கடுகளவு யோசிச்சாலும் தப்பு: 180W சார்ஜிங், 200MP கேமரா உடன் மலிவு விலையில் புதிய Infinix போன்!
Infinix Zero Ultra 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் இந்த ஜீரோ சீரிஸ் ஸ்மார்ட்போனானது 200 எம்பி முதன்மை கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 180 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. Infinix Zero Ultra 5G ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ரூ.29,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Infinix Zero Ultra 5G ஸ்மார்ட்போனின் பிற குறிப்பிடத்தக்க அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 180 வாட்ஸ் தண்டர் சார்ஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 12 நிமிடத்தில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய Infinix ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் துளை பஞ்ச் கட்அவுட் வசதியோடு செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றாலும் பிற பிராந்தியங்களில் முன்னதாகவே அறிமுகமாகிவிட்டது.
Infinix Zero Ultra 5G இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை
Infinix Zero Ultra 5G விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.29,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன் ஆனது Coslight Silver மற்றும் Genesis Noir வண்ண விருப்பங்களில் வெளியாகி இறுக்கிறது. டிசம்பர் 25 முதல் பிளிப்கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Infinix Zero Ultra 5G ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்து பார்க்கையில், Flipkart Axis Bank கார்டுகள் மூலம் சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5% கேஷ்பேக், நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த போனுக்கு வழங்கப்படுகிறது.
Infinix ஜீரோ அல்ட்ரா சிறப்பம்சங்கள்
Infinix ஜீரோ அல்ட்ரா சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான XOS 12 மூலம் இயங்குகிறது. 6.8 இன்ச் ஃபுல் எச்டி+ வளைந்த 3டி AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் உச்ச பிரகாச நிலை ஆதரவைக் கொண்டிருக்கிறது. 360Hz டச் மாதிரி ஆதரவு இதில் வழங்கப்பட்டுள்ளது. Infinix Zero Ultra ஆனது MediaTek Dimensity 920 SoC மூலம் இயக்கப்படுகிறது. விர்ச்சுவல் ரேம் நீட்டிப்பு ஆதரவும் இதில் வழங்கப்பட்டிருக்கிறது.
Infinix Zero Ultraவின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் கூடிய 200 எம்பி பிரதான கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. தொடர்ந்து 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ கால் ஆதரவுக்கு என 32 எம்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.
Infinix Zero Ultra 5G ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் ஸ்மார்ட்போன் மெமரியை 2 டிபி வரை விரிவாக்கம் செய்யலாம். இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 5ஜி, யூஎஸ்பி டைப்-சி போர்ட், ப்ளூடூத் வி5 மற்றும் வைஃபை6 உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு ஆதரவுக்கு என ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் 180 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போனை 12 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications