Home
News

2 புதிய Jio ரீசார்ஜ் அறிமுகம்..ரூ.100-க்கு 100GB, ரூ.250-க்கு 500GB.. ஆனா? அவசரப்பட்டு ரீசார்ஜ் செஞ்சிடாதீங்க!

முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது ரூ.101 மற்றும் ரூ,251 மதிப்புள்ள 2 புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. ஜியோவின் இந்த திட்டங்கள் முறையே 100ஜிபி மற்றும் 500ஜிபி டேட்டாவை வழங்குகின்றன.

மேலோட்டமாக பார்ப்பதற்கு இவ்விரண்டும் மிகவும் அட்டகாசமான திட்டங்களாக தெரியலாம். ஆனால் இவ்விரு திட்டங்களையும் ரீசார்ஜ் செய்வதற்கு முன்னர் ஒவ்வொரு ஜியோ கஸ்டமரும் தெரிந்துகொள்ள வேண்டிய 2 முக்கியமான விஷயங்கள் உள்ளன. அதென்ன விஷயங்கள்? ஜியோவின் இந்த புதிய திட்டங்களில் அப்படி என்ன குறை உள்ளது? இதோ விவரங்கள்:

2 புதிய Jio ரீசார்ஜ் அறிமுகம்.. அவசரப்பட்டு ரீசார்ஜ் செஞ்சிடாதீங்க!

ஜியோவின் புதிய ரூ.101 மற்றும் ரூ.251 திட்டங்கள் ஜியோ ஏர்ஃபைபர் சேவையின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ ஏர்ஃபைபர் என்பது 5ஜி-பவர்டு வயர்லெஸ் இன்டர்நெட் சேவை ஆகும். இதன்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.101 மற்றும் ரூ.251 ஆகிய இரண்டுமே ஆட்-ஆன் திட்டங்கள் ஆகும். அதாவது ப்ரீபெயிட் திட்டங்களில் உள்ள டேட்டா ஒன்லி வவுச்சர்களை போலவே கூடுதல் டேட்டாவை மட்டுமே வழங்கும் திட்டங்களாகும்.

கவனிக்க வேண்டிய முதல் விஷயம் - டேட்டா ரோல்ஓவர் கிடையாது! ரூ.101 மற்றும் ரூ.251 ஆகிய இரண்டு திட்டங்களின்கீழ் கிடைக்கும் கூடுதல் டேட்டாக்களை, உங்களுடைய மாதாந்திர டேட்டா லிமிட் தீர்ந்த பின்னரே பயன்படுத்த முடியும். மேலும் இந்த இரண்டு பூஸ்டர் திட்டங்களின் வேலிடிட்டியானது உங்களுடைய பேஸிக் திட்டத்துடன் ஒற்றுப்போகும்.

2 புதிய Jio ரீசார்ஜ் அறிமுகம்.. அவசரப்பட்டு ரீசார்ஜ் செஞ்சிடாதீங்க!

அதாவது உங்களுடைய ஏர்ஃபைபர் திட்டம் ஒவ்வொரு மாதமும் சரியாக 1 ஆம் தேதி காலாவதியாகி விடும் என்றால், ரூ.101 அல்லது ரூ.251 பூஸ்டர் பேக்கும் கூட அதே தேதியில் காலாவதியாகும். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் உங்களுக்கு டேட்டா ரோல்ஓவர் கிடையாது. அதாவது இந்த மாதம் பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்திற்கு நகர்த்த முடியாது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு வெறும் 10 ஜிபி டேட்டா மட்டுமே தேவைப்படும் என்றாலும் கூட, நீங்கள் ரூ.101-ஐ ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இரண்டு நாட்களுக்கு பிறகு மீதமுள்ள 90ஜிபி டேட்டா காலாவதி ஆகிவிடும். நினைவூட்டும் வண்னம் ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.599 ஆகும்; இது 30எம்பிபிஎஸ் ஸ்பீடின் கீழ் 1000ஜிபி டேட்டாவை வழங்கிறது.

2 புதிய Jio ரீசார்ஜ் அறிமுகம்.. அவசரப்பட்டு ரீசார்ஜ் செஞ்சிடாதீங்க!

கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம் - வெறும் 1000ஜிபி டேட்டா தான்! மேலே குறிப்பிட்டது போல் ஜியோ ஏர்ஃபைபரின் ரூ.599 மட்டுமல்ல ரூ.899, ரூ.1199, ரூ.1499. ரூ.2499 மற்றும் ரூ.3999 ஆகிய அனைத்துமே 1000ஜிபி என்கிற டேட்டா லிமிட் உடன் வருகின்றன. ஆனால் இண்டர்நெட் ஸ்பீட் மட்டும் விலைக்கு ஏற்றபடி 30எம்பிபிஎஸ்-ல் இருந்து 1ஜிம்பிபிஎஸ் வரை அதிகரிக்கும்.

இதற்கு பேசாமல்.. அதே ரூ.599 க்கு அதே 30எம்பிபிஎஸ் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவை வழங்கும் ஜியோஃபைபர் திட்டத்தை தேர்வு செய்யலாமே? என்கிற கேள்வி இங்கே எழுந்தால்.. அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. அந்த கேள்வி மேலோங்க கூடாது என்பதற்காகவே.. அதாவது வெறும் ரூ.101 க்கு 100ஜிபி-ஐயும், வெறும் ரூ.251-க்கு 500ஜிபி-ஐயும் வழங்கும் திட்டங்கள் அறிமுகம் செய்யபட்டுள்ளன.

ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் ரூ.401 ஏற்கனவே ஒரு டேட்டா பூஸ்டர் பேக் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது பேஸிக் திட்டத்தின் கீழ் அணுக கிடைக்கும் டேட்டா நன்மையுடன் சேர்த்து கூடுதலாக 1டிபி ஹைஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது.

இது சற்றே விலை அதிகமாக இருப்பதால், பலரும் இதை பயன்படுத்தவில்லை. இந்நிலைப்பாட்டில் தன ரூ.101 மற்றும் ரூ.251 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்படையாகவே இது பூசிமொழுகும் ஒரு வேலையாகும். ஏனென்றால் ஜியோ ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மிகவும் மலிவான டேட்டா பூஸ்டர் பேக்கின் விலை ரூ.15 ஆகும். இதன் கீழ் கிடைக்கும் டேட்டா எவ்வளவு தெரியுமா? - வெறும் 1 ஜிபி!

More from GizBot

Best Mobiles in India

English summary
2 Things Every Jio Airfiber Users Need To Know Before Recharging New Rs 101 Rs 251 Data Booster Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X