டிவிஸ்டு.. 2 மாசம் FREE.. ஆனா அதுல 2 சிக்கல் இருக்கு.. Jio-வின் புதிய ரூ.234 திட்டத்தில் உள்குத்து.. உஷார்!
கடந்த 2016 ஆம் ஆண்டில் ஜியோ 4ஜி (Jio 4G) அறிமுகமான போது, இந்த சேவையின் கீழ் அடுத்த சில மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக டேட்டா மற்றும் வாய்ஸ் கால்கள் கிடைக்கும் என்று கூறபட்டதின் விளைவாகவே.. ஜியோ 4ஜி சேவைகளானது இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்தது.
நினைவூட்டும் வண்ணம் ஜியோ 4ஜி சேவையானது வணிக ரீதியாக செப்டம்பர் 5, 2016 அன்று அறிமுகமானது. இதன்கீழ் டிசம்பர் 31, 2016 வரை இலவச டேட்டா மற்றும் வாய்ஸ் சேவைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அது மார்ச் 31, 2017 வரை நீட்டிக்கப்பட்டது.

ஒட்டுமொத்தமாக "இலவசம்" என்கிற ஒற்றை வார்த்தையால் ஒரு மிகப்பெரிய சாம்பிராஜ்யத்தை அமைத்த பெருமை முகேஷ் அம்பானிக்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கும் உள்ளது. அதனொரு நீட்சியாக, ஜியோ நிறுவனமானது அதன் ஜியோபாரத் 4ஜி போன் பயனர்களுக்கான புதிய இலவச சலுகை ஒன்றை சமீபத்தில் அறிவித்திருந்தது.
ரூ.999 க்கு விற்கப்படும் ஜியோபாரத் 4ஜி போனிற்காக ரூ.234 மதிப்பிலான புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வா டிக்கையாளர்களால் "2 மாத இலவச திட்டத்தை கோர முடியும்" என்கிற மேலோட்டமான தகவல் பரவுகிறது. அது உண்மைதான் ஆனால் அதில் 2 சிக்கல்கள் உள்ளன!

முதல் சிக்கல்: புதிய ஜியோ சிம் கார்டு அல்லது மொபைல் நம்பர் போர்டிங் செய்யப்பட்ட ஜியோ சிம் கார்டு அல்லது ஏற்கனவே உள்ள ஜியோ சிம் கார்டில் இயங்கும் ஜியோபாரத் 4ஜி போனில் மட்டுமே.. ரூ.234 திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 2 மாத இலவச திட்டத்தை கோர முடியும்.
இரண்டாவது சிக்கல்: மேற்கூறியபடி ஜியோ சிம் கார்டை கொண்டிருப்பதோடு சேர்த்து.. ஏப்ரல் 1, 2024 அன்று அல்லது அதற்கு பிறகு விற்கப்படும் ஜியோபாரத் 4ஜி போன்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும். ஒட்டுமொத்தமாக ஜியோ வழங்கும் இந்த 2 மாத இலவச சலுகையை பெற உங்களிடம் புத்தம் புதிய ஜியோபாரத் 4ஜி போனும் இருக்க வேண்டும்.

அதாவது இந்த சலுகையில் ஆர்வமுள்ள பயனர்கள் முதலில் ஒரு புதிய ஜியோபாரத் 4ஜி போனை வாங்க வேண்டும். அதன் பிறகு புதிய ஜியோ சிம் அல்லது ஏற்கனவே உள்ள ஜியோ சிம் கார்டை அதில் பொருத்த வேண்டும் (எம்என்பி செயல்முறை மூலம் ஜியோ சேவைக்கு மாறிய வாடிக்கையாளர்களுக்கும் இந்த சலுகை பொருந்தும்).
ஜியோ சிம் கார்டை புதிய ஜியோபாரத் 4ஜி போனில் பொருத்தியதும், ரூ.234 திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். இந்த திட்டம் மொத்தம் 56 நாட்கள் என்கிற வேலிடிட்டியை வழங்கும். இதன் கீழ் உங்களுக்கு தினமும் 0.5 ஜிபி டேட்டா என்கிற விகிதத்தில் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 28 நாட்களுக்கு 300 இலவச எஸ்எம்எஸ்களும் கிடைக்கும்.
மேற்கண்ட தகுதிகளுடன் ரூ.234-ஐ ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, இதே திட்டம் கூடுதலாக 2 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த இலவச சலுகை உடனே கிடைக்காது. ரூ.234-ஐ ரீசார்ஜ் செய்த 15 நாட்களுக்கு பிறகு (குறிப்பிட்ட வாடிக்கையாளருக்காண தகுதிகள் சோதனை செய்யப்பட்ட பின்னர்) தான் இந்த நன்மை கிரெடிட் செய்யப்படும்.
மேலும் ரூ.234 திட்டமானது ஜியோபாரத் போன்களில் மட்டுமே வேலை செய்யும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும். மேலும் இந்த இலவச சலுகையை.. ஒருவரால் ஒருமுறை மட்டுமே அணுக முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது ஒருமுறை ரீசார்ஜ் செய்து 2 மாதங்களுக்கு இலவச சலுகையை பெற்ற பின்னர், இரண்டாவது முறையாக அதை செய்யமுடியாது.


Click it and Unblock the Notifications








