Home
News

அலெர்ட்.. HDFC வங்கியின் 2 UPI சேவைகள் நிறுத்தம்.. ஆனால் 2 நாட்களுக்கு மட்டுமே.. எப்போது? என்னென்ன சேவைகள்?

நவம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதி ஆகிய 2 நாட்களுக்கும், குறிப்பிட்ட 2 யுபிஐ சேவைகள் (UPI Services) ஆனது வாடிக்கையாளர்களுக்கு அணுக கிடைக்காது என்று எச்டிஎஃப்சி வங்கி (HDFC Bank) அறிவித்துள்ளது. அதென்ன சேவைகள்? மேற்குறிப்பிட்ட 2 நாட்களிலும் சரியாக எத்தனை மணி தொடங்கி எப்போது வரை யுபிஐ சேவைகள் நிறுத்தம் செய்யப்படவுள்ளது? இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதோ விவரங்கள்:

எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் 2 நாட்களுக்கு நிறுத்தப்பட என்ன காரணம்? எச்டிஎப்சி வங்கியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின்படி, அத்தியாவசிய சிஸ்டம் பராமரிப்பு (Essential System Maintenance) காரணமாக, 2024 நவம்பர் மாதத்தில் 2 நாட்களுக்கு, அதன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ) சேவை கிடைக்காது.

HDFC வங்கியின் 2 UPI சேவைகள் நிறுத்தம்.. ஆனால் 2 நாட்களுக்கு மட்டுமே!

எந்தெந்த நாட்களில், எத்தனை மணிநேரங்கள் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் அணுக கிடைக்காது? முன்னரே குறிப்பிட்டபடி நவம்பர் 5 மற்றும் 23 ஆம் தேதிகளில் எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் அணுக கிடைக்காது. நவம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை (மொத்தம் 2 மணிநேரங்கள்) யுபிஐ சேவை க்ளோஸ் செய்யப்படும்.

பின்னர் நவம்பர் 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரையிலாக மொத்தம் 3 மணி நேரங்களுக்கு எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகள் க்ளோஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சிரமத்தை தவிர்க்க, இவ்விரு தினங்கள் மற்றும் நேரங்களின் போது எச்டிஎப்சி வங்கியின் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளபட்டுள்ளது.

நவ.5 மற்றும் 23 ஆம் தேதிகளில் எச்டிஎஃப்சி-யின் எந்தெந்த யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும்? முதலாவதாக, எச்டிஎஃப்சி வங்கியின் நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குகள் (HDFC Bank Current & Savings Account) மற்றும் ரூபே ரெடிட் கார்டில் ( RuPay Credit Card) நிதி மற்றும் நிதி அல்லாத யுபிஐ பரிவர்த்தனைகள் (Financial and non-financial UPI transactions) நிறுத்தப்படும்.

இரண்டாவதாக, எச்டிஎப்சி வங்கியின்யுபிஐ ஹேண்டிலை (HDFC Bank UPI Handle) பயன்படுத்தும் அனைத்து வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும், எச்டிஎப்சி மொபைல் பேங்கிங் ஆப் (HDFC Mobile Banking App), கூகுள் பே (Google Pay), வாட்ஸ்அப் பே (WhatsApp Pay), பேடிஎம் (Paytm), ஸ்ரீராம் பைனான்ஸ் (Shriram Finance), மொபிகுக்விக் (Mobikwik) மற்றும் கிரெடிட்.பிஇ (Kredit.Pe) ஆகியவற்றில் நிதி மற்றும் நிதி அல்லாத யுபிஐ பரிவர்த்தனைகள் நிறுத்தப்படும்.

எச்டிஎப்சி வங்கி இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள யுபிஐ தொடர்பான சில முக்கியமான கேள்விகளும் , அதற்கான பதில்களும்: UPI என்றால் என்ன? யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது ஒரு தனிப்பட்ட யுபிஐ ஐடியை பயன்படுத்தி பணம் செலுத்த / பெற அனுமதிக்கும், ஸ்மார்ட்போன் மூலம் செயல்படுத்தப்பட்ட நிதி பரிமாற்றமாகும்.

என்னுடைய யுபிஐ பரிவர்த்தனைகளின் பட்டியலை எங்கே பார்க்கலாம்? 'யுபிஐ பேமெண்ட்ஸ்' என்பதன் கீழ், 'டிரான்ஸாக்ஷன் ஹிஸ்டரி' என்கிற டேப் இருக்கும். அதன்கீழ், உங்களின் கடந்த கா யுபிஐ பரிவர்த்தனைகளின் பட்டியலை பார்க்கலாம். இது நெட் பேங்கிங் மற்றும் பேங்க் ஸ்டேட்மென்ட்டிலும் பிரதிபலிக்கும்.

யுபிஐ-ஐ பயன்படுத்த யார் தகுதியானவர்? ஆக்டிவ் ஆக உள்ள வங்கி அக்கவுண்ட், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் ஆக்டிவ் ஆக உள்ள டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு உள்ள எவருமே யுபிஐ சேவையை பயன்படுத்தலாம். தவறுதலாக எச்டிஎப்சி மொபைல் பேங்கிங்கை டெலிட் அல்லது அன்இன்ஸ்டால் செய்தால், அதில் மீண்டும் ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா? நீங்கள் எச்டிஎப்சி மொபைல் பேங்கிங் ஆப்பை நீக்கியிருந்தால், உங்களுடைய யுபிஐ ஐடி மீண்டும் பெற, டிவைஸ் பைண்டிங் (device-binding) செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
2 UPI Services From HDFC Bank Not Available For Customers on November 5 and 23 on this Time
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X