பெஸ்ட்னு சொல்வது எல்லாம் பெஸ்ட் இல்ல! 2022 இன் சிறந்த பேட்டரி கொண்ட Smartphone இதுதான்.!

|

சிறந்த பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் அனைத்து Smartphone-களும் சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குவதில்லை. அதேபோல் எது சிறந்த பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது என்பதை அறிவதும் மிக சிரமமான விஷயமாக இருக்கிறது.

சிறந்த பேட்டரி பேக்கப் ஸ்மார்ட்போன்கள்

சிறந்த பேட்டரி பேக்கப் ஸ்மார்ட்போன்கள்

ஒருசில ஸ்மார்ட்போன்கள் ஆரம்பத்தில் சிறந்த பேட்டரி ஆயுளை வழங்கினாலும் நாட்கள் செல்ல அதன் பேக்கப் தன்மை தரைமட்டத்துக்கு குறைந்துவிடுகிறது. எனவே சிறந்த பேட்டரி பேக்கப் குறித்து நன்கு அறிவது முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதன்படி 2022 இல் வெளியான சிறந்த பேட்டரி பேக்கப் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம்.

பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள்

பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்கள்

2022 ஆம் ஆண்டின் சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன்கள் எவை என்பது குறித்து பார்க்கலாம். இந்த பட்டியலில் Asus ROG, OnePlus 10 Pro, iPhone உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆனது சிறந்த பேட்டரி பேக்கப் ஆதரவுகளை வழங்குகிறது.

Asus ROG Phone 6

Asus ROG Phone 6

Asus ROG Phone 6 ஆனது 2022 ஆம் ஆண்டின் மிகவும் சிறந்த பேட்டரி பேக்கப் ஆதரவு கொண்ட ஸ்மார்ட்போன் ஆகும். கேமிங் பிரியர்களை மையமாக வைத்து வெளியான ஸ்மார்ட்போன் இது. இதில் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மிகப் பெரிய அளவிலான 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி

6000 எம்ஏஎச் பேட்டரி

Asus ROG போன் 6 ஆனது 6000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. 2022 இல் வெளியான சிறந்த பேட்டரி பேக்கப் ஸ்மார்ட்போன் இதுவாகும். பெரிய பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் காரணத்தால் இந்த போனும் சற்று பெரியதாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் கூலிங் அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

6000 எம்ஏஎச் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு ஏற்ற வகையில் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய 60 நிமிடங்கள் ஆகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

iPhone 14 Plus

iPhone 14 Plus

கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 13 ப்ரோ இல் இருந்து முற்றிலும் மாறுபட்ட பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த iPhone 14 Plus.

Asus ROG போன் 6 இல் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருந்தாலும் அது iPhone 14 Plus இல் உள்ள பேட்டரிக்கு ஈடாகாது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. இந்த ஐபோன் மாடலில் 4323 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இது தனித்துவமான பேட்டரி ஆயுளை வழங்குகிறது. சார்ஜ் ஆயுள் அதிகமாக வழங்கப்பட்டாலும் சார்ஜிங் செய்யும் வேகம் அவ்வளவு சிறப்பாக இல்லை என கூறப்படுகிறது. நீடித்த பேட்டரி பேக்கப் விரும்புபவருக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.

Redmi K50i

Redmi K50i

Redmi K50i ஸ்மார்ட்போனானது ரூ.25,000 விலைப் பிரிவில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த விலைப்பிரவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் இது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

67W ஃபாஸ்ட் சார்ஜிங்

67W ஃபாஸ்ட் சார்ஜிங்

Redmi K50i இன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் கூடிய டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது. சிறந்த தெர்மல்கள், லிக்விட் கூலிங், சூப்பர் சாஃப்ட்வேர் போன்ற பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள 67W ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் இந்த ஸ்மார்ட்போனை 45 நிமிடத்தில் 0 முதல் 100% வரை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

Poco M4 5G

Poco M4 5G

அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்களில் மட்டும் சிறந்த பேட்டரி ஆயுள் இல்லை. மலிவு விலை ஸ்மார்ட்போனிலும் சிறந்த பேக்கப் ஆதரவு வழங்கும் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. அது போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனானது ரூ.15,000 விலைப்பிரிவில் கிடைக்கிறது.

இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள்

இரண்டு நாட்கள் பேட்டரி ஆயுள்

Poco M4 5G ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நுழைவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களை ஒப்பிடும் போது இது சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தது இரண்டு நாட்கள் வரை அதன் பேட்டரி ஆயுள் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
2022 Best Battery Smartphone: 30 minutes Full Charging, Two Days Battery Life Smartphones in List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X