ரூ.5,600 பில்லுக்கு ரூ.1.4 லட்சம் டிப்ஸ்- சப்ளையருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகர்

|

புத்தாண்டை முன்னிட்டு நிறுவனங்கள் தங்களின் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வந்தது. இந்த அறிவிப்பில் பலதரப்பு வாடிக்கையாளர்களும் பயணடைந்தனர் என்றே கூறலாம்.

சர்ப்ரைஸ் என்றாலே மகிழ்ச்சிதானே

சர்ப்ரைஸ் என்றாலே மகிழ்ச்சிதானே

பொதுவாக சர்ப்ரைஸ் என்பது அனைவரும் வரவேற்கத்தக்க ஒன்று என்றால் அது மிகையல்ல, இதில் ஹாலிவட் பிரபல நடிகரும் பாடகருமான டோனி வால்பெர்க் யாரென்றே தெரியாத ஒருவருக்கு புத்தாண்டு பரிசாக இன்ப அதரிச்சி கொடுத்துள்ளார்.

ஜென்னி மெக்கார்த்தி பதிவு

ஜென்னி மெக்கார்த்தி பதிவு

கடந்த புதன்கிழமை, வால்பெர்க்கின் மனைவியும், நடிகையுமான ஜென்னி மெக்கார்த்தி தனது கணவரின் தாராள மனப்பான்மை குறித்து தனது ரசிகர்களிடம் தெரிவிக்கும் வகையில் டுவிட் ஒன்றை செய்திருந்தார். அதில், மெக்கார்த்தி வால்ல்பெர்க் ரசீது போன்ற புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

2020 ஆம் ஆண்டு

2020 ஆம் ஆண்டு

"டோனி வால்ல்பெர்க் 2020 ஆம் ஆண்டை அவர் ஆச்சரியமான மனிதரைப் போலவே தொடங்கியிருக்கிறார்," என்று சொல்லையும் மேலே குறிப்பிட்டிருந்தார்.

பலே திட்டம்: CAA ஆதரவுக்கு ஒரே மிஸ்டு கால்., ஆதரவு திரட்டும் பாஜக- இதுதான் அந்த எண்...பலே திட்டம்: CAA ஆதரவுக்கு ஒரே மிஸ்டு கால்., ஆதரவு திரட்டும் பாஜக- இதுதான் அந்த எண்...

#2020 டிப் சேலஞ்ச்

#2020 டிப் சேலஞ்ச்

புதிய ஆண்டில் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை பரப்ப மற்ற பெரிய செலவினர்களுக்கு சவால் விட #2020 டிப் சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கை அவர் சேர்த்துள்ளார். வடகிழக்கு மிச்சிகனில் உள்ள அல்பேனாவில் உள்ள தண்டர் பே ரிவர் உணவகத்தில் ஹாலிவுட் நடிகர் டோனி வால்பெர்க் மற்றும் அவரது மனைவி ஜென்னி மெக்கார்த்தி கடந்த வார இறுதியில் உணவருந்த சென்றுள்ளனர். உணவகத்தில் அவருக்கு டேனியல் ஃபிரான்சோனி வெயிட்டர்(சப்ளையர்) ஆக பணியாற்றி உள்ளார்.

வெயிட்டர் ஃபிரான்சோனி

வெயிட்டர் ஃபிரான்சோனி

உணவருந்திய பின் அந்த பிரபல ஜோடிகளிடம் வெயிட்டர் ஃபிரான்சோனி பில் வழங்கியிருக்கிறார். அந்த ஜோடி பில்லை பில் புக்கில் வைத்துவிட்டு சென்றுவிட்டது. அதை வெயிட்டர் ஃபிரான்சோனி எடுக்க வந்துள்ளார். அதில் "புத்தாண்டு வாழ்த்துக்கள். 2020 உதவிக்குறிப்பு சவால் என்று அந்த பில்லில் எழுதப்பட்டிருந்தது.

78 டாலருக்கு 2020 டாலர் வழங்கிய நடிகர்

அதோடு அந்த ஜோடிக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த பில், 78 டாலர் அதாவது ரூ.5,600 ஆகும். ஆனால் ஹாலிவுட் நடிகர் வால்பெர்க் 2020 டாலர் அதாவது ரூ.1.4 லட்சம் வைத்து விட்டு சென்றுள்ளார். அதோடு 78 டாலர் போக மீதத்தை டிப்ஸாக எடுத்துக் கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்மூலம் வெயிட்டருக்கு ரூ.1.4 லட்சம் டிப்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது செல்போன் டவர் இல்ல சுவாசக் காற்று டவர்., டெல்லியில் நிறுவப்பட்ட முதல் டவர்இது செல்போன் டவர் இல்ல சுவாசக் காற்று டவர்., டெல்லியில் நிறுவப்பட்ட முதல் டவர்

மட்டற்ற மகிழ்ச்சியில் வெயிட்டர்

மட்டற்ற மகிழ்ச்சியில் வெயிட்டர்

ஒரு வருடத்திற்கு முன்பு வீடற்ற நிலையில் இருந்ததாகவும், தனது குடும்பத்துடன் மிகவும் சிரமத்தில் வாழ்ந்து வந்ததாகவும் ஃபிரான்சோனி தெரிவித்தார். இந்த பணம் இன்பதிர்ச்சி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.முதலில் அந்த பில்லை பார்த்து யாரோ ப்ரான்க் செய்கிறார்கள் என்று தான் நினைத்ததாக ஃபிரான்சோனி தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
2020 tip challenge: Donnie Wahlberg leaves $2,020 for Hotel server

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X