Subscribe to Gizbot

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் - நாசா..!

Written By:

பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய அளவில், இரண்டு வான்வெளி பொருட்களுக்கு இடையே நிகழும் மோதலை 'இம்பாக்ட் ஈவன்ட்' (Impact Event), அதாவது மோதல் நிகழ்வு என்கிறார்கள். ஆயிரகணக்கான குறுங்கோள்கள், வால்மீன்கள் அல்லது 'விண்வீழ்' கொண்ட விண்வெளி கிரக அமைப்பில் மிகவும் வழக்கமாக நடக்கும் சம்பவம் தான் இந்த மோதல் நிகழ்வுகள் என்றாலும்கூட, நாம் வாழும் பூமி கிரகத்தோடு விண்வெளி பொருள் ஒன்று மோதுகிறது அல்லது மோதும் வாய்ப்பு உள்ளது என்றால் அதை எளிமையாக எடுத்துக்கொள்ள கூடாது.

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் 100 அடி அகல குறுங்கோள் - நாசா..!

அதை கருத்தில் கொண்டு தான் பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழையும் அல்லது நுழையும் வாய்ப்பு கொண்ட விண்வெளி பொருட்களை துல்லியமாக கண்காணித்துக்கொண்டே இருக்கிறது விண்வெளி ஆரய்ச்சி நிலையங்கள். அபப்டியானதொரு கண்காணிப்பில் சிக்கியது தான் - 2013 டிஎக்ஸ்68 (2013 TX68) என்ற குறுங்கோள்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
100 அடி அகலம் :

100 அடி அகலம் :

2013 டிஎக்ஸ்68 ஆனது பூமியை நோக்கி பயணித்து வந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமின்றி அது சுமார் 100 அடி அகலம் கொண்ட ஒரு குறுங்கோள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

21 மடங்கு குறைவான தூரம் :

21 மடங்கு குறைவான தூரம் :

கணிக்க முடியாதபடி இருக்கும் இந்த குறுங்கோள் ஆனது பூமியை மிகவும் நெருங்கி கடக்க இருக்கிறது அதாவது வெறும் 17,000 கிலோமீட்டர் (11,000 மைல்கள்) தூரத்தில் கடக்க இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

21 மடங்கு நெருக்கமான தூரம் :

21 மடங்கு நெருக்கமான தூரம் :

இந்த தூரமானது பூமிக்கும் நிலவிற்கும் இடைப்பட்ட தூரத்தை விட 21 மடங்கு நெருக்கமான தூரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

9 மில்லியன் மைல்கள் :

9 மில்லியன் மைல்கள் :

இருப்பினும் இந்த குறுங்கோள் ஆனது சுமார் 9 மில்லியன் மைல்கள் (14 மில்லியன் கிலோமீட்டர்கள்) தொலைவிலும் பூமியை கடக்கலாம் என்றும் நாசாவினால் கணிக்கப்படுகிறது.

பூமியில் இருந்து :

பூமியில் இருந்து :

இந்த 2013 டிஎக்ஸ்68 குறுங்கோள் ஆனது 2 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதும், கண்டுபிடிக்கப்படும் போது பூமியில் இருந்து சுமார் 3 மில்லியன் மைல்கல் (5 மில்லியன் கிலோமீட்டர்கள்) தொலைவில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மார்ச் 5 முதல் 8 :

மார்ச் 5 முதல் 8 :

தற்போது கூடுதல் கண்காணிப்பின் மூலம் 2013 டிஎக்ஸ்68 குறுங்கோளின் அதன் கோளப்பாதை புரிந்து கொள்ளப்பட்டு, அதுவரும் மார்ச் 5 முதல் 8 ஆகிய இடைப்பட்ட தேதிகளில் பூமியை கண்டது செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அச்சுறுத்தல் இல்லை :

அச்சுறுத்தல் இல்லை :

நாசாவின் புவி பொருள் ஆய்வு மையம் (Nasa's Center for Near-Earth Object Studies - CNEOS) பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் இந்த குறுங்கோள் மூலம் உலகிற்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

 மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பூமி அருகே சுற்றித்திரியும் 230 அடி நீளமுள்ள மர்ம விண்கலம்..!


செவ்வாயில் மேலும் ஒரு 'மர்ம உருவம்' கண்டுப்பிடிப்பு..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Asteroid 2013 TX68 may impact Earth in 2017 - Nasa. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more