2 வயது சிறுவன் பார்த்த வேலை; 47 ஆண்டுகள் 'லாக்' ஆன ஐபோன்.!

சீனாவின் ஷாங்காயில் உள்ள இரண்டு வயது சிறுவன், தனது தாயின் ஐபோனை "தான்தோன்றி தனமாக" பாஸ்வேர்ட்களை உள்ளிட்டதின் விளைவாக அக்கருவி 47 ஆண்டுகளுக்கு 'லாக்' ஆகியுள்ளது.

|

ஆப்பிள் கருவிகளில் ஒவ்வொரு முறையும் தவறான பாஸ்வேர்டை உள்ளிடும் போது அது சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும் என்று குறிப்பிட்ட கால அவகாசத்தை வழங்கும்.

இது ஸ்மார்ட்போனை திருடி, அதன் பாஸ்வேர்ட்டை பிரேக் செய்ய நினைப்பவர்களிடம் இருந்து கருவியை காக்கும் முனைப்பின்கீழ் உருவாக்கம் பெற்றதொரு அம்சமாகும். இந்த அம்சமானது ஒரு சொந்தகாருக்கே எதிராக திரும்பியுள்ளது, அதுவும் மிகவும் வேடிக்கையான மற்றும் நியாமான வழியில்.

தான்தோன்றி தனமாக..

தான்தோன்றி தனமாக..

சீனாவின் ஷாங்காயில் உள்ள இரண்டு வயது சிறுவன், தனது தாயின் ஐபோனை "தான்தோன்றி தனமாக" பாஸ்வேர்ட்களை உள்ளிட்டதின் விளைவாக அக்கருவி 47 ஆண்டுகளுக்கு 'லாக்' ஆகியுள்ளது.

25 மில்லியன் நிமிடங்கள்.!

25 மில்லியன் நிமிடங்கள்.!

லு (Lu) என்ற குடும்ப பெயரால் அடையாளம் காணப்படும் அந்த சீனப்பெண், வீட்டிற்குத் திரும்பிய பின்னர் அவரின் ஐபோன் ஆனது தவறான பாஸ்வேர்ட்களை பல முறை உள்ளிட்டத்தின் விளைவாக 25 மில்லியன் நிமிடங்கள் 'லாக்' ஆகியுள்ளதை கண்டறிந்து அதிர்ந்துள்ளார்.

ஆப்பிள் கடையை அணுகியுள்ளார்.!

ஆப்பிள் கடையை அணுகியுள்ளார்.!

பின்னர் "இந்த வேலை"யை பார்த்தது அவரின் 2 வயது குழந்தை என்பதை கண்டறிந்து "உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை" என்ற நிலைக்கு தள்ளப்பட்டுளார். பின்னர் ஷாங்காயில் உள்ள ஒரு ஆப்பிள் கடையை அணுகியுள்ளார்.

பேக்டரி ரீசெட்.!

பேக்டரி ரீசெட்.!

அங்கிருந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர், ஒன்று மீண்டும் பாஸ்வேர்ட்டை உள்ளிட்டு கருவியை திறக்க சில ஆண்டுகள் காத்திருங்கள் அல்லது அனைத்து கோப்புகளையும், உள்ளக்கங்களையும் துடைத்தெறிய (பேக்டரி ரீசெட் ) வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

80 வருடங்களுக்கும் மேலாக லாக்

80 வருடங்களுக்கும் மேலாக லாக்

இதனை தொடர்ந்து 47 வருடங்கள் வரை என்னால் காத்திருக்க முடியாது என்ற தேர்வை லு எடுத்துள்ளார். இதற்கு முன்னாள், இதே வழிமுறையின் கீழ் நடந்தவொரு சம்பவத்தில் ஒரு ஐபோன் ஆனது 80 வருடங்களுக்கும் மேலாக லாக் ஆனதை ஷாங்காய் ஆப்பிள் கடையின் தொழில்நுட்ப வல்லுநர் நினைந்து கூறுகிறார்.

ஹேக்கிங் செய்வதை தடுக்கும்.

ஹேக்கிங் செய்வதை தடுக்கும்.

அனைத்து ஆப்பிள் கருவிகளுமே, உள்ளமைக்கப்பட்ட லாக்-அவுட் அம்சத்தினை கொண்டுள்ளன. இந்த குறிப்பிட்ட அம்சமானது கருவியை மென்பொருள் கொண்டே அல்லது இயந்திர உதவியுடனோ ஹேக்கிங் செய்வதை தடுக்கும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
10 தவறான முயற்சிகளுக்குப் பிறகு

10 தவறான முயற்சிகளுக்குப் பிறகு

ஒரு ஐஓஎஸ் சாதனமானது ஆறு முறை தவறான பின் முயற்சிகளுக்குப் பிறகு "முடக்கப்பட்டும்" அம்சமும் கொண்டுள்ளது. ஒருபடி மேல் சென்று 10 தவறான முயற்சிகளுக்குப் பிறகு கருவியில் உள்ள டேட்டாக்களை முழுமையாக நீக்கும் ஒரு அம்சம் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
2-Year-Old Locked iPhone For 47 Years By Entering Wrong Passcode. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X