ககன்யான் விண்வெளி திட்டம் : விண்வெளி வீரர்களாகும் விமானப்படை பைலட்கள்!
இந்நிறுவனமானது நீண்ட நேரம் பறக்ககூடிய போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது" என மூத்த ஐ.ஏ.எப் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையின் இரண்டு அல்லது மூன்று போர் விமானிகள், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் விண்வெளி திட்டத்தில் முக்கிய விண்வெளி வீரர்களாக இருப்பார்கள் என ஆயுதப் படை மருத்துவ சேவைக்கான பொது இயக்குனர் (DG-AFMS) லெப்டினென்ட் ஜெனரல் பிபின் புரி தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இந்த விண்வெளி மிஷன் தொடங்கப்படலாம் என தெரிகிறது. லெப்டினென்ட் ஜெனரல் பூரி கூறுகையில், பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்திய ஆயுதப்படையின் இன்ஸ்ட்யூட் ஆப் ஏரோஸ்பேஸ் மெடிசன் (IAM) நிறுவனம், விண்வெளி வீரர்கள் குழுவை இறுதி செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜெனரல் பிபின் புரி
"எங்களுக்கு வழங்கப்பட்ட பைலட்களின் மிகப்பெரிய பட்டியலில் இருந்து, சிறந்த இரண்டு அல்லது மூன்று நபர்களை இந்த விண்வெளி திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்று இந்திய இராணுவத்தின் ஆர்டிபிசியல் லிம்ப் சென்டரின் பவளவிழா கொண்டாட்டத்தின் போது லெப்டினென்ட் ஜெனரல் பிபின் புரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ
ஐ.ஏ.எம் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ(ISRO) இணைந்து கடந்த சில மாதங்களாக, இந்த திட்டத்திற்கான மருத்துவ அம்சங்களை ஆலோசிப்பதற்காக பல்வேறு சந்திப்புகளை நடத்தியுள்ளன. இந்நிறுவனங்கள் விமானிகள் மற்றும் விண்வெளி மருந்துகளுடன் தொடர்புடைய தரவுத்தளத்தை கொண்டுள்ளதால், சரியான சிறந்த நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய அரசு இந்நிறுவனங்களை கேட்டுக்கொண்டுள்ளது என ஐஏஎப் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான மருத்துவ வல்லநர்கள்
இந்த நிறுவனத்தில் உள்ள சிறப்பு ஆசிரியர்கள் விண்வெளி மருந்துகளின் துணைப்பிரிவுகளில் உள்ள முக்கிய திறமையின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நிறுவனம் சர்வதேச ஏரோஸ்பேஸ் மருந்து நிபுணர்கள், விமான மருத்துவ வல்லநர்கள், வானூர்தி பொறியாளர்கள், உளவியலாளர்கள் மற்றும் விமான பணியாளர்கள் ஆகியோருடன் தொடர்ந்து கலந்துரையாடி, இத்துறையில் உள்ள வழக்கமான நிகழ்வுகளை புரிந்துகொள்கின்றனர்.

நீண்ட நேரம் பறக்ககூடிய போர் விமானங்கள்
"இந்நிறுவனமானது நீண்ட நேரம் பறக்ககூடிய போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது" என மூத்த ஐ.ஏ.எப் அதிகாரி தெரிவித்துள்ளார்.

புனே & மும்பை
இந்த நிகழ்வில் ஏஎல்சியின் முன்னாள் தளபதிகள் மற்றும் மருத்துவ சேவையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆகியோர் இருந்தனர். ஆயுதப் படை மருத்துவ கல்லூரி, இராணுவ மருத்துவமனை, மற்ற இராணுவ நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் புனே & மும்பை பகுதியை சேர்ந்த பல்வேறு கல்லூரிகளில் இருந்து மருத்துவ மாணவர்கள் கூட கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications