Home
News

2024 Election Result மற்றும் Vote Counting அப்டேட்.. உண்மை நிலவரம் என்ன? புட்டுப்புட்டு வைக்கும் Voter ஆப்!

2024 மக்களவைத் தேர்தல் (Lok Sabha Election 2024) தொடர்பான கருத்து கணிப்புகள் எல்லாமே இன்றோடு ஒரு முடிவுக்கு வரவுள்ளன. ஏனென்றால் மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று (அதாவது ஜூன் 4 ஆம் தேதி) அறிவிக்கப்பட உள்ளன. ஏழு கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்தல், நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்றது. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவைக்கான வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதியோடு நிறைவடைந்தது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

ஒருவேளை நீங்கள் 2024 மக்களவைத் தேர்தல் முடிவுகளை (Lok Sabha Election Result) நேரலையில் பார்க்க விரும்பினால்.. தேர்தல் தொடர்பான எல்லா அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள விரும்பினால், குறிப்பாக அதை ஸ்மார்ட்போன் வழியாக செய்ய விரும்பினால்.. உங்களுக்கு 2 எளிமையான வழிகள் உள்ளன.

2024 Election Result: புட்டுப்புட்டு வைக்கும் Voter ஆப்!

முதலாவதாக - தேர்தல் முடிவுகளை ஆர்வத்துடன் பின்பற்ற விரும்புபவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின்(Election Commission of India) அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://results.eci.gov.in/) அணுகலாம். அங்கே லைவ் கவுன்டிங் ட்ரென்ட்ஸ் மற்றும் ரிசல்ட்கள் (Live counting trends and results) தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

இரண்டாவதாக - ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டு (Android) ஆகிய இரண்டு ஆப்ரேட்டிங் சிஸ்டம்களிலும் அணுக கிடைக்கும் வோட்டர் ஹெல்ப்லைன் ஆப்பை (Voter Helpline App) டவுன்லோட் செய்யலாம். இந்த ஆப் ஆனது 2024 மக்களவை தேர்தல் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்களுக்கான உடனடி அணுகல்களை உங்களுக்கு வழங்கும். இது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆப் ஆகும்.

நாட்டில் சுறுசுறுப்பான ஜனநாயக குடிமக்களை உருவாக்குவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் நோக்கத்தின் கீழ் இந்த ஆப்பை இந்திய தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கும் சேவை மற்றும் தகவல் விநியோகத்தை வழங்கு வேண்டும் என்கிற நோக்கத்தை கொண்டுள்ள இந்த ஆப் தேர்தல் முடிவுகள் குறித்த தகவல்களை மட்டுமின்றி, இந்திய வாக்காளர்களுக்கு பின்வரும் வசதிகளையும் வழங்குகிறது:

1. வாக்காளர் தேடல் (Electoral Search)
2. புதிய வாக்காளர் பதிவுக்கான ஆன்லைன் படிவங்களை சமர்ப்பித்தல் (Submission of online forms for New Voter Registration), வேறு தொகுதிக்கு மாறுதல் (Shifting to a different constituency), வெளிநாட்டு வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் நீக்கம் அல்லது ஆட்சேபனை, உள்ளீடுகள் திருத்தம் மற்றும் சட்டசபைக்குள் இடமாற்றம் போன்ற வேலைகளை செய்ய உதவும்.

3. தேர்தல் சேவைகள் தொடர்பான புகார்களைப் பதிவுசெய்து, அதன் தீர்வு நிலையைக் கண்காணிக்க உதவும் (Register Complaints related to Electoral Services and track its disposal status).
4. வாக்காளர், தேர்தல்கள், இவிஎம் மற்றும் முடிவுகள் பற்றிய கேள்வி-பதில்கள் (FAQ on Voter, Elections, EVM, & Results)
5. வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கான சேவை & ஆதாரங்கள் (Service & Resources for Voters & Electoral Officers)

6. உங்கள் பகுதியில் தேர்தல் அட்டவணையை கண்டறிய உதவும் (Find the Election Schedule in your area)
7. அனைத்து வேட்பாளர்களையும், அவர்களின் சுயவிவரம், வருமான அறிக்கை, சொத்துக்கள், குற்ற வழக்குகள் ஆகியவற்றைக் கண்டறிய உதவும்.
8. வாக்குச்சாவடி அதிகாரிகளை (BLO, ERO, DEO மற்றும் CEO) கண்டுபிடித்து அவர்களை அழைக்க உதவும்

இதுதவிர்த்து ஒன்இந்தியா தமிழ் வலைத்தளம் மற்றும் சமூக ஊடக தளங்கள் உட்பட பல முக்கிய செய்தி சேனல்கள் தங்கள் யூட்யூப் சேனல்கள் மற்றும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் 2024 மக்களவை தேர்தல் முடிவுகளை நேரடியாக கவர் செய்யும். இந்த கவரேஜ் ஜூன் 3 அதிகாலை முதலே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்கீழும் நீங்கள் ரியல்டைம் அப்டேட்களை பெறலாம்.

Best Mobiles in India

English summary
2 Simple Online Ways To Watch Lok Sabha Election Vote Counting and 2024 Election Results on June 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X