ஐபோனை டெலிவரி செய்ய வந்த ஊழியரை கொலை செய்த இளைஞர்.! ஏன்? பகீர் சம்பவம்..
தற்போது ஆண்ட்ராய்டு போன்களை விட ஐபோன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான தொழில்நுட்ப வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் ஐபோன்கள் வெளிவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. அதேபோல் ஆப்பிள் நிறுவனம் இந்த பல அசத்தலான போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஐபோன் ஆர்டர்
இந்நிலையில் இளைஞர் ஒருவர் ஆன்லைனில் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பின்பு இதற்குப் பணம் செலுத்த முடியாததால் டெலிவரி கொடுக்க வந்த நபரை அந்த இளைஞர் கொலை செய்துள்ளார். தற்போது இந்த இளைஞரைக் கர்நாடக காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது கர்நாடாக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் 20 வயதான ஹேமந்த் தத். இந்த இளைஞர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் செகன்ட் ஹேண்ட் ஐபோன் மாடலை ஆர்டர் செய்துள்ளார். அந்த சமயம் இவரது தாயும், சகோதரியும் உறவினர் வீட்டிற்குச் சென்ற நிலையில் ஹேமந்த் தத் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
மேலும் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி அன்று இவர் ஆரடர் செய்த ஐபோனை ஹேமந்த் நாயக் என்ற டெலிவிரி பாய் டெலிவரி செய்ய எடுத்து வந்துள்ளார். குறிப்பாக தனக்கு வந்த பார்சலை வாங்கிக்கொண்ட அந்த இளைஞர் பணம் எடுத்த வருகிறேன் அதுவரை வீட்டிற்குள் இருங்கள் என்று டெலிவரி பாய் நாயக்கை வீட்டிற்குள் அழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தை வாங்க உள்ளே சென்றுள்ளார் அந்த டெலிவரி பாய். அதன்பின்பு சமையல் அறைக்குச் சென்ற சென்ற ஹேமந்த் கத்தியை எடுத்து வந்து டெலிவரி பாய் நாயக்கை குத்து கொலை செய்துள்ளார். பின்பு டெலிவரி பாய் நாயக் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி வீட்டு பாத்ரூமில் இரண்டு நாட்கள் வைத்துள்ளார்.
அதன்பின்பு உடல் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. உடனே அந்த இளைஞர் சாக்குப்பையில் இருந்த உடலை தனது வண்டியில் எடுத்துச் சென்று வீட்டின் அருகே உள்ளே ரயில்வே டிராக்கிற்கு கொண்டு சென்று அங்கு வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்திருக்கிறார்.

முன்பகை இல்லை
கொலையை செய்துவிட்டு தனது புதிய ஐபோன் உடன் கூலாக சுற்றுக்கொண்டிருந்த ஹேமந்த் தத் சிக்கியது எப்படியென்றால், காவல்துறையினரின் விசாரணையில் ஹேமந்த் நாயக்குக்கு எந்த ஒரு முன்பகை மற்றும் பிரச்சனை இல்லை என்று தெரியவந்துள்ளது. எனவே ஹேமந்த் நாயக் கடைசியாக யாருக்கு பொருளை டெலிவரி செய்தார் என்பதைத் தேடியுள்ளனர்.
அப்போது தான் ஹேமந்த் தத்தின் பெயர் வந்துள்ளது. பின்பு அவரிடம் சென்று விசாரிக்கையில் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். உடனே ஹேமந்த் தத்தை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் ஹேமந்த் தத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஐபோன் வாங்க போதுமான பணம் இல்லாததால் தான் நாயக்கை கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக நாயக்கின் உடலை எரிக்க பாட்டிலில் பெட்ரோல் வாங்கியது தெரிய வந்துள்ளது. பின்பு நாயக்கின் உடலை அவர் பைக்கில் வைத்து ரயில்வே டிராக்கிற்கு கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹேமந்த் தத்தை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications