2017-ன் 'பிக்கஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்' எதிர்பார்ப்பு பட்டியல் .!

உங்கள் கருவியை மேம்படுத்த திட்டம் போடுபவரா நீங்கள்? அப்படியானால் 2017-ஆம் ஆண்டில் வரப்போகும் சிறந்த புதிய ஸ்மார்ட்போன்களின் எங்கள் பட்டியலில் உங்களுக்கு நிச்சயம் உதவும்.

|

2016-ஆம் ஆண்டு இனிதே முடிவடைகிறது. சரி 2017-ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன் கடைகளில் நமக்கு என்னவெல்லாம் கிடைக்கும்.? என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம்..? நிச்சயமாக வரப்போகும் 2017-ஆம் ஆண்டு மிக பெரிய ஸ்மார்ட்போன்கள் யுத்தங்களை சந்திக்கும் என்பதில் சந்தேகமேயில்லை, அதனால் வாடிக்கையாளர்களாகிய நமக்கு வரும் புதிய ஆண்டில் என்னென்ன கிடைக்கும்..?

கவலையே வேண்டாம். சக்திவாய்ந்த, நீண்ட கால பேட்டரி, வேகமாக செயலி, சூப்பர் கேமரா என பல அப்கிரேட் அம்சங்கள் கொண்ட கருவிகள் சந்தையை கலக்கும். அப்படியாக 2017-ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும், வரப்போகும் சிறந்த புதிய ஸ்மார்ட்போன்களின் - பல வதந்திகள் மற்றும் எதிர்பார்ப்புகளுடன் சேர்த்து உத்தியோகபூர்வ அறிவிப்புகளையும் உள்ளடக்கி நான்கு மிக சாத்தியமான வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் - எங்கள் பட்டியல் இதோ.!

சாம்சங் எஸ்8

சாம்சங் எஸ்8

எஸ்8 கருவி 835 க்வால்காம் ஸ்னாப்டிராகன் சிப் கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் ஒரு 4கே வடிவமைப்பு, 4ஜிபி ரேம், 30 எம்பி பின்புற மற்றும் 9 எம்பி செல்பீ கேமிரா ஆகியவைகளும் எதிர்பார்க்கப்படுகிறது. உடன் 4200 எம்ஏஎச் பேட்டரி திறன், 64ஜிபி மற்றும் 128 ஜிபி உள் நினைவகம் மற்றும் இரட்டை மைக்ரோ எஸ்டி அட்டை அம்சம், ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளம் ஆகியவைகளும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.

எச்டிசி 11

எச்டிசி 11

எச்டிசி 11 கருவியானது ஒரு 5.5-அங்குல க்யூஎச்டி (1440x2560) டிஸ்ப்ளே காட்சி மற்றும் எச்டிசி சென்ஸ் 8 யூஐ கஸ்டமைஸ் கொண்ட சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளம் கொண்டிருக்கலாம். உடன் ஒரு இரட்டை கேமரா அமைப்பு, பின்பக்கத்தில் ஒரு 12 மெகாபிக்சல் கேமிரா, 8எம்பி செல்பீ கேமிரா, அக்டாகோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபியூ ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுக்கிறது. இக்கருவியில் 8ஜிபி என்ற ஒரு அபாரமான ரேம் மற்றும் 3700 எம்ஏச் திறன் கொண்ட பேட்டரியும் எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா பி1

நோக்கியா பி1

நோக்கியா பி கருவிகளில் ஒரு 2கே தீர்மான டிஸ்ப்ளே இடம்பெறும் என்று கூறப்படுகிறது. உடன் ஒரு க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 ப்ராசஸர், 6ஜிபி ரேம் மற்றும் வதந்திகளின்படி ஒரு 23 எம்பி.பின்புற கேமிரா ஆகியவைகளுடன் சேர்த்து ஒரு 3700 எம்ஏஎச் பேட்டரி திறனும், சமீபத்திய ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளமும் எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி ஜி 6

எல்ஜி ஜி 6

ஒரு 5.6 அங்குல 4கே டிஸ்ப்ளே உடன் 24 எம்பி பின்பக்க கேமிரா மற்றும் 7 எம்பி செல்பீ கேமிரா ஆகியவைகள் இக்கருவியில் இடம்பெறலாம். மேலும் வதந்திகளின்படி எதிர்வரும் எல்ஜி ஜி 6 கருவி, ஸ்னாப்டிராகன் க்வால்காம் ஆக்டா கோர் 3.0 ஜிகாஹெர்ட்ஸ் செயலி, மேலும் சமீபத்திய ஆண்ட்ராய்டு நௌவ்கட் இயங்குதளம் ஆகிய அப்கிரேட் அம்சங்களும் இடம்பெறலாம். மாற்றம் 64 அல்லது 128ஜிபி உள் நினைவகம், 128 க்கும் மேற்பட்ட ஜிபி வரை மெமரி நீட்டிப்பு, 4200எம்ஏஎச் பேட்டரி திறன் ஆகியவை அம்சங்களும் இக்கருவியில் எதிர்பார்க்கப்படுக்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2016-ஆம் ஆண்டின் டாப் 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள், முதல் இடம் எதற்கு.?

Best Mobiles in India

English summary
2017 Biggest Android Phones: Samsung S8, HTC 11, Nokia P1 And LG G6. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X