Home
News

அடிச்சான் பாரு Amazon.. 5 போன்கள் மீது திடீர் ஆபர்.. அதுவும் அந்தந்த பிரிவின் பெஸ்ட் போன்கள் மீது!

ரூ.10000 - ரூ.15000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற திட்டம் உங்களிடம் இருந்தால்.. அதை செய்வதற்கான சரியான நேரம் இதுதான்! ஏனென்றால், பிரபல இகாமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா, கீழ்வரும் 5 ஸ்மார்ட்போன்கள் மீது "திடீர்" ஆபர்களை அறிவித்துள்ளது!

திடீர் ஆபர் என்றதுமே விலைபோகாத மாடல்கள் மீது தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். குறைந்தபட்சம் 20% தள்ளுபடியை பெற்றுள்ள இந்த 5 போன்களுமே அந்தந்த விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களாக திகழ்கின்றன. ஆக எப்படி பார்த்தாலும் வாங்குபவர்களுக்கு லாபம் தான்!

அடிச்சான் பாரு Amazon.. 5 போன்கள் மீது திடீர் ஆபர்.. இதோ லிஸ்ட்!

01. ஒப்போ ஏ31 (Oppo A31)

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனானது 22% தள்ளுபடிக்கு பிறகு, அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.12,490 க்கு வாங்க கிடைக்கிறது. இதுவொரு நல்ல கேமரா ஸ்மார்ட்போனாகும். ஏனென்றால் இதில் 12எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உள்ளது.

மேலும் இது போர்ட்ரெய்ட் பொக்கே (Portrait bokeh), மேக்ரோ லென்ஸ் (Macro lens), கலர் மோட், ஏஐ பியூட்டிஃபிகேஷன் (AI Beautification) போன்ற சில நல்ல கேமரா அம்சங்களையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் 8எம்பி சென்சார் உள்ளது.

02. விவோ ஒய்16 (Vivo Y16)

விவோ ஒய்16 ஸ்மார்ட்போனானது 29% தள்ளுபடிக்கு பிறகு ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது ரூ.10கே பட்ஜெட்டின் கீழ் கிடைக்கும் ஒரு நல்ல ஓவர்-ஆல் போனாகும். இது 6.51 இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 5எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் சிப்செட், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது.

03. நோக்கியா ஜி21 (Nokia G21)

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது 21% தள்ளுபடிக்கு பிறகு அமேசான் இந்தியா வழியாக ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் ஒரு நல்ல நோக்கியா ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்று நினைக்கும் எவருமே இந்த ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை 3 வருட சாஃப்ட்வேர் அப்டேட்டிற்கான வாக்குறுதி, 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 3 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் 5050mAh பேட்டரி மற்றும் 50எம்பி ஏஐ ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.

04. ரெட்மி நோட் 11 (Redmi Note 11)

ரெட்மி 11 ஸ்மார்ட்போனானது 28% தள்ளுபடிக்கு பிறகு ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதுவும் ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் ஸ்மார்ட்போனாகும். இது 6.43-இன்ச் எஃப்எச்டி+ டிஸ்பிளே, 50எம்பி குவாட் ரியர் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் 680 ப்ராசஸர் போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

05. சாம்சங் கேலக்ஸி எம்13 (Samsung Galaxy M13)

சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போனானது 20% தள்ளுபடிக்கு பிறகு அமேசான் இந்தியா வழியாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 50எம்பி + 5எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, ஆக்டா கோர் ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான ஒன்யுஐ கோர் 4 போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது!

Best Mobiles in India

English summary
20 Percent Sudden Discount On These 5 Budget Price Smartphones On Amazon Check List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X