அம்பானிக்கு தூக்கம் போச்சு.. கற்பனைக்கு எட்டாத கம்மி விலையில் 395 நாள் பிளான்.. BSNL-ன் அடுத்த அதிரடி!
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் திட்டங்கள் மீது இந்திய மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தங்களிடம் பிஎஸ்என்எல் சிம் கார்டு இருக்கிறதோ இல்லையோ.. பிஎஸ்என்எல் திட்டங்களை ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ திட்டங்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தும், சமூக ஊடகங்களில் கேலி செய்தும் வருகின்றனர். ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஐடியாவின் திட்டங்கள் மீது அறிவிக்கப்பட்ட திடீர் விலை உயர்வு தான் முக்கிய காரணம் என்பதை நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் நோக்கத்தின் கீழ் பிஎஸ்என்எல் நிறுவனம் பல சுவாரசியமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக மான்சூன் டபுள் தமாகா ஆபர் (Monsoon Double Bonanza Offer) என்கிற லிமிடெட்-டைம் ஆபரை அறிவித்தது. அதன் பின்னர் ரூ.100 பட்ஜெட்டில் 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் பிஎஸ்என்எல்-ன் திட்டம் வைரல் ஆனது!

இதற்கிடையில்.. தினமும் வெறும் ரூ.6 செலவில், மாதத்திற்கு ரூ.200 செலவில்.. 395 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு பிஎஸ்என்எல் ரீசார்ஜ் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து உள்ளது. அது என்ன திட்டம்? அதன் விலை நிர்ணயம் என்ன? இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது ரூ.2,399 திட்டத்தை பற்றித்தான். தினமும் ரூ.6 அல்லது மாதத்திற்கு தோராயமாக ரூ.200 என்கிற செலவின் கீழ் கிடைக்கும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்களுக்குதினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா, தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் போன்ற நன்மைகள் அணுக கிடைக்கும்.
வழக்கமான நன்மைகளை தவிர்த்து ரூ.2,399 திட்டத்தின் கீழ் சில கூடுதல் நன்மைகளும் அணுக கிடைக்கிறது. இந்த திட்டமானது நாடு தழுவிய இலவச ரோமிங்கை வழங்குகிறது. மேலும் ஸிங் ம்யூசிக் (Zing Music), பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes),ஹார்டி கேம்ஸ் (Hardy Games), சேலஞ்சர் அரேனா கேம்ஸ் (Challenger Arena Games) மற்றும் கேம்ஆன் ஆஸ்ட்ரோடெல் (Gameon Astrotell) போன்ற வேல்யூ ஆடட் சேவைகளை வழங்குகிறது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய அனைத்துமே தங்களுடைய பல திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. இது மில்லியன் கணக்கான ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களை பாதித்துள்ளது. இதன் விளைவாக பலரும் மலிவான விலைகளில் திட்டங்களை வழங்கும் பிஎஸ்என்எல் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர்.
பிஎஸ்என்எல் மான்சூன் டபுள் தமாகா ஆபர் விவரங்கள்: போஸ்ட்பெய்ட் திட்டங்களின் மீதான விலை உயர்வால் அவதிப்படும் (ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களின்) பிராட்பேண்ட் கஸ்டமர்களை தன்வசம் ஈர்க்கும் நோக்கத்தின் கீழ் தான், பிஎஸ்என்எல் அதன் மான்சூன் டபுள் தமாகா ஆபரை அறிவித்துள்ளது.
இதன்கீழ் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் பேஸிக் திட்டமானது மாதத்திற்கு வெறும் ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இந்த திட்டத்தின் வழக்கமான விலை ரூ.499 ஆகும். மேலும் இந்த சலுகையின்கீழ் ஃபைபர் பேஸிக் பிளானிற்கான முதல் மாதம் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இருப்பினும் இந்த லிமிடெட்-டைம் ஆபர் எப்போது முடிவடையும் என்கிற தேதியை பிஎஸ்என்எல் அறிவிக்கவில்லை; இது எப்போது வேண்டுமானால் நிறுத்தப்படலாம்.
ரூ.100 க்கு 35 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் திட்டத்தின் விவரங்கள்: இது பிஎஸ்என்எல்-ன் ரூ.107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். மற்ற டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களை விட மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் இந்த திட்டத்தின் கீழ் 3ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். குறிப்பிட்ட டேட்டா வரம்பு தீர்ந்த பின்னர், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
டேட்டாவை தவிர்த்து, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 200 நிமிட இலவச வாய்ஸ் கால்கள் நன்மையும் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டத்தில் 35 நாட்களுக்கான பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் சேவையும் கிடைக்கும். இதன் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை ரிங்டோன் ஆக செட் செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








