நேர்மைக்கும், பொறுமைக்கும் கிடைத்த பரிசு! BSNL-ஐ நக்கல் அடிச்சவங்கலாம்.. இப்போ மூஞ்ச எங்க வச்சிப்பாங்க?

|

"பேரு தான் அரசாங்க கம்பெனி.. ஆனா ஒன்னுத்துக்கும் புண்ணியம் இல்ல.. 4ஜி நெட்வொர்க்கை அறிமுகம் செய்யவே வழி இல்லா.. இதுல எங்க இருந்து 5ஜி வரப்போகுது?" என்று பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை பார்த்து நக்கல் அடித்தவர்கள் எல்லாம்.. 'கப்சிப்' என்று அடங்கிப்போகும் அளவிற்கு ஒரு தகவல் வெளியாகி உள்ளது!

அதென்ன தகவல்? BSNL நிறுவனத்தின் நேர்மையை பற்றியும், பொறுமையை பற்றியும் பேசும் அளவிற்கு அப்படி என்ன நடந்துள்ளது? இதோ விவரங்கள்:

கோடிகளை கொட்டும் அம்பானிக்கு கூட கிடைக்காத பெருமை!

கோடிகளை கொட்டும் அம்பானிக்கு கூட கிடைக்காத பெருமை!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இருக்கும் நிதி நெருக்கடிகள், அதன் மீதான புறக்கணிப்புகள், ஒரவஞ்சனைகள் மற்றும் விமர்சனங்களை பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை.

இருந்தாலும் கூட இந்நிறுவனம் கடந்த சில மாதங்களாக எப்படியாவது 4ஜியை அறிமுகப்படுத்தி விட வேண்டும் என்று கடுமையாக முயற்சித்து வருகிறது.

அந்த முயற்சிக்கும், BSNL நிறுவனத்தின் நேர்மைக்கும், பொறுமைக்கும் ஒரு மகத்தான பரிசு கிடைத்துள்ளது. அதை ஒரு பரிசு என்று கூறுவதை விட பெருமை என்றே கூறலாம்; அதுவும் பல கோடிகளை கொட்டும் அம்பானிக்கும், மிட்டலுக்கும் கூட கிடைக்காத ஒரு பெருமை BSNL-க்கு கிடைத்துள்ளது!

ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!ஹலோ அம்பானி சார்.. BSNL-ஐ பார்த்து கத்துக்கோங்க! காசு இல்ல கஸ்டமர் தான் முக்கியம்னு நிரூபிக்கும் ஒரு ஆபர்!

அதென்ன பெருமை?

அதென்ன பெருமை?

உள்நாட்டு உபகரணங்களுடன் 4ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தும் முதல் இந்திய தொலைத்தொடர்பு ஆப்ரேட்டர் என்கிற பெருமையை பிஎஸ்என்எல் சொந்தமாக்கி கொள்ள உள்ளது. இந்த பெருமை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவிடமும் இல்லை; சுனில் பார்தி மிட்டலின் ஏர்டெல் நிறுவனத்திடமும் இல்லை!

நினைவூட்டும் வண்ணம், 4ஜி நெட்வொர்க்கிற்கான உபகரணங்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளுமாறு, பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டது. அரசாங்கத்தின் உத்தரவை மிகச்சரியாக செய்ததன் விளைவாகவே BSNL-க்கு இப்படி ஒரு பெருமை கிடைத்துள்ளது!

ரெடியாவது 4G மட்டுமல்ல.. BSNL 5G-யும் தான்!

ரெடியாவது 4G மட்டுமல்ல.. BSNL 5G-யும் தான்!

பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியா முழுவதும் தனது 4ஜி சேவைகளை வெளியிட டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் (Tata Consultancy Services - TCS) உதவியைப் பெற போகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி நெட்வொர்க்கை மட்டுமல்ல, 5ஜி நெட்வொர்க்கை வெளியிடவும் கூட டிசிஎஸ் நிறுவனம் உதவலாம்.

அதாவது தேஜாஸ் நெட்வொர்க்குஸ் (Tejas Network) மற்றும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (Centre for Development of Telematics) ஆகியவற்றை உள்ளடக்கிய TCS தலைமையிலான கூட்டமைப்பு BSNL 5G வெளியீட்டிற்கும் கூட கைகொடுக்கலாம்!

தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!தம்பி Elon Musk.. சிஇஓ சீட்ல இருந்து கொஞ்சம் எழுந்திரு.. நான் உட்காரணும்.. அமெரிக்காவில் மாஸ் காட்டும் தமிழர்!

BSNL 4G மற்றும் 5G - எப்போது அறிமுகமாகும்?

BSNL 4G மற்றும் 5G - எப்போது அறிமுகமாகும்?

BSNL நிறுவனமானது இந்த 2023 ஆம் ஆண்டிலேயே, அதன் 4G மற்றும் 5G சேவைகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

5ஜி என்பது இன்னும் ஒரு தொலைதூரக் கனவாகவே இருந்தாலும் கூட, கடந்த நான்கைந்து மாதங்களில் நடந்த ஒவ்வொரு வளர்ச்சியும் பிஎஸ்என்எல்-ன் 4ஜி கனவானது மிக அருகில் இருப்பதைக் காட்டுகிறது.

ஆக BSNL-ன் 4G நெட்வொர்க் ஆனது நாட்டில் அறிமுகமான வேகத்தில், இந்நிறுவனத்தின் அடுத்த குறி - 5ஜி நெட்வொர்க்கின் அறிமுகம் மீது மட்டுமே இருக்கும். அதுமட்டுமின்றி, BSNL 4ஜி திட்டங்களின் விலை நிர்ணயமானது தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்!

45,180 கிராமங்களுக்கு முன்னுரிமை!

45,180 கிராமங்களுக்கு முன்னுரிமை!

2023 ஆம் ஆண்டில் 4ஜி சேவைகளை தொடங்கும் தனது திட்டத்தில், BSNL நிறுவனமானது இந்தியா முழுவதும் 45,180 கிராமங்களில் டவர்களை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிக்கவும் முடிவு செய்துள்ளது.

அந்த கிராமங்கள் ஆனது இன்னும் நான்காவது தலைமுறை நெட்வொர்க்குடன், அதாவது 4ஜி நெட்வொர்க் உடன் இணைக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
2023 Could Belongs To BSNL First Indian Telecom Company Ready To Launch 4G With Homegrown Equipments

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X