸின் பாராட்டுக்கான சந்தா அணுகலும் கிடைக்கிறது. இந்த திட்டமானது 365 நாட்களுக்கு செல்லுபடியாகிறது.

ரூ.2545 திட்டம்

ரூ.2545 திட்டமானது வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் மொத்தம் 504 ஜிபி டேட்டா தினசரி 1.5ஜிபி டேட்டா என்ற வீதம் வழங்கப்படுகிறது. தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோ ஆப்ஸிற்கான பாராட்டு சந்தா நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டமானது 336 நாட்களுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2023 Jio Prepaid Plans: Best recharge plan for Jio users With Unlimited Data, Voice Call and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X