Home
News

எலான் மஸ்கிடம் வேலை செய்பவர்கள் பின்பற்றும் 20 விதிகள்! கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

மஸ்க்கிற்கு ஒரு வலுவான வாசனை உணர்திறன் உள்ளதாம்.

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா போன்ற மாபெரும் நிறுவனங்களை எலான் மஸ்க் எவ்வாறு இயக்குகிறார் என்று நீங்கள் யோசித்து பார்த்தது உண்டா? மிகவும் கடினமான காரியமாக இருக்கும் என்றும் யூகிக்கிறீர்களா? கிடையாது!

எலான் மஸ்க்கின் 20 விதிகள்; நாய்கூட அவரிடம் வேலை செய்யாது!

உண்மையில், அவர் மிகவும் எளிமையான முறையில் அவரின் நிறுவனங்களை இயக்குகிறார் என்றும்,. அதற்கு காரணம், அவரின் எல்லா ஊழியர்களும் கையொப்பமிடும் சில ரகசிய ஒப்பந்தங்கள் தான் என்றும் நமக்கு தெரிய வந்தது. ஆனால் அந்த ரகசியமான "திரை"க்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி இதுநாள் வரை தெரிய வராமல் இருந்தது. ஆனால் இப்போது சில 'விசில் பிளேயர்களின்' வழியாக சில விதிமுறைகள் வெளியாகி உள்ளது. அதாவது எலான் மஸ்க் தனது ஊழியர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கும் மிகவும் கண்டிப்பான 20 விதிகள் பற்றிய விவரங்கள் தற்போது கசிந்து உள்ளது.

02. வலுவான வாசனை

02. வலுவான வாசனை

மஸ்க்கிற்கு ஒரு வலுவான வாசனை உணர்திறன் உள்ளதாம். அதனால் அவரின் அனைத்து ஊழியர்களும் எந்தவொரு வாசனை நீரையோ (கொலோன்) அல்லது வாசனை திரவத் த்தையோ பயன்படுத்த கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்களாம்.

03. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு என்று எந்த விதமான சிறப்பு தள்ளுபடியும் கிடையாதாம்!

03. நிறுவனத்தின் ஊழியர்களுக்கு என்று எந்த விதமான சிறப்பு தள்ளுபடியும் கிடையாதாம்!

பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு என்று சில தள்ளுபடிகளை அளிக்கின்றன என்றாலும் கூட, மஸ்க்கோ தள்ளுபடி என்பது ஒரு 'சரியான நடவடிக்கை' அல்ல என்று நம்புகிறார். ஆக கஸ்டமர்களுக்கு வழங்கும் அதே விலைகளை தான் எங்கும் பராமரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

04.மஞ்சள் நிறம் பிடிக்காது

04.மஞ்சள் நிறம் பிடிக்காது

எலானின் நிறுவனத்தில் வண்ணமயமான பாதுகாப்பு அடையாளங்கள் தடை செய்யப்பட்டுள்ளவாம். மஸ்க் பச்சை அல்லது மஞ்சள் நிறம் பிடிக்காது என்பதால், கிட்டத்தட்ட எல்லா பாதுகாப்பு அடையாளங்களும் சாம்பல் நிறத்தில் தான் இருக்குமாம்.

05.  முன்னாள் ஊழியர்

05. முன்னாள் ஊழியர்

சுகாதார மற்றும் பாதுகாப்பு திணைக்களத்தில் பணிபுரியும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் செய்தி ஊடகத்திடம் தெரிவித்ததாவது, ஒரு சாத்தியமான வெடிப்பு அபாயத்தை பற்றி நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயன்றபோது, சிக்கலை சரிசெய்வதால் உற்பத்தி நிறுத்தப்பட வேண்டும் ஆக அது தொடர்ந்து பின்பற்றப்படாது என்கிற பதில் கிடைத்ததாம்.

06. ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளலாம்

06. ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளலாம்

மஸ்க்கின் ஊழியர்கள் அவருடன் ஒருவழி பாதை முறையின் கீழ் மட்டும் தான் அவருடன் உரையாடல்களை நிகழ்த்த முடியுமாம். ஊழியர்களிடம் இருந்து அவர் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ளலாம் என்று நம்பினால் மட்டுமே அவர்கள் மஸ்க்கிடம் பேச முடியுமாம். கற்றல் முடிந்ததும், அவர் அடுத்த விடயத்திற்கு நகர்வாராம் அல்லது உரையாடலை வெறுமனே நிறுத்திவிடுவாராம்.

07. நிறுவனத்தின் பராமரிப்பு

07. நிறுவனத்தின் பராமரிப்பு

நிறுவனத்தின் பராமரிப்பு தடுப்பு கால அட்டவணைகள் பொதுவாக புறக்கணிக்கப்படுவதால், எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுவனத்தின் எந்த ஒரு ஆலை பகுதியின் உற்பத்தியும் ஒருபோதும் நிறுத்தப்பட்டது கிடையாதாம். அப்போது எலான் மஸ்கின் நிறுவனத்தின் பாதுகாப்பு என்பது கேள்வி குறிதானா என்று கேட்டால் - ஆம்!

08. கழிவறை கசிவு

08. கழிவறை கசிவு

கலிஃபோர்னியா டெஸ்லா தொழிற்சாலை முழுவதிலும் ஒரு கழிவறை கசிவு ஏற்பட்ட சம்பவம் ஒன்று நடந்தது. இருந்தாலும் கூட, பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த மறுபக்கம் ஊழியர்கள் - இந்த குழப்பத்தைத் தாண்டியும் - வேலை செய்யத் தள்ளப்பட்டார்களாம்.

09.ஏன் தொழிலாளர்கள் வீட்டிற்கு போக வேண்டும்?

09.ஏன் தொழிலாளர்கள் வீட்டிற்கு போக வேண்டும்?

ஒருமுறை மஸ்க் தனது மேலாளர்களில் ஒருவரிடம், 'ஏன் தொழிலாளர்கள் வீட்டிற்கு போக வேண்டும்?' என்று கேட்டாராம். இதில் இருந்து எலான் மஸ்கிற்கு நீங்கள் பணிபுரியும் போது உங்களுக்கு வார இறுதிகள் அல்லது விடுமுறைகள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

10.  2015 ஆம் ஆண்டில்

10. 2015 ஆம் ஆண்டில்

அலுவலக சந்திப்பை தவிர்த்துவிட்டு தனது மனைவியின் பிரசவத்திற்கு சென்ற ஒரு டெஸ்லா ஊழியரை திட்டிய காரணத்திற்காக எலான் மஸ்க் கடந்த 2015 ஆம் ஆண்டில் மிகவும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார்.

11. உற்பத்தி திறன்

11. உற்பத்தி திறன்

உற்பத்தி திறன் ஆனது எக்காரணம் கொண்டும் குறைய கூடாது. டெஸ்லா மாடல் 3 தயாரிப்பு இலக்குகளை சந்திக்க, தொழிற்சாலை ஊழியர்களின் சோர்வை நீக்க இலவசமாக ரெட் புல் ஆற்றல் பானங்கள் வழங்கப்பட்டதாம்.

12.மஸ்கிடம் கேள்விகளையோ அல்லது ஆட்சேபனைகளையோ

12.மஸ்கிடம் கேள்விகளையோ அல்லது ஆட்சேபனைகளையோ

மஸ்கிடம் கேள்விகளையோ அல்லது ஆட்சேபனைகளையோ அல்லது கவலைகளையோ எழுப்பக்கூடாது என்று மேலாளர்கள், ஊழியர்களுக்கு அறிவுறுத்துவார்களாம்.

13.மீட்டிங்

13.மீட்டிங்

மீட்டிங் (கூட்டங்கள்) படைப்பாற்றலின் முதன்மையான எதிரி என்று எலான் நம்புகிறார். அதனால் எலானிடம் வேலை செய்பவர்களுக்கு பெரிய அளவிலான அல்லது அடிக்கடி மீட்டிங்கள் இருக்காது.

14.தனது நிலைப்பாடு

14.தனது நிலைப்பாடு

எலான் மஸ்க் தனது நிலைப்பாடு எப்போதும் நடுநிலையானது என்று கூறுவாராம். ஆக நிறுவனத்திற்குள் ஏதேனும் தொழிற்சங்கத்தை உருவாக்க முயற்சி செய்தால் அவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்களாம்.

15. எலானிற்கு எதிராக எழுச்சிகள் கூடாது

15. எலானிற்கு எதிராக எழுச்சிகள் கூடாது

ஒருமுறை அமெரிக்க ஆட்டோமொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் கொடுப்பதை விட குறைவான சம்பளம் தான் இங்கு கொடுக்கப்படுகிறது என்கிற எழுச்சி கிளம்பியதாம், விளைவு என்ன தெரியுமா - கூடுதல் மணி நேரம் வேலை செய்ய ஊழியர்கள் பணிக்கப்பட்டார்களாம்!

16.பணியிட காயங்கள்

16.பணியிட காயங்கள்

டெஸ்லா நிறுவனத்தில் ஏற்படும் காய விகிதத்தை குறைக்கும் நோக்கத்தின் கீழ் பல எண்ணிக்கையிலான பணியிட காயங்கள் குறித்த பதிவுகள் தடுக்கப்படுகிறது என்கிற ஒரு தகவல் நிலவுகிறது.

17. நியாயம் பற்றி யோசிக்க வேண்டும்

17. நியாயம் பற்றி யோசிக்க வேண்டும்

2013 ஆம் ஆண்டில் எலான் வழங்கிய ஒரு உரையில் "'மிகவும் அடிப்படை உண்மைக்கு தான் முக்கியத்துவம் வழங்க வேண்டும், அதன் பின் தான் நியாயம் பற்றி யோசிக்க வேண்டும்" என்று கூறினார். இதை தான் அவரின் அனைத்து ஊழியர்களும் பின்பற்ற வேண்டுமாம்.

18. முரண்பாட்டை பொறுத்துக் கொள்ள மாட்டாராம்

18. முரண்பாட்டை பொறுத்துக் கொள்ள மாட்டாராம்

எலான் தனது ஊழியர்களை நல்ல விதமாக நடத்துகிறாரோ இல்லையோ, ஆனால் அவர் தனது சக ஊழியர்களிக்கு இடையே நிலவும் முரண்பாட்டை பொறுத்துக் கொள்ள மாட்டாராம்.

19.அதிகாரம்

19.அதிகாரம்

கட்டளை இடுவதற்க்கான அதிகாரம் யாருக்கும் கிடையாதாம். எந்த விதமான அதிகாரத்துவம் பற்றியும் கவலைப்படாமல் அவர் அவரின் வேலைகளை பார்க்க வேண்டுமாம்.

20.முன்னோக்கி செல்லும் வழிகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்

20.முன்னோக்கி செல்லும் வழிகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும்

ஒருவேளை எலானிடம் இருந்து எந்த உத்தரவுகளும் வரவில்லை என்றால், ஊழியர்கள் நிறுவனத்தின் நடைமுறைகளை புறக்கணித்து விட்டு, முன்னோக்கி செல்லும் வழிகளை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும் என்று எலான் எதிர்பார்க்கிறாராம்.

21. ஜார்கன்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா?

21. ஜார்கன்ஸ் என்றால் என்னவென்று தெரியுமா?

மற்றவர்கள் புரிந்து கொள்ள கடினமாக இருக்கும் ஒரு தொழில் அல்லது குழுவால் பயன்படுத்தப்படும் சிறப்பு சொற்கள் ஆகும். அப்படியான ஜார்கன்கள் பொருத்தமற்றதாகவும், குழப்பம் அடைய செய்யவதாகவும் இருப்பதால், எலான் மஸ்க் மூலம் அவைகள் "கிட்டத்ட்ட" தடை செய்யப்பட்டு உள்ளதாம். மீறி பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அந்த ஜார்கனை அதற்கு முன்னர் எலான் பயன்படுத்தி இருக்க வேண்டும் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட வேண்டுமாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Rules Elon Musk Has Set For His Employees At Tesla : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X