டாப் 10 2019: பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்

|

கூகுள் தேடுதல் என்பது பிரதானமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. பொதுவாக ஒரு தகவல் தெரிய வேண்டுமானாலும் சரி, ஏதாவது சந்தேகம் என்றாலும் சரி உடனே நம் அணுகுவது கூகுளை மட்டும்தான். A to Z என்றால் அதற்கு கூகுள் என்று பொருளாக அறியப்பட்டு வருகிறது.

அதிகம் தேடப்பட்டவர்கள் தொடர்பாக ஆய்வு

அதிகம் தேடப்பட்டவர்கள் தொடர்பாக ஆய்வு

கூகுளில் ஒரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் அதிகம் தேடப்பட்டவை என்னவென்று ஆய்வு நடத்தி அதன் தகவல் வெளியாவது வழக்கம். அதன்படி பாகிஸ்தான் நாட்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் மற்றும் விஷயங்கள் என்னவென்று ஆய்வு நடத்தி அதன் முடிவு வெளியாகியுள்ளது.

அபிநந்தன், சாரா அலிகான்

அபிநந்தன், சாரா அலிகான்

பாகிஸ்தானில் தேடுதல் இணையதளமான கூகுளில் இந்திய விமானப்படை வீரர், விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமன், இந்திய பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஆகியோர் மிகவும் விரும்பி தேடப்படும் பிரபலங்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்

முதல் 10 பிரபலங்கள் பட்டியல்

முதல் 10 பிரபலங்கள் பட்டியல்

2019 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் தேடுதல் இணையதளமான கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலங்கள், தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் கூகுளில் அதிகமாக வைரலாகும் சம்பவங்கள் குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது. அதில் மிகவும் விரும்பி தேடப்படும் முதல் 10 பிரபலங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது.

பாலிவுட் நடிகை சாரா அலிகான்

பாலிவுட் நடிகை சாரா அலிகான்

அந்த முதல் 10 பிரபலங்களில் மிக்-21 பைசன் ரக போா் விமானத்தில் சண்டையின்போது தவறுதலாக பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குச் சென்று மீண்டும் தாய்நாடு திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாலிவுட் நடிகை சாரா அலிகான் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் பாடகர் அட்னான் சமி மிகவும் விரும்பி தேடப்படும் பிரபரலங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

அதேபோன்று பாகிஸ்தான் திரைப்பட நடிகை நைமல் கஹாவர் கான், பிக்பாஸ் 13- ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் அனிமேஷன் தொலைக்காட்சி தொடரான மோட்டூ-பட்டுலு ஆகியவை மிகவும் விரும்பி தேடப்படும் பிரபலங்களின் பட்டியலும் இடம் பெற்றுள்ளன.

நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடிநீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி

அபிநந்தன், சாரா அலிகான், பிக்பாஸ்

அபிநந்தன், சாரா அலிகான், பிக்பாஸ்

இந்த பட்டியலில், தொலைக்காட்சித் தொடரான ​​பிக் பாஸ்-சீசன் 13 இரண்டாவது பிரபலமான தேடலாக உள்ளது. பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான் ஆறாவது இடத்தையும், அபிநந்தன் வர்தமன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியான மோட்டு பட்லு, எட்டாவது இடத்தையும், பாலிவுட் படங்களான கபீர் சிங் ஐந்தாவது இடத்தையும், கல்லி பாய் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளது.

Best Mobiles in India

English summary
2019: Most searched celebrities on Google in Pakistan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X